ஆபாச படங்கள் அதிகமாக பார்ப்பதினால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துக்கள்.!

how porn movies can affect your sexual life

ஆபாச படங்கள் அதிகமாக பார்க்கப்படும் பட்டியலில் உலக அளவில் இந்தியா தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது அதிலும் சிறப்புமிக்கது என்னவென்றால் ஆபாச படம் இணைய தளங்கள் அதிக அளவில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில கட்டுப்பாடுகளும் இதுபோன்ற படங்களை பார்ப்பதற்கு இருக்கின்றன இருந்தாலும் 18 வயது முதல் 34 வயது வரை உள்ள ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை தினமும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டாகப் போகிறது அல்லது ஏற்கனவே இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினை இருந்தாலும் ஆபாசப்படத்தினால்தான் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதை இவர்கள் அறியாமலேயே இருந்திருப்பார்கள்.

ஆபாசப்படங்களை அதிகளவில் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். ஆபாச படம் என்பது உண்மையான உடலுறவு கொள்ளும் முறை அல்ல ஓர் ஆண் அல்லது பெண் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ அதை தவறாக சித்திரிக்கப்படுவதே ஆபாச படத்தின் நோக்கம்.

மேலும் படிக்க – மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை போக்கும் வழிகள்.!

ஆண்கள் அல்லது பெண்கள் இதை தவறாக புரிந்து கொண்டு தங்கள் துணையும் இதுபோன்ற எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு சில முறைகள் செய்யும்போது சுவாரசியமாக இருக்கும் ஆனால் இதை பலமுறை செய்வது என்பது இயலாத காரியம். இதை உணராதவர்கள் அதன் மேல் மோகம் அதிகம் அடைந்து அதை செய்யும் தூண்டுதலுக்கு உள்ளாகிறார்கள் இதனால் உங்கள் துணையே அதிகமாக பாதிப்படைகிறார்கள்.

ஆபாச படத்தில் காண்பிப்பது போல் நம்பகத்தன்மை இல்லாத சில செயல்களை தங்கள் துணையை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இதை முதல் முறை உங்களுக்காக உங்கள் துணை செய்வார்கள் ஆனால் இதை பலமுறை நீங்கள் கேட்கும் போது உங்கள் மேல் ஒரு நம்பிக்கையில்லா தனம் தோன்றிவிடும். இது உங்கள் உறவை அதிகளவில் பாதிப்படைய செய்து விடும்.

மேலும் படிக்க – புளி சாப்பிட்டு வந்தால் வாழ்வில் சலிப்பு போகும்!

நீங்கள் ஆபாச படம் அதிகமாக பார்ப்பவராக இருந்தால் உங்கள் துணையை நீங்கள் சாதாரண ஒரு பொருளாகவே பார்க்க நேரிடும். அவருக்கும் ஒரு உயிர், உடல், உணர்வு இருப்பதை நீங்கள் மறந்து உங்கள் உணர்வுக்கேற்றபடி எல்லாம் அவர்களை சித்தரித்து அவர்களுடன் உடலுறவு கொள்ள நினைப்பீர்கள், இது பெரிய ஆபத்தில் முடிவடையும்.

மற்றவர்கள் உணர்வுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கும் அளவிற்கு தான் உங்கள் உறவு இருக்க வேண்டும். ஆனால் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் தங்கள் உணர்வு மற்றும் உணர்ச்சிகளை பற்றி மட்டுமே சிந்தித்து மற்றவர்களின் எண்ணங்களைப் பற்றி நினைப்பதில்லை. ஒருமுறை இதுபோல் உங்களை வேறு யாராவது ஒருவர் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து பாருங்கள் அந்த வலி உங்களுக்கு புரியும்.

பெரும்பாலான ஆபாச படங்களில் தகாத உறவுகளை அதிகமாக காண்பிப்பார்கள். இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக காண்பிப்பதால் ஒரு சிலர் நிஜவாழ்க்கையில் இதை செய்து பார்க்கிறார்கள். ஆரம்பத்தில் இது ஒரு அற்புத உணர்வைத் தந்தாலும் நாட்கள் கழிய இது உங்கள் மேல் உங்களுக்கே ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும், இதனால் பாதிப்படைவது நீங்கள்தான்.

மேலும் படிக்க – புடலங்காய் சாப்பிட்டு வந்தால் பலம் பெறலாம்!

காதலிக்கும் சமயத்தில் அல்லது திருமணமான பிறகு நீங்கள் ஒன்றாக வெளியே சென்று நாட்களைக் கழிக்கும் நாட்கள் இருந்திருக்கும் ஆனால் இப்போது உங்களுக்கு அதிகமாக உடல் சார்ந்த இன்பத்திலேயே உங்கள் நோக்கம் இருக்கும். இதனால் முடிந்த வரை உங்கள் விடுமுறை நாட்களை  படுக்கையறையில் நீங்கள் கழித்து விடுகிறீர்கள். இது ஒருவருக்கு இன்பத்தை தந்தாலும் மற்றொருவருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் உறவில் சமநிலையாக இருப்பது நல்லது உங்களுக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டாலும் அதை அவர்கள் எடுத்துச் சொல்லுங்கள் ஒத்துழைத்தால் இருவரும் ஒன்று சேர்ந்து இது போன்ற முயற்சிகளை செய்வது நல்லது இல்லை எனில் உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

1 thought on “ஆபாச படங்கள் அதிகமாக பார்ப்பதினால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துக்கள்.!”

  1. Pingback: உடலுறவுக்குப் பின் தம்பதியர்கள் செய்ய வேண்டியவை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன