மூளை வளர்ச்சிக்கு சித்த மருத்துவம்..!

  • by
how siddha medical method helps in improving brain development

நம்முடைய உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன, ஆனால் அதனைப் பயன்படுத்துவதில் எல்லோருக்கும் ஒரு வித பயங்கள் நிலவுகிறது. சித்த மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலமாக ஒரு சில பக்க விளைவுகள் உண்டாகும் என்ற போலித் தனமான அறிக்கைகளினால் நம் மக்கள் சித்த மருத்துவத்தை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் பல வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு காரணம், அவர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவம் தான்.

ஆயுர்வேத மருந்துகள்

மூளை வளர்ச்சிக்கும் அதன் ஆற்றலை அதிகரிப்பதற்கும் சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இதனால் உங்களுக்கு எந்த ஊரு பின் விளைவுகளும் இல்லாமல் மிக ஆரோக்கியமான முறையில் உங்கள் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இதுபோல் சித்த மருத்துவத்தில் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை இந்தப் பதிவில் காணலாம்.

மூளை வளர்ச்சியை எப்படி சித்த மருத்துவத்தின் மூலம் எப்படி அதிகரிப்பது என்பதை எங்கள் நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

அஸ்வகந்தா

உங்கள் மூலையில் விஷத்தன்மை பரவாமல் பாதுகாக்கும் செயலை அஸ்வகந்தா செய்து வருகிறது. ஆனால் உலக அளவில் அஸ்வகந்தாவின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது, இதனால் இன்னும் சில வருடங்களில் அஸ்வகந்தாவின் உற்பத்தி முழுமையாக மறைந்து விடும் என சில சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். இதை உணவில் சேர்த்து பயன் படுத்துவதன் மூலமாக நமக்கு உண்டாகும் அனைத்து மூலை பிரச்சினைகளையும் தீர்க்கலாம்.

அதிமருதம்

அதிமதுரத்தை நாம் பயன்படுத்துவதன் மூலமாக புதிதாக எந்தவொரு நோய்த்தொற்றும் நம் உடலில் ஏற்படாது. இதை செல்லமாக மூலிகை சுரங்கம் என்றே அழைக்கிறார்கள். அத்தகைய ஏராளமான நன்மைகளை இந்த அதிமதுரத்தில் அடைந்துள்ளது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் அதிமதுரம் உள்ள உணவுப் பொருட்களை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – ஊட்டச்சத்து நிபுணர்களுடன் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள்..!

மஞ்சள்

மஞ்சளில் இயற்கையாகவே ஏராளமான எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன, இதை தினமும் சமையலில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய மூளைக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கின்றன. உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக மற்றும் ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் மஞ்சளைப் பயன்படுத்தி உணவுகளை பரிமாறுங்கள்.

ஜின்ஸெங்

உலக அளவில் ஆயுர்வேதத்தில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய மூலிகைப் பொருள் தான் ஜின்ஸெங். இது ஆசியாவில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதை பயன்படுத்தி இன்றும் சீனா போன்ற நாடுகளில் ஏராளமான ஆயுர்வேத பொருட்களை கண்டுபிடித்து வருகிறார்கள். இதை சரியான அளவு சாப்பிடுவதன் மூலமாக அல்சைமர் போன்ற வியாதிகளும் விரைவில் குணமாகும் என்கிறார்கள்.

இதைத் தவிர்த்து நம்மூரில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய எலுமிச்சையை சரியாக எடுத்துக்கொண்டாலும் நம்முடைய மூளையின் ஆற்றல் அதிகரித்து மற்றும் மூளையில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் தடுக்கலாம். நாம் எப்படி இயற்கை வழியை பின்தொடர்ந்து உணவுகளை சமைத்து சாப்பிடுகிறோமோ அதேபோல்தான் மருத்துவத்தையும் இயற்கை வழிப்படி பெறவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன