ஃபவுண்டேஷனுக்கான நிறத்தை எப்படி தேர்வு செய்வது?

  • by
how to choose foundation according to your skin tone

நம் சருமம் பலவிதமான நிறங்களைக் கொண்டது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட பத்து விதமான நிறங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொருவரின் சரும நிறத்திற்கு ஏற்றார் போல் சிறிய மாற்றங்கள் ஏற்படும். இதற்கு நாம் சரியான ஃபவுண்டேஷனை தேர்வு செய்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும நிறம்

ஒவ்வொரு ஊர்களுக்கு ஏற்றாற்போல் அவரவர் சருமத்தின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கூட ஒரே விதமான சரும நிறம் இருப்பதில்லை, எனவே இது போன்றவர்கள் தங்கள் சரும நிறம் என்னவென்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மிக வெண்மை, வெண்மை, சராசரி வெண்மை, சராசரி, சராசரி கருமை, மஞ்சள் நிறம், செம்மையான கருமை, சராசரி செம்மையான கருமை, அதிகமான கருமை, பயங்கர கருமை. இது போன்ற பத்து விதமான சரும நிறங்கள் இருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல பவுண்டேசன் கிடைக்கிறது. அதை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

மேலும் படிக்க – சரும அழகை அதிகரிக்க உதவும் விளக்கெண்ணெய்..!

பவுண்டேஷன்

பொதுவாக அழகு சாதன பொருட்கள் விற்கும் கடைகளில் பவுண்டேஷன் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வதற்கு முன்பாக உங்களுக்கு இது போன்ற நிறம் வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள். ஒரு சிலர் தங்கள் குறையை மறைத்து மிக மென்மையான பவுண்டேஷனை அணிவார்கள். வாங்கும் பவுண்டேஷன் சரியானதாக இருக்க வேண்டும் இல்லை எனில் உங்கள் நிறம் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை உங்கள் நிறத்திற்கு ஏற்றார் போல் வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.

முகப்பொலிவை மேம்படுத்தும்

ஒரு சிலர் தங்களின் முக அழகை அதிகரிப்பதற்காக மூன்று விதமான நிறங்களை பயன்படுத்துகிறார்கள். நெற்றி பகுதிகளுக்கு ஒரு நிறமும், கன்னங்கள் மற்றும் தாடைகளுக்கு மற்றொரு நிறமும், மற்றும் கண்ணங்களில் ஒருவிதமான கரு நிறங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இதன் மூலமாக அவர்களின் முகம் ஈர்ப்பு தன்மையை அதிகரிக்கும். எனவே உங்கள் சருமத்தில் இருந்து கூடுதலான நிறங்களை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். தேவையற்றதை வாங்கிப் பணத்தை வீணாக்காதீர்கள்.

மேலும் படிக்க – இந்திய பெண்கள் அணியும் வளையல்களில் இருக்கும் வகைகள்.!

பவுண்டேஷனை முடிந்தவரை தரமான நிறுவனங்களின் வாங்கிக்கொள்ளுங்கள். விலை மலிவான பவுண்டேஷனை வாங்கும்போது அது மிக விரைவில் களைந்துவிடும். அதைத் தவிர்த்து உங்கள் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றார் போல் மாறி விடும். எனவே விலை உயர்ந்ததை வாங்கி நல்ல பலனைப் பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன