உங்கள் எதிர்காலத்தை கணிக்கும் கைரேகை..!

  • by
how palm reading can predict your life happenings

உங்கள் கைகளில் இருக்கும் ரேகையை வைத்து உங்கள் எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியும், இதன் மூலமாக உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகப்போகிறது, எத்தனை குழந்தை பிறக்கப்போகிறது, எதுவரை நீங்கள் படிக்கப் போகிறீர்கள் போன்ற அனைத்தையும் உங்கள் கைகளில் உள்ள ரேகைகள் பொருத்து ஜோதிடர்களால் கணிக்க முடியும். இந்த வழிமுறைகள் தென்னிந்தியாவில் தொடக்கப்பட்டு உலகம் முழுக்க இருக்கும் மக்கள் இப்போது பின் தொடர்ந்து வருகிறார்கள். உங்கள் கைகளில் இருக்கும் முக்கியமான ரேகைகளைப் பொறுத்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுள் ரேகை

ஆயில் ரேகை என்பது உங்கள் ஆயுளை குறிக்கிறது, ஆனால் நீங்கள் எத்தனை வருடம் வாழப் போகிறீர்கள் என்பதை கணிக்க கூடியது ஆயுள் ரேகை அல்ல உங்கள் வாழ்க்கையின் தரம் மற்றும் ஆரோக்கியமான சூழல் எப்படி இருக்கும் போன்றவற்றை குறிப்பதே ஆயுள் ரேகை. இது உங்கள் கட்டை விரல் இடையே துவங்கி மணிக்கட்டு வரை செல்லும், அதைப் பொறுத்தே உங்கள் ஆரோக்கியம் அமைகிறது. உங்கள் ஆயுள் ரேகை மிகவும் திடமாகவும், வலிமையாகவும் இருந்தால் நீங்கள் அவ்வளவு எளிதில் எந்த ஒரு நோய் தொற்றினால் பாதிப்படைய மாட்டீர்கள். அதே சமயத்தில் உங்கள் ரேகை மெலிதாகவும் அல்லது இடையிடையே விடுபட்டிருந்தால் நீங்கள் மன அழுத்தத்தில் அதிகமாக சிக்கிக் கொள்வீர்கள்.

விதி ரேகை

விதி ரேகை என்பது நம்முடைய நடு விரலில் இருந்து தொடங்கப்பட்டு மணிக்கட்டு வரை செல்லும், ஒரு சிலருக்கு பாதையில் இருந்து துவங்கி பாதியில் முடியும். இது நம்முடைய விதியை குறிக்கிறது. இந்த ரேகை பலமாகவும், தீர்க்கமாகவும் இருந்தால் உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதே சமயத்தில் விதிரேகை இல்லாமல் இருந்தாலோ அல்லது மிக மெலிதாக இருந்தாலே நீங்கள் அதிகமாக மற்றவரை சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு இரண்டு விதிரேகை இருக்கும் இவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றையும் புரிந்து ஆரோக்கியமாகவும் வாழ கூடியவர்.

மேலும் படிக்க – ஜாதகத்தில் இருக்கும் தோஷம் மற்றும் தீர்வு..!

இதய ரேகை

இதய ரேகை என்பது உங்கள் கையின் பக்கவாட்டில் துவங்கி ஆள்காட்டி விரலை நோக்கி செல்லும். இதை பார்ப்பதற்கு பாதி நிலவின் பாதியாக இருக்கும். இது உங்களின் காதல், உணர்வு மற்றும் அன்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கணக்கிடும். உங்கள் இதய ரேகை பாதியிலிருந்து தொடங்கினாள் உங்களுக்கு சுமாரான மன வலிமை இருக்கும். உங்கள் இதய ரேகை சுண்டு விரலில் இருந்து தொடங்கப்பட்டால் நீங்கள் அற்புதமான காதல் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். அதே சமயத்தில் உங்கள் இதய ரேகை சுண்டு விரலில் இருந்து விலகி இருந்தால் நீங்கள் பணிவானவராகவும் மற்றும் சுயநலம் அற்றவராக இருப்பீர்கள். எல்லோரையும் எளிதில் நண்பர்களாக ஆகிவிடுவீர்கள்.

இதேபோல் தலைமை கோடு, காதல் ரேகை, பணம் ரேகை, கல்யாண ரேகை போன்றவைகள் இருக்கின்றது. இவை அனைத்தையும் தெரிந்து உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்துங்கள். உங்கள் கைகளில் உள்ள ரேகைகள் நீங்கள் வளரும் போது சில மாற்றங்கள் உண்டாகிறது. எனவே கைரேகையை அவ்வப்போது கணித்து கொண்டே இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன