அட்சய திரிதியை வீட்டில் கொண்டாடும் வழிகள்..!

  • by
how to celebrate akshaya tritiya at home

அட்சய திரிதியை என்றாலே தங்கம் வாங்கும் நானாகவே நாம் கருதுகிறோம், ஆனால் உண்மையில் அட்சய திரிதி அன்று தங்கம் வாங்குவதை தவிர்த்து, வீட்டில் செய்யப்படும் பூஜை மூலமாக நம் சகல சௌபாக்கியமும் பெற முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த அட்சய திருதி திருநாளில் நாம் வெளியே சென்று அல்லது கோயில்களுக்குச் சென்றோ கொண்டாட முடியாது. எனவே இந்நாளில் வீட்டில் எளிமையான முறையில் எப்படி பூஜைகள் மூலமாக கொண்டாடலாம் என்பதை காணலாம்.

அட்சய திருதி பெயர் காரணம்

சமஸ்கிருதத்தில் ‘அட்சய’ என்றால் எப்போதும் குறையாதது என்பது பொருள். இந்த நாளில் தான் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதிகாசங்களின் படி திரேதா யுகம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமி தேவியின் அருள் கிடைப்பதற்காக மக்கள் தங்கங்களை வாங்கிக் குவிக்கிறார்கள், ஆனால் இதற்கு பதிலாக நாம் செய்யப்படும் பூஜையின் மூலமாகவே நாம் மகாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

மேலும் படிக்க – சூரியனுடன் அமைந்திருக்கும் கிரகத்தால் ஏற்படக்கூடிய பலன்கள்..!

பூஜை காரணம்

அட்சய திருதி நாளில் நாம் மகாலட்சுமி பெருமான் மற்றும் குபேரனை வழிபட உகந்த நாளாகும். இந்த ஆண்டு அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. ரோகினி, கஷ்டங்களை தீர்க்க வல்லது. எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ரோகிணி நட்சத்திரம் உள்ளவர்கள் தெய்வ அருள் கிடைக்க கூடியவராக இருப்பார்கள். அட்சயத்திருதி முதல் நாளில் வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜை வழிமுறைகள்

அட்சய திருதி அன்று உங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு, இரண்டு விளக்குகளை வைக்கவும். அதேபோல் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். வீட்டில் துளசி செடி இருந்தால் அதற்கு ஒரு வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவர்களை வைத்து அகல்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பின்னர் சுவாமி அறையை சுத்தம் செய்து, ஒரு பலகை சுத்தம் செய்து வைத்து அதன் மீது ஒரு மஞ்சள் நிற துணியை போடவும், அதன் மீது கை நிறைய மஞ்சள் அரிசியை பரப்பி உங்களின் மோதிர விரலால் ஸ்ரீ சக்கரத்தை வரையவும். அதன் மீது ஒரு மண் பானையில் தண்ணீர் வைத்து அதனுள் மஞ்சள், பால், சந்தனம், குங்குமம், பன்னீர் சிறிதளவு கல்கண்டு அல்லது சர்க்கரையை போட வேண்டும்.

பூக்களும் தானியமும்

மல்லிகைப் பூ, எலுமிச்சை கொண்டு ஒரு நாணயம் போடவும். அதன் பின்னர் ஒன்பது மாவிலையை அதன் காம்பு தண்ணீரில் இருக்கும் படி வைக்கவும். அதன் மீது ஒரு மண் தட்டு திறந்திருக்கும் வகையில் வைக்கவும். அந்த மண் தட்டில் வெள்ளை அரிசியை ஒரு கைப்பிடி போடவும். அதோடு ஜாதிக்காய், மாசிக்காய், லவங்கம், ஏலக்காய், ஒரு நாணயம், வெள்ளி அல்லது தங்க மோதிரம். ஒரு எலுமிச்சை பழம். வைக்கவும். நடுவில் ஒரு வெற்றிலை பாக்கு, பழம் வைத்து பொட்டு வைத்து விடுங்கள். அதற்கு பூ வைக்கவும். பின்னர் இருபுறங்களில் குத்துவிளக்கில் 5 முக விளக்கு ஏற்றவும். அதோடு அந்த மண் பானைக்கு முன் 6 வெற்றிலை வைத்து அதன் மீது 6 எண்ணெய் அல்லது ஸ்வஸ்திக் எண்ணெய் விளக்கு அதாவது கோரிக்கை விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு தட்டு எடுத்து கொள்ளுங்கள், அதில் ஐந்து கப் வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசி, ஏதேனும் ஒரு தானியம், சர்க்கரை, உப்பு, ஒரு கைப்பிடி நாணயம் என 5 கப்பில் வைக்கவும். ஒரு தட்டில் நீங்கள் சமைத்த நைவேத்தியம் வைக்கவும்.

மேலும் படிக்க – மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம்..!

ஒரு தட்டில் ஒரு பிளவுஸ் பீஸ், வளையல், மஞ்சள், குங்குமம் என சீர்வரிசை போல வைக்கவும்.

இன்னொரு தட்டில் வெற்றிலைப் பாக்கு தேங்காய் பழம் வைக்கவும்.

விநாயக மந்திரம்

முதலில் ஒரு வெற்றிலை எடுத்து, அதன் மீது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது அருகம் புல் வைத்து ஒரு அகல் விளக்கை ஏற்றவும்.

‘ஓம் கம் கணபதையே நமஹ’ 

என மந்திரத்தை சொல்லவும். பின்னர் அனைத்து அகல் விளக்குகளையும் ஏற்றவும்.

அடுத்து சுவாமிக்கு பூஜை செய்து மகாலட்சுமி மந்திரம், பெருமாள் மந்திரம், குபேர மந்திரம் சொல்லி வழிபடவும். இதை செய்வதன் மூலமாகவே உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி குடியேறி உங்களுக்கு செல்வமும், பணத்தையும் அள்ளிக் கொடுப்பார். இதைத்தவிர இந்த நாளில் நீங்கள் ஏதேனும் தங்கம் அல்லது வெள்ளி வாங்க விரும்பினால் அதற்கேற்ற நேரத்தை பார்த்து வாங்குவது நல்ல பலனை அளிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன