கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்..!

  • by
how many people are affected for corona virus

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் அதிகமாக சென்று உள்ளது. அதிலும் சைனாவில் தொடங்கப்பட்ட இந்த நோய்த்தொற்று படிப்படியாக எல்லா நாட்டிற்கும் சென்ற இப்போது இத்தாலியில் உயிர் இறப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனா வைரஸ் உலக அளவில் மற்றும் இந்திய அளவில் எவ்விதமான தாக்கத்தை உண்டாக்கி உள்ளது என்பதைக் காணலாம்.

கரோனா வைரஸ்

யுகான் மாநிலத்தில் தொடங்கிய இந்த கரோனா வைரஸ் இப்பொழுது சைனாவில் படிப்படியாக குறைந்து உள்ளது. சைனாவில் சில தினங்களாகவே கரோனா வைரஸ் புதிதாக யாரையும் தாக்கவில்லை. அதைத் தவிர்த்து பாதிப்புகள் உள்ளவர்கள் படிப்படியாக குணமடைந்து அவர்களின் வீட்டிற்கு திரும்பி உள்ளார்கள். ஆனால் இந்த வைரஸ் மற்ற நாடுகளை பெரிதாக தாக்கி வருகிறது.

மேலும் படிக்க – கரோனா பற்றிய சில அடிப்படை சந்தேகங்கள் என்ன???

இத்தாலி பாதிப்பு

சில வாரங்களுக்கு முன்பு ஒன்றிரண்டு பாதிப்புகள் இருந்த இத்தாலி நாடு இப்போது சைனா விடும் போட்டி போடும் அளவிற்கு பெருகி உள்ளது. அதை தவிர்த்து சீனாவிற்கு அடுத்தபடியாக ஏராளமான உயிரிழப்புகள் இத்தாலியின் நிகழ்ந்து வருகிறது. 22 மார்ச் ஒருநாள் மட்டுமே கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்கள். எனவே இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் இத்தாலி பல நாடுகளின் உதவியை எதிர்பார்த்து வருகிறது. இனிமேல் சைனாவில் பணிபுரிந்த மருத்துவர்கள் இத்தாலிக்குச் சென்று தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் கரோனா வைரஸ்

இந்தியாவில், 23 மார்ச் மாதம் முதல் பல மாநிலங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. எனவே ஒரு சில மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு யாராலயும் சொல்ல முடியாது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 89 நபர்கள் கரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி உள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 புதிய நபர்களை கண்டறிந்துள்ளார்கள்.

22ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை புதுடெல்லி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து எந்த ஒரு போக்குவரத்தும் மற்ற மாநிலங்களுக்கு செல்லாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பாதிப்படையும் உலக நாடுகள்

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 396 பேர் கரோனா பாதிப்பில் சிக்கி உள்ளார்கள். உலகம் முழுக்க 14,500 பேர் உயிரிழந்த நிலையில் இதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பஞ்சாப், டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இது நம் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் தான் கரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் மூன்று பேரும் பாதித்திருந்தாலும் இவர்கள் மூலமாக வேறு யாராவது ஒருவருக்கு பரவியிருந்தால் அது படிப்படியாக உயர வாய்ப்புள்ளது. எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது.

மேலும் படிக்க – கரோனாவிற்க்கு மருந்து….! மாற்றி யோசிக்கும் அமெரிக்கா!

மாவட்டங்கள் முழக்கம்

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு போன்ற மிகப்பெரிய மாவட்டங்கள் முடக்கத்தில் உள்ளது. இங்கிருந்து யாரும் வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே இதற்கு எல்லோரும் ஒத்துழைத்து மார்ச் 31ம் தேதி வரை அமைதி காத்திருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி எல்லா மாநிலங்களும் பாதுகாப்பாகவும், முடிந்தவரை எல்லா மாநிலங்களையும் முடக்க எல்லா மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 68 பேர் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளார்கள். எனவே இதை அனைத்தையும் தவிர்க்க வேண்டுமென்றால் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே கரோனா வைரசை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் நம் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டு, நம் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன