அதிகமான ஆப்பிளை உட்கொண்டால் ஆரோக்கியம் பாதிக்கும்.!

how many apples you can eat in a day to stay healthy

மிக ஆரோக்கியமான பழம் என்று எல்லோராலும் பார்க்கப்படுவது ஆப்பிள்தான். யாருக்காவது உடல்நிலை கோளாறு அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு நாம் ஆப்பிளை வாங்கிச் செல்வோம் ஏனென்றால் இதில் இல்லாத சத்துக்களே கிடையாது. ஏராளமான சத்துக்களைக் கொண்ட இதை தினமும் ஒன்றை உட்கொண்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதேபோல்தான் ஆப்பிளின் குணங்களும் உள்ளது. ஆனால் இதனாலும் சில பக்க விளைவுகள் நமக்கு ஏற்படும் அது என்னவென்று பார்ப்போம்.

ஆப்பிள் உட்கொள்வதன் மூலம் நமது இருதய நோய் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆனால் அதிகமாக ஆப்பிளை உட்கொள்வதினால் நமது பற்கள் பாதிப்படைகிறது. இதில் இருக்கும் அமிலம் நமது பற்களை தேய்மான படுத்தி அதன் ஆரோக்கியத்தை தடுக்கிறது.

மேலும் படிக்க – மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

ஆப்பிளில் கலோரிகள் இருப்பதால் அதை ஒன்றுக்கும் அதிகமாக அதாவது நான்கு முதல் ஐந்து ஆப்பிளை உண்ணுவதன் மூலம் கிட்டத்தட்ட 3500 கலோரிகள் நம் உடலில் சேர்கிறது. இதனால் நமது உடல் பருமன் அடைந்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் இருப்பதினால் நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. அதுவே நம் அதிக அளவில் எடுப்பதன் மூலம் அது கொழுப்பாக மாறி நம்மை குண்டாக மாற்றுகிறது. இது மட்டுமில்லாமல் ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் உண்ணுவதன் மூலம் நமது எலும்புகள் மற்றும் இருதயம் பாதிப்படைகிறது. இதில் சர்க்கரை அதிகமாக இருப்பதினால் இருதயத்திற்கு தீங்காக அமைகிறது. எனவே இதை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் ஏதாவது உணவு அருந்தி சிறிய இடைவெளிவிட்டு உண்ணுவது நல்லது.

மேலும் படிக்க – கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

இதை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் ஆப்பிளை நாம் குறைவாக உண்பதன் மூலம் நன்மைகள் அதிகமாக கிடைக்கிறது. இதை அளவுக்கு மிஞ்சி உண்டால் அது விஷமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆப்பிள் மட்டுமல்லாமல் எந்த ஒரு ஆரோக்கியமான உணவையும் அளவாக சாப்பிடுவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன