அன்றாடம் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்

  • by

திட்டமிட்டு செயல்படுங்கள் தினமும் நினைத்தைவிட நல்ல பலன் கிடைக்கப் பெறலாம். உங்கள் வாழ்வில்  உங்களுடைய அன்றாடப் பணிகளை திட்டமிட்டு முடியுங்கள் வெற்றி எளிதில் கிடைக்கப் பெறலாம். வெற்றி என்பது அன்றாட இன்றியமையாப் பணிகள் குடும்பம் மற்றும்   வேலைப்பளு, குழந்தைகள் வளர்ப்பு, தொழில், வீட்டு விஷேசங்கள் ஆகிய அனைத்தையும் திட்டமிட்டு முடிக்கும் பொழுது ஒரு நாளுக்கான நமது இலக்கை எளிதில் அடைய முடியும். 

மேலும்: தமிழக அரசு பட்ஜெட் வெளியிட்ட பின் நாம் எப்படி செயல்பட வேண்டும்?

குடும்ப  நபர்களின் எண்ணிக்கை: 

குடுமபத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வாழ்வியல்  சார்ந்த நிகழ்வுகளை நன்றாக தெரிந்து அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். அவர்களுக்கான தேவையை நம்மால் முடிக்க முடியும் ஆனால் அது அவ்வாறு இல்லையெனில் சிரமமான தருணம் மட்டுமே  மிஞ்சும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் தொழில் மற்றும் பணி சர்ந்த பொருப்புகள் திட்டமிட்டு முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

தினசரி வாழ்க்கை

சாவால்களை சமாளித்தல் : 

எல்லா நாட்களிலும் ஒன்று போல் இருப்பதில்லை. நாட்கள் அது மாறுபடும் அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு கூட சவால்கள் அதிகரிக்கலாம். அது எல்லாம் இருக்கட்டும் அதற்காக வருத்தமோ கோவமோ வேண்டாம். நிலைமையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும். அது இருந்தால் தான் வாழ்வானது வளம் பெறும்.

உணவு சமைத்தலில் அட்டவணை: 

வாரம் செய்யும் உணவுகள் புதிதாக சேர்க்க வேண்டியது என எதுவானாலும் திட்டமிட்டு செய்து முடியுங்கள். அவ்வாறு சேர்க்கும் பொழுது  புதிய மெனுக்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம் ஆகும். 

மேலும் படிக்க:வீட்டு நிர்வாக பட்ஜெட் பட்டியல் அவசியமானது

நிதி அட்டவணை: 

வாழ்வில் நாம் செய்யும் அனைத்தும் திட்டமிடலின் பேரில் முறையாக நடக்கும் பொழுது அதற்கான பணிகளும் சிறப்பானதாக இருக்கும். ஆகையால் ஒவ்வொரு பணிகளுக்கும் திட்டமிடல் அவசியம் நிதி திட்டமிடல் என்பது நம் வாழ்வை வளப்படுத்தி தரகூடியது ஆகும்.  நிதி திட்டமிடல் அன்றாட நமது செலவை கட்டுபடுத்தும். அவசியமான செலவு, ஆடம்பர செலவு குறித்து அறிவுறுத்தும். அது நம்மை நெறிப்படுத்தும் நிதி அட்டவணை மூலம் செலவு பட்ஜெட்டை சமாளிப்பது போல் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட முடியும். குடும்ப உறுப்பினர்கள் தேவைகள், சமையலுக்கு செய்யும் செலவு, வாகன செலவு ஆகிய அனைத்தும் அடங்கும். 

தினசரி வாழ்க்கை

தினம் பணிக்கு செல்பவரா நீங்கள் அதற்கு ஏற்ப முந்தைய நாள் தயார்  ஆக வேண்டும். உடை, உணவு, போக்குவரத்து ஆகிய அனைத்தும் முறையாக அடுக்கி வைக்க வேண்டியது அவசியம் ஆகும்.  அத்துடன் சமைப்பவர் எனில் சமையலுக்கு தேவையானதை முந்தய நாள் வாங்கி வைக்க வேண்டும். 

சரியான ஓய்வு, திட்டமிட்டபடி காலை எழுதல் வேண்டும்.   பின் திட்டமிட்டப் பணிகளை செய்து முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். சாப்பிங் வேலை இருந்தால் அதற்கான சரியான நாட்களை திட்டமிட்டு சென்று வர வேண்டும். சுமார்ட் போன் பயன்பாட்டில் சுமார்டாக இருக்க வேண்டும். அதிக நேரத்தை செலவிடுவதை குறைக்க வேண்டும்.

தினசரி வாழ்க்கை

மேலும் படிக்க: மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன