சைனிங்கான கூந்தல் பராமரிக்க சாதுரிமாக இருங்க

  • by

பட்டுபோன்ற கூந்தல் அழகை  பராமரிக்க இன்றைய அவசர உலகில் ஆண்கள், பெண்கள் இருவரும் மெனக்கெட ஆரம்பித்துவிட்டார்கள். ஆமாங்க இன்று முடி கொட்டுவது  என்பது அனைவருக்கும் நடக்கும் சாதரண ஒன்றாகிவிட்டது. இதற்கான முடிவை பெற நமது மக்களும் கூகுளில் தவமாய் தவம் இருந்து தேடுகின்றனர். 

தலைமுடி  உதிர்வு:

தலைமுடி உதிர்வு என்பது  ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம், அத்துடன்  உடலில் ஏற்படும் சூடு, மூளைக்கு ஓய்வின்றி சிந்தித்தல் மற்றும் முறையான ஓய்வற்ற  நிலை ஆகியவை காரணமாக சொல்லலாம். 


முடி உதிர்வு தீர்க்கும் நிவாரணி: 

சந்தையில் முடி உதிர்வு பிரச்சனை தீர்க்க வெங்காயத்தில் தயாரிக்கபட்ட ஆயில் மற்றும் ஆயுர் வேத எண்ணெய் என ஆளாளுக்கு ஒரு பிராண்டுகள் அசத்துகின்றன. இதுபோன்று  நீங்கள் எண்னெய்கள் பயன்படுத்தி பார்த்து உள்ளீர்களா அப்படி எனில் உங்களுக்கான இந்த பதிவை பின்பற்றவும். ஆம் ஆயுர் வேத எண்ணெய்கள் எல்லாம் பல மணி நேர செயல்முறைகளுக்கு அதனை நமக்கு கொடுப்பார்கள். 

அதனை வாங்கி நன்றாகப் பயன்படுத்தியிருப்போம் . ஆனால் அந்த பிசுபிசுப்புத் தன்மையை போக்குவதில் உள்ள சிக்கல்கள்தான் தீராத ஒன்றாக இருக்கும். 

கூந்தல் பராமரிப்பு

பிசுபிசுப்பை போக்கும் நிவாரணி: 

உச்சந்தலையில் ஏற்படும் எண்ணெய் பிசுப்பை போக்க  நாம் பயன்படுத்தும் நிவாரணிகள் அனைத்தும் நமக்கு இன்னும் அதிக சிக்கலை தரும் எண்ணெய் தன்மையை அதிகப்படுத்தி  நமக்கு ஒரு டல் லுக்கை கொடுக்கும். 

ஸ்டிரைனர்கள் பயன்பாடு அதிக எண்ணெய் பிசபிசுப்புக்கு காரணம் என்று தகவல்கள் கிடைக்கின்றன.    நேரான கூந்தலுக்கு ஏற்ப பிசுபிசுத்தன்மையும் அதிகரிக்கும். ஆகையால் இந்த சிக்கலைப் போக்க நல்ல சாம்பூவை  பயன்படுத்துங்கள். இதுபோன்ற சூழலில் மாய்சரைசிங் சாம்பூவை பயன்படுத்துவதற்கு பதில் ஹேர் கிளின்சரை வாங்கிப் பயன்படுத்தலாம்.   கூந்தலுக்கு ஊட்டம் தரும் நருசிங் ஆயில் கேர் சாம்பூ வாங்கி பயன்படுத்துவது மேலும் சிறந்தது ஆகும். இயற்கையான எண்ணெய் பசையை சமநிலையில் வைத்திருக்கும் சாம்பூக்கள் பார்த்து  வாங்கிப் பயன்படுத்தவும். 

மேலும் படிக்க: சில்கியான கூந்தல் அழகைப் பராமரிக்கும் சிகைக்காய்


கூந்தல் பராமரிப்பு

கூந்தல் அலசுமபொழுது கவனம்: 

கூந்தள் அலசும்பொழுது கவனம் என்பது அவசியம் ஆகும். அது நமது  கேசத்தில் ஒரு பகுதியை அலசும் பொழுது நாம் கவனக்குறைவாக அல்லது அவசரத்தில் அலசுகின்றோம் அப்பொழுது கூந்தலின் ஒரு பகுதி மட்டும் பிசுபிசுப்புடன் இருக்கும். ஆதலால் இதனை நாம் சரி  செய்ய வேண்டும். 

மேலும் படிக்க: இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

கூந்தல் பராமரிப்பு

கூந்தலை சரி செய்ய  சாம்பூவுடன் எலுமிச்சை  சாறு கலந்து குளிக்கும் பொழுது அது தலையில் சில்கி தன்மையை அதிகரிக்கும் மற்றும்  தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுப்பிசுப்பை போக்கும். உச்சந்தலையில் சேரும் எண்ணெய்களின் தன்மையை அது குறைக்கும். 

குளித்து முடித்து கூந்தலை நன்றாக வெய்யிலில் வைத்து தலையை துவட்டி எடுக்கவும் பிறகு பேனில் வைத்து டவலில் துட்டினால் பிசுபிசுப்பு தன்மையானது வெளியேறும்.  

கூந்தலுக்கு நாம் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாரம் 3 முறையாவது பருவ காலத்திற்கு ஏற்ப அலச வேண்டும். கூந்தல் உதிர்வு தடுக்க  அதிகபட்சம் ஆயுர்வேதபொருட்களைப் பயன்படுத்தி வருதல் சிறப்பாகும். மேலும் வீட்டில் நாமே தாயாரிக்கும் சாம்பூக்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கும்ன் பொழுது அது இன்னும் நம்மை மெருக்கூட்டும். 

கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கான நேரத்தை ஒதுக்கி நாம் செயல்படும் பொழுது சிக்கல் தீரும்.

மேலும் படிக்க: பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா !

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன