குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்..!

  • by
how the relationship should be between parent's and children

குழந்தைகள் சிறுவயதில், கற்கும் ஆற்றல் அதிகமாக கொண்டிருக்கும். எனவே அச்சமயங்களில் அவர்கள் என்ன காண்கிறார்களோ அதை கற்கிறார்கள். இதை நன்கு அறிந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கான சில நல்லொழுக்கங்கள் மற்றும் அன்பு, பாசம், அரவணைப்பு, சுத்தம், அக்கறை என எல்லாவற்றையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் சண்டையிடுவது, மற்றவர்களை ஏமாற்றுவது, போய் சொல்வது அல்லது கோபப்படுவது கூடாது.

படிப்பின் அவசியத்தை கற்றுக் கொடுங்கள்

நீங்கள் எந்நேரமும் குழந்தைகளுக்கு முன்பு தொலைக் காட்சிகளோ அல்லது செல்போன்களை நோண்டிக் கொண்டு இல்லாமல், அவர்கள் முன்னிலையில் ஏதாவது புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். இதனால் அவர்களுக்கும் படிக்கும் ஆர்வம் உண்டாகும். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிடித்தமான கதை மற்றும் அறிவுரை புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். இதன் மூலமாக அவர்கள் நல்ல விஷயங்களை புத்தகத்தின் மூலமாக கற்றுக் கொள்வார்கள்.

மேலும் படிக்க – குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்லும் இடங்கள்..!

அன்பாக நடந்துக் கொள்ளுங்கள்

கணவன் மனைவிக்குள் எப்போதும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அப்படியே கோபம் ஏதாவது ஏற்பட்டால் உங்கள் குழந்தைகள் முன் காட்டாமல் காத்திருந்து தனிமையில் சண்டை இடுவது நல்லது. நீங்கள் எப்படி உங்கள் துணையுடன் சண்டை போடுகிறீர்களே அதேபோல்தான் உங்கள் குழந்தையும் பள்ளியில் உள்ள நண்பர்களிடம் சண்டையிடும்.

கேள்வி கேட்க கற்றுக் கொடுங்கள்

உங்களைச் சுற்றி எது நடந்தாலும் அது என்னவென்று கேள்வி எழுப்புங்கள். அதைப்போல் உங்கள் குழந்தை ஏதாவது கேள்வியைக் கேட்டால் அதை மறுக்காமல் அவர்களுக்கு ஏற்ற பதிலளியுங்கள். இதனால் எப்போதும் தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் அந்த குழந்தை வெளிப்படையாக கேட்கும். இதுவே எதிர்காலத்தில் தலைமைப் பண்பை வகிக்க உதவும்.

ஒழுக்கமாக இருக்க கற்றுத் தாருங்கள்

நீங்கள் முடிந்தவரை உங்கள் குழந்தைகளின் கண் முன்னே ஒழுக்கமாக இருங்கள். ஏதேனும் குப்பைகள் இருந்தால் அதைக் குப்பைத் தொட்டியில் போடுவதும், சமூக அக்கறையை கொண்டு எப்படி இருப்பது, சமுதாயத்தை எப்படி தூய்மையாக வைத்திருப்பது போன்றவற்றை அவர்களுக்கு புரிய வையுங்கள். இதனால் எல்லா உயிரினங்கள் மேலும் அக்கறை உள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளரும்.

மனம் துவண்டு விடாமல்

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் குழந்தைகளுக்கு முன் அழாதீர்கள். அதை தவிர்த்து மனம் துவண்டு விடாமல் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்களே அதை பொறுத்துதான் உங்கள் குழந்தையும் அந்த சூழ்நிலையை கையாளும். எனவே உங்கள் குழந்தைக்கு நேர்மறை எண்ணத்தை அதிகமாக கொடுங்கள்.

மேலும் படிக்க – காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

உங்களை சுத்தமாக பார்த்துக் கொள்ளுங்கள்

நீங்கள் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறீர்களே அதை உங்கள் குழந்தையும் அப்படியே பின்தொடரும். பின்பு சுத்தமாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகளை அவர்களுக்கு உணர்த்துங்கள். காலையில் எழுந்து ஒரு சில கடமைகளை நாம் செய்தே ஆக வேண்டும் அதனால் கிடைக்கும் நன்மைகளை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

எனவே எப்போதும் உங்கள் குழந்தைகளுடன் அன்பாக இருங்கள், மற்றவர்கள் மேல் அன்பு வைப்பதினால் கிடைக்கும் நன்மைகளை அவர்களுக்கு உணர்த்துங்கள். ஏமாற்றம், தோல்வி, கஷ்டம் போன்றவற்றை எப்படி கடந்து வரலாம் என்பதை பற்றி அவருடன் பேசுங்கள். எல்லாவற்றையும் நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ள உதவுங்கள். இதை அனைத்தையும் நீங்கள் செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் அதை பின்தொடரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன