எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

  • by
how numerology can help you in changing your life

நாம் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏற்கனவே கணக்கிடப் பட்டுள்ளது என்பதை நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா.? நம்முடைய குடும்பம், குழந்தைகள், மனைவி, தாய், தந்தை போன்ற அனைத்து உறவுகளும் தற்செயலாக நடந்தது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் ஏற்கனவே கணக்கிடப்பட்டவை, அதை நாம் முன்பே அறிந்து கொள்வதற்காகவே நமக்கு எண் கணிதம் உதவுகிறது, இதை எண் ஜோதிடம் என்றும் அழைக்கலாம். நம்முடைய எதிர்காலத்தில் நடக்க இருக்கும் அனைத்து சம்பவங்களும் எண்களின் அடிப்படையிலேயே நடக்கிறது, இதை நாம் அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு நம் வாழ்க்கையை அற்புதமானதாக மாற்றலாம்.

எண் கணிதம்

பிரசவத்தின் போது பிறக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் அதற்கு ஏற்ற நாள் மற்றும் நேரத்தில் தான் பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறந்த நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையிலேயே அந்த குழந்தையின் ஜாதகம் அமைகிறது. இதை சிறந்த வல்லுநர்கள் கணக்கிட்டு அந்த குழந்தையின் எதிர்காலத்தை சரியாக கணக்கிடுகிறார்கள். அதைத் தவிர்த்து அந்த குழந்தை வளர்ந்து வரும் சமயங்களில் தொடங்கப்படும் அனைத்துக் காரியங்களும் ஒரு குறிப்பிட்ட எண்னை சார்ந்து இருக்க வேண்டும் என்றும் இவர்கள் முன்பே தீர்மானித்துக் கொள்கிறார்கள். அதன் வழியில் நடப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வி என்பதை காணாமல் வெற்றியுடன் வாழ்வார்கள்.

மேலும் படிக்க – செயலிகளின் மூலமாக உதவும் ஜோதிடர்கள்..!

எண் ஜோதிடர்கள்

எண் கணிதத்தில் வல்லுனர்களாக திகழும் ஏராளமான ஜோதிடர்களின் யோசனைகளைக் கேட்டு வாழ்பவர்கள் இன்று எட்டாத உயரத்தில் இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் தொடங்கப்படும் ஒவ்வொரு காரியமும் சரியான நாள் மற்றும் நேரத்தில் தொடங்க வேண்டும். இதன் மூலமாக உங்கள் தொழில் அல்லது செயல் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். எண் கணிதத்தை சரியாக பயின்று முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஜோதிடத்தை சரியாக செய்து வருகிறார்கள். இவர்களின் கணிப்பு ஒவ்வொன்றும் சரியாகவே இருந்து வருகிறது, எனவே உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு தொடக்கம் தேவை என்றால் எண் ஜோதிடத்தை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

எதிர்கால கணக்கு

உங்கள் எதிர்காலத்தில் நடக்க உள்ள அனைத்து சம்பவங்களையும் எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கான யோசனைகளை இந்த எண் ஜோதிடத்தின் மூலமாக பெறலாம். நம் வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாம் மனத்தில் உண்டாக்கும் கணக்கில் மூலமாகவே நிகழ்கிறது. எல்லா செயல்களுக்கும் பின்னாலும் ஏதேனும் ஒரு கணிதம் இருக்கும். மேலே உயரப் பறக்கும் ராக்கெட் முதல் தரையில் நடக்கும் மனிதர்கள் வரை கணக்கின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. அந்த கணக்களை சரியாக கணித்து அதற்கேற்ப நம் வாழ்க்கையை கொண்டு சென்றால் மட்டுமே நாம் வெற்றியை காண முடியும்.

மேலும் படிக்க – ஜோதிடர் ஷங்கர் ஹெக்டி.!

எல்லாமே ஆண்டவனின் கணக்குபடி தான் நடந்து வருகிறது என்று சொல்பவர்களும் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இது போன்ற எண் கணிதத்தின் மூலமாக நிகழ்கிறது என்று நம்புகிறார்கள். சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை, வானத்தில் இருக்கும் அனைத்து கிரகங்கள் செல்லும் திசைகள், இரவு, பகல், நாள், நேரம், மாதம், வருடம் போன்ற அனைத்துமே எண் கணிதத்தை சார்ந்த செயல்படுகிறது. எனவே இதன் தெளிவை அறிந்து, இது சம்பந்தமான அனைத்து கேள்வி மற்றும் பதில்களை இந்த செயலியில் இருக்கும் வல்லுநர்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன