சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க

  • by

அன்றாடம் தினம் பயன்படுத்தும்  சீப் என்பது முக்கியமானது ஆகும்.   இது அனைவருக்கும் அவசியமான ஒரு தேவையாக உள்ளது  சீப் என்பது கேசப் பராமரிப்புக்கு முக்கியமாது ஆகும்.  

சீப்பு:

 நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு அதனை நாம் பயன்படுத்தும் விதத்தில் உள்ளது. சீப்பை நாம் பராமரிப்பது அவசியம் ஆகும்.   சீப்பு தினமும் பயன்படுவதால் தலை முடியில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு போன்றவை சீப்புகளில் ஒட்டி பார்க்க படுமோசமாக இருக்கும். இதன் மீது  தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்வது அவசியம் ஆகும். 

சீப்பு பராமரிப்பு: 

சீப்பு பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் பேண், பொடுகு தொல்லையில் இருந்து நம்மை காக்கும். இது சட்டென கீளின் செய்வது எளிதாகும். சீப்பு சிக்கில் இருந்து முடியை காக்கும். அழுக்கில்லாத சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் பயன்படுத்த மிகவும் சுகமான உணர்வைத் தரும். 

தினமும் நமது தலை முடியை அழகாக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷில் உள்ள அழுக்கைப் போக்குவது குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷில் உள்ள அழுக்குகளைப் போக்க சில எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

பல காலமாக நாம் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்றைய நாட்களில் பலர் பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவதை விரும்புவதில்லை. பிளாஸ்டிக் சீப்பைவிட பல நல்ல சீப்புகள் உள்ளது. அதனை 

தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடியில் சிக்கு மற்றும் வறட்சி ஏற்படுவதாக நம்புகின்றனர். அதனால் பெரும்பாலான மக்கள் நைலான் பிரஷ் பெரிய தூரிகைகள் கொண்ட மிருதுவான ஹேர் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

மென்மையான சீப்பு:

மென்மையான மற்றும் நீடித்து நிற்கும் தன்மைக் கொண்ட மர பிரஷ் மற்றும் சீப்பு, இயற்கையான முறையில் உங்கள் தலை முடியை பராமரிக்க உதவுகிறது. உங்கள் தலை முடியில் உள்ள எண்ணெய் தன்மையை தலை முழுவதும் பரப்பி வேர்க்கால்கள் வரை ஊடுருவ உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பிளாஸ்டிக் சீப்பை ஒப்பிடும்போது இந்த மர சீப்பு தலையை அதிகமாக அழுத்தாமல் இருக்க உதவுகின்றது. 

உருளை வடிவ சீப்:

உருளை வடிவத்தில் இருக்கும் ஒரு வகையான ஹேர் பிரஷ் முழுவதும் தூரிகைகள் கொண்ட. தலை முடியை விரித்து விடவும், கர்ல்ஸ், வேவ்ஸ் போன்ற அலங்காரம் செய்யவும் உகந்ததாக உள்ளது. இந்த வகை ஹேர் பிரஷ் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த வகை பிரஷ், தலை முடி அலங்காரத்திற்கு சிறந்த வகையில் பயன்படும் வகையாக இருந்தது.

மேலும் படிக்க: நவீன யுவதிகளின் யுனிக்கான உடைகள் ஒரு பார்வை..!

தட்டை வகையான சீப்:

 தட்டையாக, பெரிய மற்றும் அகலமான அடியைக் கொண்டிருக்கும் ஒரு வகை ஹேர் பிரஷ் ஆகும். இந்த வகை பிரஷ் பொதுவாக முடியின் சிக்குகளை நீக்கவும், சுருண்டிருக்கும் முடியை நேராக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் பயன்படுகிறது. 

 சீப்பு மரம், பிளாஸ்டிக், செராமிக் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. பொதுவாக நீளமான, அடர்த்தியான நேராக இருக்கும் கூந்தலுக்கு இதனை பயன்படுத்தலாம். மேலே கூறிய ஹேர் பிரஷ் மற்றும் சீப்பு வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க: அழகுசாதன பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் !!!

வினிகர் வைத்து தண்ணீருடன்  சேர்த்து சீப்பை ஊரவவைக்க வேண்டும். சோடா உப்பு,  வினிகருடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊர வைத்து அதனை சுத்தமாக்கலாம். சீப்பை தண்ணீரில் ஊர வைக்கும் பொழுது அழுக்கு எடுப்பது எளிதாகும்.  சீப்பில் உள்ள பிசுபிசுப்பை எளிதாக எடுக்கும். மரசீப்பை சுத்தம் கிளிசரின் சேர்த்த தண்ணீரை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். மரசீப்பை துணி வைத்து துடைத்து எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: எளிய மேக் அப்புக்கு இதை இப்படி செய்யுங்க

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன