காதலர் தினத்தை இதுபோல கொண்டாடி உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.!

  • by
How To Celebrate Lovers Day

காதல் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கக்கூடிய ஒரு அற்புத உணர்வு. ஆனால் மனிதர்களுக்கு, காதலை கொண்டாடுவதற்கு காதலர் தினம் வருகிறது. இன்றைய நாளில் எல்லா காதலர்களும் தங்கள் துணையுடன் எப்படி எல்லாம் காதலர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற கற்பனையில் இருப்பார்கள். ஆனால் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு சில வழிகள் இருக்கின்றன அவைகளை இங்கே காணலாம்.

ரோஜா தினம்

காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே நம் காதலியை சந்தோஷப் படுவதற்கு என்றே சில நாட்கள் உள்ளது. அதில் பிப்ரவரி 7ஆம் தேதியை ரோஜா தினமாக கொண்டாடப்படுகிறார்கள்.

ரோஜா தினத்தன்று உங்கள் காதலிக்கு ஒற்றை ரோஜாவை அல்லது ரோஜா கொத்துகளை பரிசாக அளித்து, அவர்களை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தவும். ஒன்றாக வாழும் காதலர்கள் அல்லது திருமணமான காதலர்கள் அவர்கள் துணையை சந்தோஷப்படுத்தும் வகையில் படுக்கை முழுவதும் ரோஜா பூக்களால் அலங்கரிக்கலாம். இதுபோல் செய்வதன் மூலமாக உங்கள் காதலர் தின வாரத்தை அழகாக தொடங்கலாம்.

மேலும் படிக்க – இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை

காதலை வெளிப்படுத்தும் நாள்

பிப்ரவரி எட்டாம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளில் எல்லோரும் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். இந்த நாளில் தாங்கள் எந்த அளவிற்கு தங்கள் துணையை காதலிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவார்கள். ஏற்கனவே காதலை வெளிப்படுத்திய காதலர்கள் இந்த நாளில் மேலும் விசித்திரமான முறையில் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். காதலே வாய்மொழியாக சொல்வதைத் தவிர அவர்களை நீங்கள் எந்த அளவுக்குக் காதலிக்கிறீர்கள் என்பதை கடிதமாகவும் அல்லது கிரீட்டிங் கார்ட் மூலமாகவும் வெளிப்படுத்தலாம்.

சாக்லேட் டே

பிப்ரவரி 9ஆம் தேதி கொண்டாடப்படுவது சாக்லெட் தினம், இன்றைய நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு பிடித்தமான இனிப்புகளை வழங்க வேண்டும். பெரும்பாலான காதலர்கள் எளிதில் கிடைக்கக்கூடிய சாக்லேட்களை கடையில் வாங்கி பரிசுகளாக அளிப்பார்கள். கிராமத்து காதலர்கள் வீட்டில் தங்கள் காதலர்களுக்கு பிடித்தமான இனிப்புகளை தயார் செய்து பரிசாக அளிப்பார்கள். கடையில் வாங்குவதைவிட நீங்களே வீட்டில் தயாரிக்கும் இனிப்புக்கு ஈர்ப்பு அதிகம், எனவே உங்களுக்கு இனிப்புகளை செய்ய தெரியவில்லை என்றாலும் இணையதளம் மூலமாக எப்படி செய்வது என்பதை பார்த்து செய்து உங்கள் துணைக்கு தருவதன் மூலம் உங்கள் அன்பு உறுதியாகும்.

மேலும் படிக்க – காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

டெடி டே

அடுத்ததாக நாம் டெடி டேவை கொண்டாட வேண்டும். இந்த நாளில் நமது காதலிக்கு டெடி பொம்மைகளை பரிசாக அளிக்க வேண்டும். எப்போது நாம் அவர்களின் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் இருக்கிறோமோ, அப்போது உங்கள் துணைக்கு உங்கள் நினைவாகவே இருப்பதற்காக நாம் இந்த பொம்மைகளை பரிசாக அளிக்க வேண்டும். உங்கள் மேல் காட்டக்கூடிய அன்பை நீங்கள் வாங்கிக் கொடுத்த டெடிகளின் மேல் காண்பித்து அதனை கட்டியணைத்து உறங்குவார்கள்.

வாக்குறுதி நாள்

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு முன்பாக நாம் ஏதேனும் ஒரு வாக்குறுதியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதாவது புத்தாண்டுத் தொடங்கும் பொழுது நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் வாக்குறுதியைப் போல், தங்கள் காதலிக்கு அல்லது காதலனுக்கு ஏதேனும் வாக்குறுதிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு. இன்று போல் என்றும் உன்னை காதலிப்பேன், எப்போது உன்னை விட்டு பிரிய மாட்டேன், உன்னைவிட வேறு யாரும் எனக்கு முக்கியமல்ல என வாக்குறுதி அளிப்பதன் மூலமாக உங்கள் காதல் வலுவடையும். அதைத் தவிர்த்து முடிந்தவரை உங்கள் வாழ்க்கையின் கடைசிவரை உங்கள் வாக்குறுதிகளை நிலைநிறுத்த முயற்சி செய்யுங்கள்.

கட்டியணைக்கும் நாள்

உறவுக்குள் உறுதி அளிக்கக்கூடிய நாள்தான் இந்த கட்டி அணைக்கும் நாள். பல நாட்களாக பிரிந்திருந்த உங்கள் காதலியை பார்த்தவுடன் உங்கள் அன்பை வெளிகாட்டுவதற்காக  எப்படி கட்டி அணைப்போமோ அதேபோல் இந்த நாளில் உங்கள் காதலியை கட்டியணைத்து உங்கள் உணர்வுகளை வெளிக்காட்டலாம். இது முழுக்க முழுக்க அன்பு சார்ந்ததாக இருக்க வேண்டும். கடடி அணைக்கும் தினத்தை பொறுத்துதான் உங்கள் காதலின் ஆழம் உங்களுக்கு தெரியும்.

மேலும் படிக்க – அவசர காதல் பேச்சுகள் ஆறா வடுக்களாகும்

முத்தம் தினம்

காதலர்கள் இருவருக்கும் அதிகப்படியான இணைப்பை உருவாக்குவதே முத்தங்கள்தான். எனவே காதலர் தினத்திற்கு ஒரு நாட்களுக்கு முன்பாக நாம் முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முத்தங்கள் என்றவுடன் இயல்பாக காதலர்கள் தரக்கூடிய காம முத்தங்கள் அல்ல, அன்பை வெளிகாட்டுவதற்காக அளிக்கப்படும் நெற்றி அல்லது கன்னத்தில் கொடுக்கப்படும் முத்தங்கள். ஒரு சிலர் இந்த தினத்திற்காக காத்திருந்து தங்கள் காதலிக்கு முதல் முத்தத்தை அளிப்பார்கள், எனவே காதலை வெளிப்படுத்தும் முத்தங்களை அளித்து இந்த காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.

காதலர் தினம்

கடைசியாக பிப்ரவரி 14 ஆம் தேதி வரக்கூடியது தான் இந்த காதலர் தினம். இந்த நாளில் உங்கள் காதலியை அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பது சிறந்ததாக இருக்கும். ஆனால் இதற்கு முன்பாக குறிப்பிட்ட அனைத்து நாட்களையும் சரியாக செய்து இந்த நாட்களை கொண்டாடுவதன் மூலம் தான் உங்கள் காதலர் தினம் பூர்த்தியடையும். அதை தவிர்த்து நேரடியாக இந்த தினத்தை கொண்டாடுவது என்பது கடமைக்கு செய்யும் காதலர் தினமாக மாறும்.

முதல் காதலில் இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளையும் கடைபிடிப்பது முக்கியமான ஒன்றாகும். இதற்காக பழைய காதலர்கள் இந்த வழிகளை பயன்படுத்தக் கூடாது என்பதல்ல, உங்கள் காதலின் ஆழத்தை காண்பிப்பதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன