உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி

how to celebrate your lover's birthday in a different manner

காதலில் விழுந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் அதிகமாக அன்பையும் அக்கறையையும் காட்டி வருவோம் அதற்கு எடுத்துக்காட்டாக அவ்வப்போது சிறு சிறு பரிசுகளை அவர்களுக்கு வாங்கித் தருவோம் இது அனைத்துக்கும் முன்னோடியாக இருப்பது இவர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு தான் அதற்கு அடுத்து இந்த பிறந்த நாளை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பதை பொறுத்தே நாம் அவர்கள் மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறோம் என்று அவர்கள் உணர்வார்கள் இதுபோல் ஒரு காதலி தன் காதலனின் பிறந்தநாளை எவ்வாறெல்லாம் வித்தியாசமாக கொண்டாட முடியும் என்பதை பார்ப்போம்.

சண்டை இடுங்கள் 

பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரிடம் காரணம் இல்லாமல் சண்டை இடுங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நீங்கள் நடியுங்கள் நிச்சயம் அவர் மனதில் அவரின் பிறந்த நாள் உங்களுக்கு மறந்திருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குங்கள் பின்பு பிறந்தநாள் அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு அவர் வீட்டுக்கு சென்று மெழுகுவர்த்தி பலூன் மற்றும் கேக்குகளை கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி தாருங்கள் பிறகு அவருக்காக பிடித்த பரிசு வழங்குங்கள் நிச்சயம் அந்த தருணத்தில் உங்கள் மேல் உள்ள கோபம் தணிந்து உங்கள் மேல் காதல் அதிகரிக்கும் சின்ன சண்டை அனைத்தும் ஒரு வேடிக்கைக்காக தான் செய்தேன் என்று அவருக்கு புரிய வையுங்கள்.

மேலும் படிக்க – காதல் இப்படி சொல்லும் பொழுது இன்பம் பொங்கும்..!

பழைய நண்பர்கள் 

உங்கள் காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு முதல் நாள் அவரின் பழைய நண்பர்கள் அனைவரையும் அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழையுங்கள் இது அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எப்போதும் ஒரு ஆண் பழைய நண்பர்களை இதுபோன்ற தருணத்தில் இணைத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் அவர்களை எங்கேயாவது சந்தித்தார்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவரின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர் யாரிடம் மிகவும் நெருங்கி பழகினார் என்பதை தெரிந்து அவர்களை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழையுங்கள் இது உங்கள் காதலனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.

முதியோர் இல்லம் அல்லது குழந்தைகள் காப்பகம் 

உங்கள் காதலனை பிறந்தநாளை ஏதாவது ஆசிரமத்தில் கொண்டாடுங்கள் இந்த நாளில் நாம் பெரிய தொகையை தங்கள் காதலனுக்காக செலவு செய்வீர்கள் அந்தத் தொகையைக் கொண்டு சிறுவர்களுக்கு அல்லது முதியோர்களுக்கு பயன்தரும் பொருளையோ அல்லது அன்று ஒருநாள் அவர்களுக்கு பிடித்த உணவையும் விருந்து அளித்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து உங்கள் காதலனை ஆசிர்வதிப்பார்கள் இந்த இடத்திற்கு உங்கள் காதலனை அழைத்து செல்லலாம் அல்லது இதுபோன்று நீங்கள் செய்து விட்டீர்கள் என்று புகைப்படத்தை அவருக்கு அனுப்பி அவரை மகிழ்விக்கலாம்.

மேலும் படிக்க – தோழியே வாழ்க்கை துணைவியானால் தொடுவானம் தொட்டுச் செல்லும்..!

கலங்கரை விளக்கம் அல்லது கடல் நடுவில் 

உங்கள் காதலரின் பிறந்த நாளை நீங்கள் கடலின் நடுவில் கொண்டாடுங்கள் நீங்கள் இரவு 12 மணியளவில் அவர் கண்களை கட்டிக்கொண்டு கப்பலில் ஏற்றி  நடுகடலில் கண்ணை அவிற்று அவர்களுக்கு பரிசு தரலாம் இதுதவிர கடல் மேல் பயம் உல்லவர்களை கலங்கரை விளக்கத்திற்க்கு அவரை அழைத்துச் சென்று கடல் அழகை இரசிக்க செய்து உங்கள் காதலனின் பிறந்த நாளை கொண்டாடலாம் ஆனால் இந்த ஏற்பாடுகளை நீங்கள் தனியே செய்யாமல் உங்கள் ஆண் நண்பர்கள் சிலரின் உதவியுடன் செய்யுங்கள்

ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கொண்டாட்டம் 

உங்கள் காதலரின் பிறந்த நாளன்று அவருக்காகவே உங்கள் கைப்பட எழுதிய கடிதத்தை அவருக்கு பரிசாக அளியுங்கள் அவர் மனதில், என்ன வெறும் கடிதத்துடன் கடமையை முடிக்க நினைத்துவிட்டால் போல எண்ணம் தோன்றும் பின்பு அதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு கடிதத்துடன் ஒரு பரிசளியுங்கள் அதே போன்று ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கடிதமும் அவருக்கு பிடித்த ஏதாவது ஒரு பரிசளித்துக் கொண்டே இருங்கள் அன்று முழுவதும் இருக்கும் 24 மணி நேரமும் ஒரு 24 கடிதத்தை அவருக்கு அளித்து நீங்கள் அவரை எந்த விதமாக நினைக்கிறீர்கள் எந்த விதமான வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் அவர் இந்த மாதிரியான ஒரு நபர் எனவே நீங்கள் தரும் கடிதத்தின் இறுதியில் அவரை அனைத்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பரிசுகளும் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு பற்றியதாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

இது போன்றவற்றை நீங்கள் அவருக்காக செய்தீர்கள் என்றால் நிச்சயம் அவருக்கு இது ஒரு பேரின்ப அதிர்ச்சியாகவே இருக்கும் இதை தவிர்த்து உங்களுக்கு ஏதாவது தோன்றினாலோ இல்லை இதுதான் அவருக்கு பிடிக்கும் என்றாலும் அதை நீங்கள் தேர்ந்தெடுத்து அவருக்கான நாளை நீங்கள் அழகுபடுத்தலாம்.

1 thought on “உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி”

  1. Pingback: your sleeping position will tell about knid of love you have

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன