சமுதாயத்தில் இருந்து விலகி இருப்பதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை எப்படி தடுக்க முடியும்..!

  • by
how to avoid corona virus by social distancing

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று தடை விதித்துள்ளார். இதற்கு முழுக்காரணம் அனைவரும் சமுதாயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான். நாம் குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரலாம், அதுவும் ஒரு கடையில் 5 பேர் மேல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஆறாவதாக வரும் நபர் காத்திருந்தான் தங்கள் பொருட்களை வாங்க வேண்டும். இந்த செயல் நமக்கு எந்த அளவிற்க்கு உதவும் என்பதை காணலாம்.

சமுதாயத்திலிருந்து விலகுவது

நாம் வாழும் சமூகத்தில் இருந்து விலகி இருப்பதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நம்மை அண்டாமல் பாதுகாக்க முடியும். பொதுவாக இந்த வைரஸ் தொற்று முழுமையாக வளர்ச்சி அடைய கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த சூழ்நிலையில் நமக்கு இந்த தொற்று இருக்கிறதா, இல்லையா என்பது முழுமையாகத் தெரியாது. எனவே இதைத் தடுப்பதற்காகவே நாம் சமுதாயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். தொற்று உள்ளவர்களின் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – கரோனா வைரஸ் எவ்வளவு நாள் நம் ஆடைகளின் மேல் இருக்கும்..!

கொரோனா வைரஸ்

ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கிய பிறகு 14 நாட்களுக்குப் பின்பு தான் அவர்களுக்கு காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவைகள் உண்டாகும். இதற்கு முன்பு இவர்கள் சென்ற இடத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கள் பரவியிருக்கும். எனவே இதை அறியாத சாதாரண மக்கள் அந்த தொற்றைத் தங்களுக்குள் ஏற்றுக் கொள்வார்கள். பின்பு இது அவர்களின் குடும்பத்தில் பரவும். எனவே இது படிப்படியாக எல்லோருக்கும் பரவிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாகவே இந்தியா முழுவதும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள்.

தொடர்ச்சியை துண்டிக்க வேண்டும்

ஒருவர் மீது இருந்து மற்றொருவருக்கு பரவிக்கொண்டு இருக்கும் இந்த வைரஸ் தொற்றின் தொடர்ச்சியை நாம் துண்டிக்க வேண்டும். இதற்கான செயலாகத்தான் அனைவரும் வீட்டில் இருக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நம் வீட்டில் இருப்பதன் மூலமாக மக்கள் கூட்டம் கட்டுப்பாட்டிற்குள் வரும். எனவே கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் வெளியே வர மறுப்பார்கள். அதன் மூலமாக நம்முடைய சுற்றுச்சூழலில் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்திருக்கும்.

தடுப்பு மருந்துகள்

சுகாதாரத்துறை ஊழியர்கள் இதுபோன்ற சமயங்களில் நகரம் மற்றும் கிராமம் முழுக்க கொரோனா தொற்றுகளை அழிக்கும் கிருமி நாசினிகளை தெளிக்கிறார்கள். எனவே நம்முடைய சமுதாயம் சுத்தமாகும் அதைத் தவிர்த்து மீண்டும் இது போன்ற வைரஸ் நம் சமுதாயத்தை தாக்காமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு எவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதோ அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எனவே இந்த வைரஸ் தொற்று நம்முடைய சமுதாயத்தை பாதிக்காது.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக அலுவலகத்திற்கு செல்லும் வழிகள்..!

தொற்றுகள் அற்ற சமுதாயம்

ஏப்ரல் 14 முடிவில் இந்தியாவில் மொத்தம் எத்தனை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் அச்சமயத்தில் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருப்பதினால் இந்த தோற்று நம்முடைய சமுதாயத்தில் பரவி இருக்காது. இதன் மூலமாக தொற்றுகள் பாதிப்பு இல்லாமல் மக்கள் தைரியமாக வெளியே செல்லலாம். அதேபோல் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நம் நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான வழியும் இதுதான்.

எனவே சமுதாயத்தில் இருந்து விலகி இருந்து நம்முடைய மக்களையும், நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு உங்கள் நாட்டு நலனுக்காக வீட்டில் இருந்து நாட்டை பாதுகாத்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன