முகத்தில் ஏற்படுவதை போல் உச்சந்தலையிலும் பருக்கள் உண்டாகும்.!

  • by
how to avoid scalp pimples

உச்சந்தலையில் பருக்கள் உண்டாகுமா என்ற கேள்வி உங்களுக்குள் எழும். ஆம், முகத்தில் எப்படி பாக்டீரியா மற்றும் கொழுப்புகள் மூலமாக பருக்கள் உண்டாகிறதோ, அதே போல் நமது உச்சந்தலையிலும் பருக்கள் உண்டாகிறது. இதற்கான காரணம், அதைத் தடுப்பது எப்படி என்பதைக் காணலாம்.

ஏன் பருக்கள் உண்டாகிறது

நமது கூந்தலை சரியாக பராமரிக்காமல் இருந்தால் நமது உச்சந்தலையில் பருக்கள் உண்டாகிறது. சீபம் என்ற எண்ணெய் நமது உச்சந்தலையில் ஈரத்தன்மையை அளிக்கக்கூடிய சரும எண்ணெய்யாகும். எனவே இதனுடன் கெட்ட பாக்டீரியாக்கள் இனையும் பொழுது பருக்கள் உண்டாகிறது.

மேலும் படிக்க – இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

பருக்கள் உண்டாவதற்கான முக்கிய காரணங்கள்

நமது கூந்தலுக்கு அடியில் இருக்கும் துளைகளுக்குள் பூஞ்சைகள் அல்லது பாக்டீரியாக்கள் வளர்ந்து, நாளடைவில் எண்ணெய் உடன் இணைந்து பருக்களாக மாறுகிறது. அந்த பருக்கள் உடைந்து சீழ் வெளிவரும் பொழுது முகத்தில் ஏற்படும் பருக்கள் எப்படி எல்லா இடங்களிலும் பரவுகிறதோ, அதேபோல் அந்த சீழ் தலை முழுவதும் பருக்களை உண்டாக்கிறது.

அழுக்கான உச்சந்தலை

பெண்கள் தங்களின் கூந்தலை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை அலச வேண்டும். ஒரு சில பெண்கள் தங்கள் கூந்தலை வாரத்திற்கு ஒருமுறை அலசுவார்கள். இதுபோன்ற காரணத்தினால் தலையில் அதிகப்படியான அழுக்குகள் படிந்து, இயற்கை எண்ணைகளை தடுத்து, பருக்களை உண்டாக்குகிறது. எனவே எந்த அளவிற்கு நம் கூந்தலை சுத்தப்படுத்துகிறேமோஅந்த அளவிற்கு நம் தலைகளில் பருக்கள் உண்டாவதை தடுக்கலாம்.

மேலும் படிக்க – சார்கோல் பேஸ்பேக்கில் இருக்கு சருமத்தின் பளபளப்பு!

ஹார்மோன் பிரச்சனைகள்

எப்படி ஒரு வயதை எட்டிய பிறகு நம்மை அறியாமல் நம் உடலுக்குள் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு முகத்தில் முகப்பருக்கள் வருகிறதோ, அதே போல் தலையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு பருக்கள் உண்டாகும். எனவே இது போன்ற சமயங்களில் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

கருத்தடை மாத்திரைகள்

ஒரு சில பெண்கள் மருத்துவரை ஆலோசிக்காமல் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதில் ஆண்ட்ரோஜன் அதிகமாக இருப்பதினால் உங்கள் தலையில் ஏற்படும் எண்ணெய்யுடன் இணைந்து பருக்களை உண்டாக்கிறது. எனவே கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

மேலும் படிக்க – இதழ்களுக்கு அழகு இந்த லிக்வ்யூடு லிப்ஸ்டிக் டிரெண்டிங்

வேர்களில் சுத்தம்

கூந்தல் வேர்களில் அலர்ஜிகள் ஏற்படும். இதை தடுப்பதற்கு நாம் நம் கூந்தலை ஷாம்புகளை பயன்படுத்தி நன்கு அலசி விடவும். எனவே எங்கே வெளியே செல்வதாக இருந்தாலும் அழுக்குகள் படிந்து அதை தடுப்பதற்கு ஏதேனும் துணிகளை தலையின் மேல் போட்டு செல்வது சிறந்ததாகும்.

தடுக்கும் உணவுகள்

வைட்டமின் ஏ, டி, ஈ போன்ற சத்துகள் அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் பருக்களை தடுக்கலாம். இதைத் தவிர்த்து இயற்கை எண்ணெய்கள், கெடுதல் விளைவிக்காத ஷாம்புகள், ஆலுவேரா ஜெல் போன்றவைகளை பயன்படுத்தி உங்கள் கூந்தலை பராமரிக்கலாம்.

எனவே இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதை அழிப்பது சிறந்ததாக இருக்கும், ஏனென்றால் இது தலை முழுவதும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்த்து உங்கள் தலைகளில் அரிப்பு மற்றும் வலிகளை உண்டாக்கும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லாமல் தொடக்கத்திலேயே அழித்துவிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன