சொட்டை விழாமல் இருப்பதற்கு இதை செய்யுங்கள்..!

How men and women can get rid of baldness using these home ingredients

ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய வருத்தம் தங்களின் கூந்தல் உதிர்தலை தங்கள் கண்களில் பார்ப்பதுதான். சிறு வயது முதல் நமது கூந்தல் அழகை பராமரிப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை நாம் செய்கிறோம். ஆனால் ஒரு சில வயதை எட்டும் போது நம்மை அறியாமல் நமது கூந்தல் அவ்வப்போது உதிர்ந்து கொண்டே போகிறது. இதனால் நமது மனம் உடைந்து ஏதோ மிகப்பெரிய துயரம் நமது வாழ்க்கையில் சூழ்ந்துள்ளதைப்போல் நாம் நடந்து கொள்வோம்.

முடி உதிர்தலை தடுக்கும் வழிகள்

நமது கூந்தல் உதிர்வதற்கான காரணம் நாம் அதிகமாக வெவ்வேறுவிதமான கெமிக்கல்களை நம் தலைக்கு பயன்படுத்தி வருவதுதான். நாம் எப்போது அழகுசாதன நிலையத்திற்கு சென்றாலும் நாம் அறியாத சில பொருட்களை நமது கூந்தலில் தடவி மசாஜ் செய்வார்கள். இதனால் உங்கள் கூந்தல் வலுவிழக்க வாய்ப்புள்ளது. 

அதிகமான மாசு மற்றும் அழுக்கினால் உங்கள் தலைமுடி பாதிப்படைகிறது. அதனால் இளமையில் உங்களுக்கு சொட்டை ஏற்படுகிறது. ஒருசிலருக்கு மரபணு பிரச்சினைகளினால் முடிஉதிர்தல் ஏற்படலாம். இதை எதிர்காலத்தில் மரபணு மாற்ற மருந்துகள் வந்தால் இதையும் குணப்படுத்தலாம்.

மேலும் படிக்க – திரிபாலா ஆரோக்கியத்தின் ஆசானுன்னு சொல்லலாம்.!

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எண்ணெய் குளியல்

முடி உதிர்தல், முடி உடைதல், வரட்சி போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருப்பது இந்த எண்ணெய் குளியல். இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடேற்றி பின்பு உங்கள் தலை தாங்கும் அளவிற்கான சூட்டில் எண்ணையை நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு மணிநேரம் மசாஜ் செய்து ஊற வைத்து பிறகு ஷாம்புவை கொண்டு வெந்நீரில் குளித்தால் உங்கள் கூந்தல் வலுவடையும். இதை வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை செய்வது நல்லது.

மேலும் படிக்க – பாசிப்பயிறு முளைக்கட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்..!

இயற்கை குளியல்

இயற்கையான குளியல் மேற்கொண்டால் நமது கூந்தல் உதிர்வது மற்றும் முடி இல்லாத பகுதியில் கூட முடி முளைக்கும். அதென்ன இயற்கை குளியல் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும், இயற்கை குளியல் என்றால் இஞ்சி, பூண்டு, வெங்காய சாறுகளை எடுத்து இரவு தூங்குவதற்கு முன்பு நமது தலை வேறு வரை படும்படி நன்கு தேய்த்து, பிறகு காலையில் எழுந்து குளிப்பது தான் இயற்கை குளியல். இதன் மூலம் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முடியும்.

லாவண்டர் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யை கொண்டு சுமார் ஒரு மணிநேரம் தலையில் நன்கு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளராத பகுதியில் கூட முடி வளர்தலை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – அழகான வெண்மை நிற நகப் பராமரிப்புக்கு

உடல் மற்றும் மன அமைதி தேவை

நமது உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்டட் கிரீன் டியில் இருந்து கிடைக்கிறது. நாம் அதை அருந்துவது நல்லது. அதே சமயங்களில் அதிகாலையில் எழுந்து மனநிறைவைத் தரும் யோகா பயிற்சியை செய்வதால் முடி உதிர்தல் குறைந்து கூந்தல் மீண்டும் வளர்கிறது என்பது நிரூபணமாகி உள்ளது. எனவே இதை பயன்படுத்தி உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

நமக்கு அழகைத் தரும் கூந்தலை நாம் இளம் வயது முதல் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் முதுமை காலங்களில் அல்லது அதற்கு முன் இருக்கும் காலங்களில் முடிஉதிர்தல் ஏற்படுவதை கண்டு கவலைப்படுவது தேவையற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன