உணர்வுகளை பறை சாற்றும் வர்ணங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது???

  • by
how to choose colours that will build positive

ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வீடு என்பது ஒரு அத்தியாவசியத்தையும் தாண்டி ஆசைகளை அரங்கேற்றும் ஒரு இடமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுமே கட்டிடங்களுக்கு உயிரோட்டத்தை அளிக்குமாறு தேடித்தேடி வாங்குகிறோம்.

ஆனால் நாம் எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கும் வர்ணங்களுக்கு வீட்டில் அடிக்கும் பெயிண்ட்களுக்கும் நாம் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நாம் வீட்டில் இருக்கும்பொழுது அதிகம் பார்த்துக் கொண்டிருக்கும் சுவர்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்.

இப்பொழுது நாம் சுவரில் அடிக்கும் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு உணர்வு உண்டு என்பதை விளக்கி இருக்கிறார்கள் வடிவமைப்பாளர்கள் . மகிழ்ச்சி,அமைதி, இருண்மை, மனச்சோர்வு என அனைத்து விதமான உணர்வுகளையும் இந்த வண்ணங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அடர் சிவப்பு நிறம் 

சிவப்பு நிறத்திற்கு கோப உணர்வை தூண்டும் தன்மை உண்டு. அதுமட்டுமில்லாமல் அதிக துணிச்சலையும், பிரதிபலிக்கும் இந்த சிவப்பு நிறம் எல்லா அறைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. சிவப்பு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிறம் என்பதால் அறையின் முக்கிய சுவர் பகுதிகளில் மட்டும் இந்த நிறத்தை பயன்படுத்துவது நல்லது. அறை முழுக்க சிவப்பு நிறத்தில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க – ஊரடங்கில் உங்கள் வீட்டில் புத்தக வாசிப்பு நல்ல சினிமாக்கள் பார்க்கலாம்.

ஆரஞ்சு நிறம் 

பார்த்தவுடன் மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணங்களில் முதன்மையானது ஆரஞ்சு நிறம் தான். ஆனால் இதை நாம் தொடர்ச்சியாக அதிகமாக பயன்படுத்தினால் எரிச்சல் அமைதியின்மை ஆகியவை உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது. நடனப் பயிற்சி கூடங்கள் போன்ற படைப்பாற்றலை தூண்டும் இடங்களுக்கு இந்த

ஆரஞ்சு நிறம் ஏற்றதாக இருக்கும். வீட்டில் உடற்பயிற்சி  அறையில் வாசிப்பு அறையில் இந்த ஆரஞ்சு நிறத்தை பயன்படுத்தலாம். நிறத்தை அளவோடு பயன்படுத்துவதால் நம்பிக்கை உற்சாக தன்மை அதிகமாக ஏற்படுகிறது.

ஊதா நிறம் 

வசந்த காலத்தை நினைவில் கொண்டு உணர்த்தும் இந்த அடர் ஊதா நிறத்தை வீட்டில் வரவேற்பறைக்கு அதிகமாக பயன்படுத்தலாம். ஊதா நிறம் படைப்பாற்றல் மற்றும் ஆடம்பரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.

சாம்பல் நிறம்

மற்ற பிரகாசமான வண்ணங்கள் உடன்  ஒப்பிட்டு பார்த்தால் மன அமைதியை உருவாக்கும் விதமாக இந்த சாம்பல் நிறம் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த சாம்பல் நிறத்தை அதிகமாக பயன்படுத்துவது மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். மற்ற வண்ணங்களுடன் கலந்து இந்த சாம்பல் நிறத்தை அதிகம் பயன்படுத்தலாம்.

கடல் நீல நிறம்

தூக்கத்துக்கு ஏற்ற நிறமாக நீலநிறம் விளங்குகிறது. இதயத்துடிப்பை சீராக வைப்பதற்கு ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இந்த நிறம் உதவி செய்கிறது. படுக்கையறைக்கு இந்த நீல நிறத்தை பயன்படுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும். நீலம் அமைதிக்காகவும் ஓய்வுகாகவும் ஏற்படுத்தப்பட்ட நிறம் என்று வரையறுக்கப்படுகிறது.

மஞ்சள் நிறம் 

மஞ்சள் மங்களகரமான இடங்களில் ஒன்றாக இருந்தாலும் சற்று சிக்கலான நிறமாக தான் இருக்கிறது. ஏனென்றால் அதில் பல நிற மாற்றங்கள் இருப்பதுதான் காரணம். சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் மஞ்சள் மகிழ்ச்சியளிக்கும் தன்மையுடையது. அதுவே அடர் மஞ்சள் தீவிரமான உணர்வுகளை தூண்டுவதாக இருக்கிறது. சூரிய ஒளி போன்ற மஞ்சள் நிறத்தை

தனியாக பயன்படுத்தாமல் சார்பற்ற நிற மான வெள்ளை, கிரீம் போன்ற நிறங்களுடன் சேர்த்து பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

பச்சை நிறம் 

வசந்தத்தை வரவேற்கும் நிறம்தான் இது. அதிலும் படைப்பாற்றல் ,வளர்ச்சி, இளமை போன்றவற்றின் உணர்வுகளை அதிகம் தூண்டுவிக்கும் எலுமிச்சை பச்சைநிறம். இதனால் பெரும்பாலானோர் இதனை குழந்தைகள் அறையில் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளின் அறைக்கு ஏற்ற நிறமாக விளங்குகிறது. இந்த எலுமிச்சை பச்சை நிறம்.

கருப்பு வெள்ளை கலந்த நிறம் 

முன்பெல்லாம் கருப்பு நிறம் என்றாலே சுபகாரியங்களுக்கு பயன்படாது எனவும் வீட்டில் அதை அடிப்பதற்க்கு பலர் தயங்கி வந்தனர். ஆனால் இந்த 2020ஆம் ஆண்டு முழுவதுமே அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் வண்ணங்களில் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த வண்ணங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அமைதியை பறைசாற்றும் வெள்ளை நிறத்துடன் கருப்பு நிறத்தை கலந்து வர்ணமாக பூசுவதால் அது பார்ப்பதற்கு அழகாகவும் ஒரு புதுவித தோற்றத்தையும் கொடுக்கிறது. இதனால் மனதுக்குள் மகிழ்ச்சியைத் தூண்டும் உணர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க – இந்தியாவில் அனைத்து ரயில் சேவைகளும் முடக்கத்தில் உள்ளது..!

இளஞ்சிவப்பு நிறம் 

பெரும்பாலும் பெண்களை கவர்ந்து இழுக்கும் இந்த இளஞ்சிவப்பு நிறத்தை படுக்கை அறையில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிறத்தை பார்ப்பதால் மனதிற்குள் அமைதி உணர்வோம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பிடித்த நிறமாக இருப்பதால் குழந்தைகள் அறையிலும் இந்த இளஞ்சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம்.

உணர்வுகளை கொண்டிருக்கும் இந்த வர்ணங்களுக்கு உயிர் கொடுப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. மனதிற்கும் அறிவுக்கும் பிடித்தார்போல்

வர்ணங்களை தேர்ந்தெடுத்து வீட்டையும் வாழ்க்கையையும் அழகாக மாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன