அவசர வாழ்க்கையை தடுப்பதற்கான வழிகள்..!

  • by
how to avoid your hurry burry life

இந்தியாவைத் தவிர்த்து உலகம் முழுக்க இருக்கும் மக்களின் மிகப்பெரிய பிரச்சனை அவரின் அன்றாட வாழ்க்கையை அவசர அவசரமாகக் கழிப்பதுதான். எது செய்வதாக இருந்தாலும் உடனடியாக செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவசர அவசரமாக செயல்களை செய்கிறார்கள். இதை தவிர்த்து கிடைக்கும் நேரங்களை வீணடித்துவிட்டு, கடைசி நேரத்தில் தங்கள் கடமைகளை மிக விரைவாக செய்கிறார்கள். இது உங்கள் வேலைகளை எளிதில் முடிக்க உதவினாலும் உங்களுக்கு மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைபாடு மற்றும் ஞாபகமறதி போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளை தவிருங்கள்

நீங்கள் எந்த வேலைகளை செய்து முடிப்பதாக இருந்தால் அதற்கான நேரத்தை ஒதுக்கி அந்த வேலையை செய்து முடியுங்கள். அதை தவிர்த்து அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்து முடிக்க நினைக்காதீர்கள். இதனால் நீங்கள் செய்யும் வேலையின் தரம் குறைந்து உங்களுக்கு பதற்றத்தை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதன் மூலமாக உங்களின் சிந்திக்கும் திறனும் குறையும்.

மேலும் படிக்க – வாழ்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வழிகள்

வேலைக்கான நேரத்தை ஒதுக்குங்கள்

எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும், அதில் மேல் மட்டும் கவனத்தை செலுத்தி அந்த வேலையை முடிக்க வேண்டும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல வேலைகளை முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அச்சமயங்களில் எந்த வேலை முக்கியமோ அதை முதலில் முடியுங்கள், பிறகு எந்த வேலை எளிமையாக உள்ளதோ அதை தொடர்ந்து நிறைவு செய்து, உங்கள் மற்ற வேலைகளை ஒவ்வொன்றாக செய்து முடிக்கலாம். இதனால் உங்கள் வேலைகள் எளிமையாக முடியும். ஒவ்வொரு நாளுக்கும் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வேலையை தொடங்கி, எந்த நேரத்தில் முடிக்கலாம் என்ற திட்டங்களையும் திட்டிக்கொண்டு உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குங்கள்.

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்

தொடர்ந்து வேலைகளை மட்டும் செய்வதாக இருந்தால் உங்களின் வேலை செய்யும் திறன் குறைந்து விடும். எனவே ஒவ்வொரு வேலைக்கும் இடையே ஓய்வு நேரத்தை தீர்மானித்து அதை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்கள் சிந்திக்கும் எண்ணம் புத்துணர்ச்சி அடைந்து உங்கள் வேலைகளை புதுமையாகவும், உற்பத்தி உள்ளதாகவும் மாற்றும்.

தூங்கும் நேரம், வேலை நேரம்

எப்போதும் உங்கள் தூங்கும் நேரத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதன்பிறகு தூக்கத்தைத் தவிர்த்து உங்கள் வேலைகளைத் எப்போது தொடங்கலாம் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக கடைசி நேர வேலைகளை செய்யாமல் எல்லாவற்றையும் முன்பே முடித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – மூவாயிரம் வருடம் பழமையான மம்மிகள்..!

மனதை ஒருநிலைப் படுத்தி கொள்ளுங்கள்

உங்கள் எண்ணம் மற்றும் சிந்தனை எப்போதும் ஒரு நிலையாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வேலைகளை நீங்கள் தொடங்க முடியும். இல்லையெனில் உங்கள் மனம் மற்றும் சிந்தனைகளுக்கு நுழைந்து உங்கள் வேலைகளை முடிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும். எனவே இந்த வேலையை இந்த நேரத்தில் செய்ய வேண்டும், செய்யப்போகிறேன், செய்து முடித்து விடுவேன் என்ற எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கி அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள்.

அவசரமாக எது செய்தாலும் அது சரியானதாக அமையாது. எனவே அவசரத்தை குறைத்து எப்போதும் நிதானமாக உங்கள் வேலைகளில் செய்யுங்கள். அதற்க்கான திட்டங்கள், நேரங்கள், ஓய்வு என அனைத்தையும் சரியாக தேர்ந்தெடுங்கள். உங்கள் வேலையை எளிமையாக்கி நிம்மதியாக வாழ்ங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன