குடும்பத்திற்குள் நல்ல பழக்கங்களை கொண்டுவருவது எப்படி..!

  • by
how to bring good habits in family

நல்ல பழக்கம் என்பது எளிதில் எல்லோருக்கும் வருவதில்லை, எப்போது, நாம் இதை சிறிய வயதிலிருந்து பயிற்சி செய்கிறோமோ அப்போது தான் நமக்கு நல்ல பழக்கம் என்பது உண்டாகும். எனவே ஆரம்ப காலத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை நம்முடைய பழக்கமாக மாறுகிறது. எனவே இதை சரியாக வழிநடத்தும் வேலையை பெரியவர்களாகிய நாம் தான் செய்ய வேண்டும். எனவே உங்கள் குடும்பத்தை சரியாக வழி நடத்துவதன் மூலமாக உங்கள் குடும்பம் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டதாக மாறும். நீங்கள் வளர்க்கும் பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நீங்கள்தான் காரணம். இதை அறிந்து குடும்பத்திற்குள் நல்ல பழக்கங்களை உருவாக்குங்கள்.

பெருமையடைய செய்யுங்கள்

உங்கள் வறுமையை உங்கள் குழந்தைகளுக்கு காண்பிக்காதீர்கள். அதே போல் உங்கள் துணையுடன் முடிந்த வரை முழுமையாக பகிராதீர்கள். நமக்கு கிடைத்திருக்கும் பொருட்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை உருவாக்கங்கள். 3 வேளை உணவு, அணிந்துகொள்ள உடை மற்றும் இருக்க இடமிருக்கிறது என்பதை உணர்த்துங்கள். உலகில் வாழும் பல மக்களுக்கு இதுபோன்ற வசதிகள் இல்லை என்பதை புரிய வையுங்கள். அதேபோல் தாங்கள் வைத்திருக்கும் பொருளின் அருமையை உணர்த்துங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க பழக்கப்படுத்துங்கள். நீங்கள் வசதியானவராக இருந்தாள் பணத்தின் அருமையை புரிய வையுங்கள். சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்துங்கள், அதேபோல் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு செலவு செய்யும் பக்குவத்தை பயிற்சி கொடுங்கள்.

மேலும் படிக்க – காதலில் பரஸ்பர பாராட்டு அவசியமானது

கொண்டாட்டங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்

ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்தை திட்டமிடுங்கள் காலையில் 7 லிருந்து 8 மணி வரை உணவு அருந்த வேண்டும். அதேபோல் மாலை பள்ளி அல்லது வேலையை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை அலம்பிய பிறகு ஆரோக்கியமான ஏதாவது உணவுகளை உண்ண வேண்டும். அதேபோல் பொழுதுபோக்கிற்கான நேரத்தை இரவில் ஒதுக்கிவிட வேண்டும். அதை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாடுவது அல்லது படிப்பது என இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து வார இறுதியில் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதை ஒவ்வொரு வாரமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான தொகையையும் மாத சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவிட வேண்டும்.

சரியான வார்த்தை களைப் பயன்படுத்துங்கள்

உங்கள் வீட்டில் நீங்கள் எப்போதும் சரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எல்லோர் வீட்டிலும் குடும்பத் தலைவன் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் அவர்களிடம் மன்னிப்பு கேட்பது முதல் நன்றி சொல்வது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் செய்ய வேண்டும். இதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கற்றுத் தாருங்கள். இதன் மூலமாக அவர்கள் மற்றவர்களுக்கு மரியாதையை எளிதில் அளிப்பார்கள்.

வீட்டை அலங்கரிக்க கற்றுக்கொடுங்கள்

தங்கள் அறையை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். அதேபோல் வீட்டை எப்போதும் சுத்தமாகவும், எல்லா பொருட்களையும் அதற்கேற்ப இடத்தில் வைத்துப் பழகுங்கள். இதை அவர்களும் பின் தொடர்ந்தவர்கள், பொருட்களை சரியான இடத்தில் வைப்பார்கள். இந்தப் பழக்கம் எல்லாவிதத்திலும் அவர்கள் வாழ்க்கை இனிதாக மாற்றும்.

மேலும் படிக்க – காதல் கல்யாணத்திற்கு பின்பும் தொடர உதவும் மூன்று விஷயங்கள் இவை தான்!

தன் வேலையை செய்யக் கற்றுக் கொடுங்கள்

பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம் அதற்காக அவர்களை சோம்பேறியாக மாற்ற வேண்டாம். காலையில் எழுந்து குளிப்பது முதல் தங்கள் துணியை அயன் செய்து, மாலையில் அதைத் துவைத்து காயப் போடுவது வரை எல்லா வேலையையும் அவர்களையே செய்ய சொல்லுங்கள். அதேபோல் அவர்களுக்கு சமைக்க கற்றுக் கொடுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு வேலையும் தெரியாது என்று சொல்லும்படி வளர்க்காதீர்கள். வீட்டு வேலை, குழாய் சரி செய்தல், மின்சார வேலை என வீட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வேலையையும் கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்களுக்கு பகிர்ந்து உணவை அருந்துவது சிறந்த பழக்கமாகும். அதேபோல் எப்போதும் சுயநலமில்லாமல், பொது நலமாக இருக்க வேண்டும். தங்கள் குடும்பத்தை ஒரு அங்கமாக எடுத்துக்கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்படி உங்கள் பிள்ளைகளை வளருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் குடும்பத்தை பாதிக்கும் எனவே அதை கருத்தில் கொண்டு அழகான செயலை செய்த அற்புதமான குடும்பத்தை உருவாக்கங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன