அனுமன் ஜெயந்தியை எப்படி கொண்டாடுவது..!

  • by
how should we celebrate hanuman jayanti

எங்கெல்லாம் ராம ஜெபம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமான் அமைதியாக அமர்ந்து இருப்பார் என்று இந்துக்கள் அதிகமாக நம்புகிறார்கள். தென்னிந்தியாவில் மார்கழி மாத அமாவாசையில் வரும் இந்த அனுமன் ஜெயந்தி, வட இந்தியாவில் சித்திரை மாத பவுர்ணமியில் கொண்டாடப்படுகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்து அனுமானை வழிபடுவதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும். அனுமான் ஜெயந்தி விரதம் இருப்பதன் மூலமாக நாம் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். அதேபோல் நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகும்.

விரதம் இருக்கும் முறை

அனுமான் ஜெயந்தி விரதத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு உணவருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள பூஜை அறையில் அனுமன் படத்தை வைத்து அவருக்கு துளசியின் மூலமாக அர்ச்சனை செய்வது சிறப்பாகும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் வெண்ணையை படைத்து வழிபட வேண்டும். அனுமனுக்கு ஆற்றலைத் தருவது அவரின் வால், எனவே அந்த வாலில் குங்குமப்பொட்டு வைத்து வழிபடுங்கள். இதைத் தவிர்த்து அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை மற்றும் இளநீர் போன்றவைகளை ஒன்று சேர்த்து நெய்வேத்தியம் செய்து படைக்கலாம்.

மேலும் படிக்க – பவுர்ணமி வழிபாடினாள் கிடைக்கும் நன்மைகள்..!

வழிபாட்டின் வித்தியாசங்கள்

இந்தியாவில் அனுமன் ஜெயந்தி வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள் குறிப்பாக தென்னிந்தியாவில் காரமான பொருட்கள் அதிகமாக கிடைப்பதால் அனுமனுக்கு பிடித்த உளுந்தை வைத்து வடைகளை மாலையாக படைப்பார்கள். அதுவே வடமாநிலத்தில் கரும்பு உற்பத்தி அதிகமாக இருப்பதினால் சர்க்கரை போன்ற இனிப்பை கொண்டு உளுந்தால் செய்யப்படும் ஜாங்கிரியை மாலையாக படைப்பார்கள். உளுந்து என்பது ராகுவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும், எனவே இதை வைத்து சமைக்கப்பட்ட உணவுகளை அனுமனுக்கு படைப்பார்கள்.

பூஜை செய்யுங்கள்

அனுமனுக்கு முழு ஆற்றலை அளிப்பதும் மற்றும் அவருடைய சக்திகள் அடைந்திருக்கும் பகுதியாக அனுமனின் வால் கருதப்படுகிறது. எனவே அனுமனுக்கு திலகம் வைப்பதைப் போல் அவர் வாழைக்கும் சந்தனம் மற்றும் குங்குமம்தின் மூலமாக திலகம் வைக்க வேண்டும். அது கலையும் போதெல்லாம் திலகத்தை புதுப்பிக்க வேண்டும். நாம் ராகுவின் தோஷத்தில் இருந்து விலகுவதற்காக அனுமனை வழிபடுகிறோம், இதைத் தவிர்த்து

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

வெண்ணை படைகள்

அனுமனுக்கு வடைமாலை தவிர்த்து வெண்ணையை படைக்க வேண்டும். வெண்ணையானது எப்படி சூரியனை கண்டவுடன் மெதுவாக உருகி வருமோ அதே போல் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் உருகும். திருமணமாகாத கன்னிப்பெண்கள் ஸ்ரீராம ஜெயத்தை எழுதி அனுமனுக்கு மாலையாக சார்த்த வேண்டும். இதன் மூலமாக அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மற்றும் அவர்கள் நினைத்த காரியமும் வெற்றி அடையும்.

மேலும் படிக்க – பங்குனி உத்திரத்தின் சிறப்பு வழிபாடு..!

வெற்றியடைய அனுமன் வழிபாடு

அனுமான் என்பவர் சொல்லின் செல்வன், இவரை வழிபடுவதன் மூலமாக நீங்கள் சிறந்த பேச்சாளராக மாற முடியுமா. அவரை முழு மனதுடன் வழங்குவதன் மூலமாக உங்கள் நாவிற்கு சக்திகளை அளிப்பார். எனவே அனுமான் ஜெயந்தி அன்று ராமர் கோவில் அல்லது ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை அல்லது அர்ச்சனையை செய்யுங்கள்.

சனிப் பெயர்ச்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், துன்பங்கள், தீயசக்திகளின் தாக்கங்கள், காத்து, கருப்பு, செய்வினை மற்றும் மன நோய் போன்ற அனைத்தையும் அனுமன் வழிபாட்டின் மூலம் நம்மால் தடுக்க முடியும். எனவே இன்றைய தினம் நீங்கள் விரதமிருந்து அனுமனுக்கு பூஜைகள் செய்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன