கரோனா வைரஸ் எவ்வளவு நாள் நம் ஆடைகளின் மேல் இருக்கும்..!

  • by
how many days does corona lives in our clothes

கரோனா வைரஸ் நம் உடலில் பரவுதற்கு முன்பாக நம்முடைய ஆடைகள் அல்லது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மேல் பரவுகிறது. இதை தொடுவதன் மூலமாகவே தான் அந்த வைரஸ் மனிதர்களுக்கும் நுழைகிறது. சராசரியாக கரோனா வைரஸ் ஒவ்வொரு பொருட்களின் மீது ஒவ்வொரு மணி நேரம் மற்றும் ஒவ்வொரு நாட்கள் உயிர்வாழும் எனவே அது எந்தப் பொருளில் எவ்வளவு நாள் உயிர்வாழும் என்பதை காணலாம்.

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

கரோனா வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைன்லேஸ் ஸ்டீலில் கிட்டத்தட்ட 2 முதல் 6 நாட்கள் வரை உயிர்வாழும். எனவே நீங்கள் வெளியே செல்லும் போது வீட்டிலிருந்து துணிப்பையில் எடுத்து செல்லுங்கள். அதைப்போல் வீட்டிற்கு வருபவர்களுக்கு பேப்பர் கப் போன்றவைகள் மூலமாக தேநீர் மற்றும் குடிநீரை அளியுங்கள். வீட்டிற்கு வரக் கூடிய எந்த ஒரு பிளாஸ்டிக் பொருட்களையும் அனுமதிக்காதீர்கள்.

மேலும் படிக்க – ஹைபிரிட் காய்கறிகளை தவிர்த்து இயற்கை உணவை சாப்பிடுங்கள்..!

காற்று மற்றும் தாமிரம்

காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் கரோனா கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை உயிர் வாழும். அதேபோல் நாம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தக்கூடிய தாமிரம் போன்ற பொருட்களிலும் 3 மணி நேரம் உயிர் வாழும் எனவே இதை அறிந்து பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். அதேபோல் தாமிரம் போன்ற பொருட்களை மூன்று மணி நேரம் கழித்து நன்கு கழுவி பயன்படுத்தவும்.

காகிதம் மற்றும் மரப் பொருட்கள்

காகிதம் மற்றும் மரப் பொருட்களில் கிட்டத்தட்ட நான்கு நாள் வரை கரோனா உயிர் வாழும். இனிமேல் புதிதாக வாங்க கூடிய இது போன்ற பொருட்களை நான்கு நாட்களுக்குப் பிறகு தொட்டு பயன்படுத்துவது சிறந்தது.

அலுமினியம் மற்றும் கண்ணாடிப் பொருட்கள்

அலுமினியத்தில் கரோனா வைரஸ் 2 முதல் 8 மணி நேரம் மட்டுமே உயிர்வாழும் ஆனால் கண்ணாடி பொருட்களில் கரோனா கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும். எனவே இது போன்ற பொருட்களை கையுறைகளை அணிந்து கழுவி பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் படிக்க – கொரானாவால் ஸ்தம்பிக்கும் தினசரி வாழ்வு

ஆடைகள் மற்றும் அட்டைப் பெட்டிகள்

கரோனா நம்மை தாக்குவதற்கு மிக முக்கியமான காரணம் அது நம்முடைய ஆடைகளில் தொட்டி கொள்வதுதான். எனவே கரோனா வைரஸ் ஆடைகளின் மேல் ஒரு சில மணி நேரங்கள் முதல் ஒரு சில நாட்கள் வரை உயிர்வாழும் எனவே வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ஆடைகளை தண்ணீரில் ஊறவைத்து வைப்பது சிறந்தது. அதேபோல அட்டைப் பெட்டிகளில் கரோனா வைரஸ் 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழும்.

இதை நன்கு அறிந்து அதற்கேற்ப செயல்படுவதன் மூலமாக உங்கள் வீட்டிற்குள் நுழையும் கரோனா வைரஸை தடுக்கலாம். அதே போல் உங்கள் மேல் பாதிக்கப்பட்டிருக்கும் வைரஸ்களை குறைக்க இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை பலமுறை சுத்தம் செய்து வீட்டில் அனுமதிப்பதே சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன