ராம நவமியை வீட்டில் கொண்டாடுவது எப்படி..!

  • by
how rama navami should be celebrated at home

ராம நவமி என்பது ஸ்ரீ ராமச்சந்திரனின்  பிறந்த நாளாகும். சைத்ரா சுக்லா பக்ஷாவின் ஒன்பதாவது நாளில் கொண்டாடப்படும் இந்த திருநாள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இந்துக்கள் மற்றும் இராமச்சந்திரனின் பக்தர்கள் இந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாம் கோவில்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே வீட்டில் இருந்தபடியே நம்முடைய பூஜையறையில் ஸ்ரீராம நவமியை எப்படி கொண்டாடுவது என்பதை காணலாம்.

விஷ்ணுவின் அவதாரம்

ஸ்ரீ ராமச்சந்திரன் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக பார்க்கப்பட்டார்கள். இவர்தான் இலங்கையை ஆண்ட மன்னரான ராவனனை வென்றவர். இவரின் மனைவி சீதையை விட்டு 14 ஆண்டுகள் வனவாசம் சென்று தன் தவத்தை நிறைவு செய்தார். மிகவும் பழமை வாய்ந்த இந்த இதிகாசத்தை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இதிகாசத்தில் தசரதன் மற்றும் கௌசல்யாவுக்கு மகனாக பிறந்தார் ஸ்ரீ ராமச்சந்திரன். அவர் பிறந்த நாளைதான் ராம நவமி என்றும் இந்துக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படிக்க – பிரம்மதேவன் எவ்வாறு தோன்றினார் !!!

இந்தியா முழுவதும் கொண்டாட்டம்

ஏப்ரல் 2, 2020 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் இந்த ராம நவமியை கொரோனா வைரஸ் தொற்றினால் யாரும் மிகப் பெரிய அளவில் கொண்டாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இல்லையெனில் இன்றைய தினம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய திருவிழா கோலமாக காணப்பட்டிருக்கும். அதை தவிர்த்து இந்துத்துவத்தை அதிகளவில் பரப்பும் இந்திய அரசாங்கமும் இதற்காக ஏராளமான ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். ஆனால் இந்தக் கொரோனா தொற்றினால் இந்த திருவிழா அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பூஜை செய்யலாம்

இன்றைய தினத்தில் நாம் கோவில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும் இந்த ராம நவமியை கொண்டாடும் வகையில் நம் வீட்டிலேயே எளிமையான முறையில் ராம நவமி பூஜை செய்யலாம். அதிகாலையில் எழுந்து வீட்டை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும், பின்பு பூஜை அறையும் சுத்தப்படுத்தி உங்களையும் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

பூஜையறையில் ராமரின் உருவ சிலை அல்லது அவரின் படத்தை வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் சீதை, லட்சுமணன் மற்றும் அனுமானின் படத்தையும் வைக்கலாம். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து பூஜைகளை துவங்கலாம்.

பூஜை வழிமுறைகள்

ராமருக்கு நாம் இனிப்புகள், உணவுகள் போன்றவற்றை படையலாக வைக்க வேண்டும். அதை தவிர்த்து அவரை பூக்களின் மூலமாக அலங்கரித்து கற்பூரம் மற்றும் அகர்பத்தி ஏற்றி அவரை வழிபட வேண்டும். தேவைப்பட்டால் பழங்கள் மற்றும் துளசி தீர்த்தத்தை அவர்களுக்கு படைக்கலாம். குங்குமம், மஞ்சள், பூக்கள் மூலமாக பூஜைகளை செய்யவேண்டும், பிறகு ராமருக்காக மந்திரங்களை ஜபித்து கற்பூரம் மற்றும் ஊதுபத்தி தீபத்தை அவர்களுக்கு காட்ட வேண்டும்.

மேலும் படிக்க – மகாபாரதம் – அர்ஜுனனின் கற்பூர புத்தி..!

பிரசாதம் பகிருங்கள்

பூஜை நிறைவடைந்தவுடன் அனைவரும் நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொள்ளுங்கள். பின்பு அந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிருங்கள். ஒரு சிலர் விரதம் இருந்து இந்த பூஜைகளை செய்வார்கள். எனவே இவர்கள் இந்த பிரசாதத்தை மதிய வேளையில் உண்டு அவர்களின் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இன்றைய தினத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். அதைத் தவிர்த்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக மற்றும் வேலைகளில் இடையூறுகள் ஏதேனும் இருந்தால் அதை தீர்க்கும் சக்தி ராமருக்கு உண்டு. எனவே இந்த நாளை சிறப்பாக பூஜித்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன