நாம் குடிக்கும் நீரில்  எவ்வளவு உப்புக்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா???

  • by
how much salt varieties are present in water

ஒரு மனிதன் உணவு உண்ணாமல் கூட பல நாட்கள் வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் அருந்தாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. நம் உடல் 70% நீரினால் ஆனது தான்.

” நீர் இன்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வாக்கு படி இவ்வுலகில் நீர் இல்லாமல் எதுவுமே இல்லை. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நீரை நாம் குடிக்கும் போது அதிலிருந்து நம் உடலுக்கு தேவையான சத்துக்களை உடல் எடுத்துக்கொள்கிறோம்.

நாம் குடிக்கும் நீரில் தாது உப்புக்கள் கனிமங்கள் போன்றவை அடங்கியுள்ளன. இவை நம் உடலுக்கு தேவையான அளவு சென்றால் மட்டுமே நன்மையை அளிக்கும். இதன் அளவு அதிகமானலும் குறைவானாலும் பல பிரச்சனைகள் நம்மை வந்தடையும்.

நாம் குடிக்கும் நீரின் தன்மையை எவ்வாறு கண்டறிவது?

குழாயில் வரும் நீர் ஆனாலும் சரி பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் ஆனாலும் சரி ஒவ்வொன்றிலும் அதில் உள்ள உப்புக்கள் மற்றும் கனிமங்களின் அடிப்படையில் அதனை பிரித்து வைத்திருப்பார்கள். இதனை கண்டறிய TDS எனும் கருவியை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – ஆவாரம் பொடியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

(total dissolved solids) இந்த கருவியானது தண்ணீரில் கரைந்துள்ள கண்ணுக்குத்தெரியாத உப்புகள், ஆர்கானிக் பொருள்கள், கனிமங்கள் இவை அனைத்தும் எவ்வளவு உள்ளது என துல்லியமாக கணித்து கூறும்.

கனிமங்கள் மற்றும் தாது உப்புகளின் அளவை எவ்வாறு கண்டறிவது

மைக்ரோஸ்கோப் மட்டுமே பார்க்கக் கூடிய இவ்வகையான உப்புக்கள் மற்றும் கனிமங்களை TDS கருவிக்கொண்டு பார்க்கலாம். சர்வதேச நிறுவனமான WHO தண்ணீரில் கரைந்துள்ள பொருள்களின் அடிப்படையில் அதனை வரிசைப்படுத்தியுள்ளது.

TDS என்றால் என்ன? 

Total dissolvd Solides தண்ணீரில் கரைந்துள்ள திரவங்கள் என்று பொருள். தண்ணீரில் எவ்வாறு TDS உருவாகிறது என்றால் ஓடையில் ஓடும் நீரில் இலைகள் குப்பைகள் விழுந்திருப்பதை பார்ப்போம். அதில் உள்ள உப்புகளும், கனிமங்களும் அந்த நீரில் கரைந்து விடுவதால் அந்த நீரிலும் உப்புத் தன்மை அதிகமாகிறது.

இதேபோல் சாயப்பட்டறை யில் இருந்து வெளிவரும் கழிவுகளை நம் தண்ணீருடன் கலப்பதாலும் ஆர்கானிக் பொருட்களின் சதவீதம் அதிகரிக்கிறது . மேலும் பாறை இடுக்குகளில் இருந்து வரும் தண்ணீரில் பாறைகளில் இயற்கையாகவே இருக்கும் உப்புகள் அந்த தண்ணீரால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. இதனால் தான் நாம் பயன்படுத்தும் போர்தண்ணீரில் அதிகளவு உப்புகள் இருக்கின்றன. 

உப்புக்கள் அதிகமாவதால் ஏற்படும் பிரச்சனை

பெரும்பாலும் உப்புகள் அதிகம் உள்ள தண்ணீரை நாம் பருகுவதால் சிறுநீரகத்தில் அந்த உப்புக்கள் அப்படியே தங்கிவிடுகின்றன. இதனால் சிறுநீரகம் செயலிழந்து நோய்க்கு உட்படுகிறது.

உப்பு குறைவதால் ஏற்படும் பிரச்சனை 

தண்ணீரில் உள்ள உப்பின் அளவு மிகவும் குறைவானலும் நம் உடலுக்கு தேவையான கால்சியம். மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் கிடைக்காமல் போவதால் எலும்புகள் தேய்மானம் அடைவதோடு நம் உடல் ஆரோக்கியமாக இயங்கவும் அது தடையாக இருக்கிறது.

TDSஅளவுப்படி தண்ணீரின் தூய்மை தன்மை 

அதாவது 300 ppm இதற்கு குறைவான TDS உள்ள நீர்தான் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளது. இதில் கனிமங்கள் உப்புக்கள் அனைத்தும் சரியான அளவில் இருக்கிறது. 

300 முதல் 600 வரை உள்ள தண்ணீரை நாம் நேரடியாக குடிக்க பயன்படுத்த கூடாது. சமையல் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

600 முதல் 900 வரை உள்ள தண்ணீர்  குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. இந்த அளவில் தண்ணீரை பயன்படுத்தினால் தான் உடலில் தீங்கு விளைவிக்கும் உப்புகள் படிகின்றன.

1200 ppm உள்ள தண்ணீரை துணி துவைத்தல் , கார் கழுவுதல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் நிச்சயமாக அதைக் குடிக்க பயன்படுத்தவே கூடாது. மீறி பயன்படுத்தினால் நாற்பது வயதிற்கு மேல் வரும் சிறுநீரக பிரச்சனைகள் இருபது வயதிலேயே வந்துவிடும்.

தண்ணீரை பார்த்த உடன் இவையெல்லாம் நம் கண்ணுக்கு தெரிந்து விடாது. அதற்காகத்தான் இந்த TDS கருவி பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க – குழந்தைகள் விளையாடுவதற்காக ரிமோட்டை கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்??? உஷார்!

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உப்புகள் பாதரசம், லெட் போன்றவை கேன்சர் கூட வர வைக்கின்றன. இவையும் தான் நாம் பயன்படுத்தும் உப்பு தண்ணீரில் கலந்துள்ளது.

இது TDS  கருவியை பயன்படுத்தினால் மட்டுமே தெரியும். இது பயன்படுத்துவதற்கும் எளிமையாக தான் இருக்கும் நாம் பயன்படுத்தும் நீரினை இந்த கருவியின் உள் செலுத்தி  ஆன் செய்தால் போதும் நாம் பயன்படுத்தும் நீரின் டிடிஎஸ் எவ்வளவு என்பதை துல்லியமாக கணித்து கூறி விடும் .இதன் விலையும் மிக குறைவு. ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது இதை வாங்கி பயன்படுத்தி நம் உடலை சீராக பேணிக்காப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன