வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைத்து சிக்ஸ் பேக் வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்..!

  • by
how to build six packs by reducing belly fat

ஆண்கள் அனைவரும் தங்கள் உடல் எடையை எப்போதும் கட்டுப்பாடுடன் மற்றும் உடலில் ஏராளமான கட்டுகளையும் வைத்திருக்க விரும்புகிறார்கள். இதனால் இளம் வயதில் உள்ளவர்கள் தாங்களும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவறான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அதைத் தவிர்த்து இந்த பயிற்சிகளை மேற்கொண்டால் அவர்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறைந்து விரைவில் சிக்ஸ்பேக் கிடைக்கும்.

பர்ப்பு பயிற்சி

நம் 30 வினாடிகள் தொடர்ந்து ஓடும் போது நம் உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு பர்ப்பு செய்யும்போது கிடைக்கிறது. நாம் தரையில் கால்களை மடித்து அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு பின்புறம் இருக்கையின் பின்னால் வைத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி எழுந்து குதிக்க வேண்டும். இதை உங்களால் முடிந்தவரை செய்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் உங்களால் உணர முடியும்.

மலை ஏறுதல்

இந்த நிலையை கேட்பதற்கு அல்லது பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் ஆனால் உண்மையில் இது சற்று கடினமான நிலையாகும். நாம் சாதாரணமாக மலை ஏறும் போது நாம் கைகளை ஊன்றிக்கொண்டு கால்களை ஒவ்வொன்றாக வைத்து ஏறுவோம் அதையே நாம் தரையில் படுத்துக் கொண்டு செய்தால் எப்படி இருக்கும். அதைதான் இந்த மலையை ஏறுதல் பயிற்சியில் நாம் இதை செய்வதன் மூலமாக உங்கள் வயிற்றுப்பகுதி இருக்கும் அனைத்து கொழுப்புகளும் கரைந்துவிடும்.

மேலும் படிக்க – உடல் எடை குறைப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரை..!

குண்டை சுற்றுதல்

நம்மால் தூக்க முடிந்த எடையை இரு கைகளையும் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு அதை நம்முடைய இரு கால்களுக்கு இடையே நுழைத்து மீண்டும் நம்மின் இடுப்பு பகுதிகளுக்கு மேல் கொண்டு வரவேண்டும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் முதுகுப் பகுதி வலுவடையும், அதைத் தவிர்த்து வயிற்றுப் பகுதியில் இருக்கும் அனைத்துக் கொழுப்புக்களும் வெளியேறும்.

மருத்துவ பந்து அடி

ஒரு கூடைப்பந்து ஆட்டக்காரர் எப்படி பந்தை தரையில் அடித்துக் கொண்டு வேகமாக ஓடி கூடைக்குள் பந்தை போடுவாரே அதேபோல் நாம் இரு கைகளையும் கொண்டு ஒரே இடத்தில் நின்று கொண்டு வந்து நம்முடைய தலைக்கு மேல் உயர்த்தி தரையில் அடித்த அதை பிடிக்க வேண்டும், இதை இடைவிடாமல் தொடர்ந்து செய்தால் உங்கள் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளும் வெளியேறும்.

தலைக்குமேல் தம்பிள்ஸ்

நாம் நம்முடைய இடதுகையில் நம்மால் முடிந்த எடையை வைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே ஒரு காலை மடக்கி இவ்வாறு முட்டிபோட்டுக்கொண்டு நம்முடைய இடது கையில் இருக்கும் எடையை மேலே தூக்க வேண்டும். இதை ஒவ்வொரு முறையும் கை மற்றும் கால்களை மாற்றி மாற்றி செய்யும் போது உங்கள் உடலில் உள்ள அனைத்து தசைகளும் வலுவாகும். ஆனால் இதை தொடர்ந்து 10 முறைக்கு மேல் செய்தால் நீங்கள் மிகவும் மோசமான நிலையில் சோர்வடைவீர்கள்.

மேலும் படிக்க – ஊட்டச்சத்து நிபுணர்களுடன் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள்..!

இந்த உடற்பயிற்சிகளை தினமும் ஒரு முறை செய்தாலே உங்கள் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை முழுமையாக குறைத்திட முடியும். அதைத் தவிர்த்து இந்த பயிற்சியை மேலும் சில மாதங்கள் மேற்கொண்டால் சிக்ஸ்பேக் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. எனவே உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த உடற்பயிற்சியை சிறந்த ஆலோசகர் ஒருவரின் அறிவுரைப்படி செய்து உங்கள் உடலை அழகாக மாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன