நாடு முழுவதும் முடக்கத்தில் இருக்கும் பொழுது காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை எப்படி திட்டமிட்டு பயன்படுத்துவது..!

  • by
how t use groceries and vegetables effectively under this lockdown

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் காய்கறிகள் மற்றும் வீட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான நேரங்களை சரியாக திட்டமிட்டு வகுத்துள்ளார்கள். இச்சமயங்களில் நாம் ஒரேயடியாக பல மாதத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதைத் தவிர்த்து அன்றாடத் தேவைகள் மற்றும் ஒன்று இரண்டு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக் கொள்வது சிறந்ததாகும். அதை தவிர்த்து நம் வாங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை எப்படி சிக்கனமாகவும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்பதற்க்கான சிறிய யோசனையை காணலாம்.

வேளாண்மை துறை

எல்லா வேலைகளையும் முடக்கி உள்ள இந்திய அரசு வேளாண்மை துறைக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. இதன் மூலமாக நமக்கு தேவையான உணவுப்பொருட்கள் தேவைக்கேற்ப நமக்கு கிடைக்கும். எனவே இதற்கான அச்சங்கள் கொள்ளாமல் நம் உணவுப் பொருட்களை போதுமான அளவு வாங்கி பயன்பெறலாம். விவசாயம் செய்பவர்கள் அதிகாலையில் எழுந்து தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு தங்கள் வேலைகளில் ஈடுபடுவதனால், அவர்கள் மூலமாக கிருமி எதுவும் நமக்கு பரவாது. இதைத் தவிர்த்து முழு நேரம் வெயிலில் இருந்து வேலை செய்வதும் மற்றும் இவர்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொள்வதினால் இவர்களுக்கு பாதிப்பின் சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே வேளாண்மைத்துறை இவர்களுக்கு விலக்கு அளித்து உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க – நாடே முடக்கத்தில் இருக்கும் பொழுது உங்கள் பணத்தை எப்படி செலவு செய்வது..!

முடுக்கத்தின் பயன்பாடு

நாடு முழுவதும் அடைக்கப்பட்ட நிலையில் நாம் காய்கறிகளை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். அதிலும் பல நாட்கள் கெடாமல் இருக்கும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கை அதிகளவில் வாங்கி கொண்டு, உடனடியாக கெடும்தன்மைகளைக் கொண்ட தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய் மற்றும் பழங்களை நாம் குறைவாக வாங்கிக் கொள்வது சிறந்தது. அதேபோல் தேவைக்கேற்ப உணவுகளை சமைத்து இந்த காய்கறிகளை சேமிக்கலாம். உங்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அனைத்தையும் தருவது இயற்கை மூலமாக உருவாக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள் தான். இதை அறிந்து இதை பாதுகாப்பான முறையில் வாங்கி குறைவாக பயன்படுத்த வேண்டும்.

அறுசுவை உணவு

தமிழர்களின் உணவு பாரம்பரியமாக கருதப்படுவது தான் இந்த அறுசுவை உணவு அதாவது புளிப்பு, துவர்ப்பு, உப்பு, உறைப்பு போன்ற அனைத்தையும் சேர்த்து நாம் சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் குறைகிறது இதைதான் முன்னோர்களும் பயன்படுத்தி வந்தார்கள். இதற்கு ஏற்ப திட்டமிட்டு உணவுகளை சமைக்க வேண்டும் அதற்கு போதுமான அளவு காய்கறிகள் அதற்குத் தேவையான பதார்த்தங்களை சமைத்து சாப்பிட வேண்டும்.

மளிகை பொருட்கள்

உங்கள் சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை கடைகளில் வாங்கி வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றார்போல் சமையுங்கள். உணவுகளை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது நமக்கு ஆரோக்கியத்தை தருகிறது அதை தவிர்த்து அதிகளவில் சமைத்து அதை குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இதையும் மீறி உங்கள் உணவுகள் மீதமானால் அதை வீட்டிற்கு வெளியே இருக்கும் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு அளித்து உணவின் பயனை முழுமையாக்கலாம்.

மேலும் படிக்க – 5 இந்திய பழக்கவழக்கங்கள் நம்மை பாதுகாக்கிறது..!

இது போன்ற சூழல்களில் வீட்டில் உள்ள அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சிறிய அலட்சியம் கூட உங்கள் வாழ்க்கையை பல வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும். எனவே இதை நன்கு அறிந்து பொறுப்புடன் வீட்டிலுள்ள அனைவருக்கும் உதவியாக உணவுகளை சமைத்து பகிர்ந்து சாப்பிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன