கேரளாவில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தினார்கள்..!

  • by
how kerala controlled corona virus

கொரோனா வைரஸ் தாக்குதல் முதல் முதலில் சீனாவிலுள்ள யுகான் மாநிலத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இங்கே பயிற்சி பெற்று வந்த கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி உள்ளார்கள். இப்படி தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணும் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் சில நாட்களில் தனது உடலில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் அந்தப் பெண் மருத்துவமனையை அனுகினால். பின்பு அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முதல் நோயாளி

சீனாவில் இருந்து கிளம்பிய இந்த பெண்ணிற்கு எல்லா விதமான மருத்துவ பரிசோதனைகளையும் செய்து, சீன அரசு வழியனுப்பி வைத்ததிருந்தும் இந்த நோய்த்தொற்று ஆரம்பத்தில் வெளிக்காட்டாததினால் அடுத்த இரண்டு வாரங்களில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து மேலும் 2 மாணவர்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் மாநிலமாக கேரளா விளங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று முதன் முதலில் தோன்றிய மாநிலமாக கேரளா பார்க்கப்பட்டது. எனவே இந்த சூழ்நிலையை அவர்கள் எப்படி கையாளப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மத்திய அரசு இருந்தது. இருந்தும் தங்களின் முழுத் திறமையை பயன்படுத்தி முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒரு மாதத்திற்குள் குணமாக்கி அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் படிக்க – ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொடுத்த இந்தியா!

குணமடைந்தவர்கள்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் அதிகமாக இருந்தா இதே கேரள மாநிலத்தில் இப்போது அந்த தொற்று புதிதாக யாருக்கும் பரவாமல் மிக ஆரோக்கியமான முறையில் கொரோனா தொற்று பரவுதல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதைத் தவிர்த்து இன்றுவரை 195 பேர் மட்டுமே இந்த தொற்றினால் பாதிப்படைந்துள்ளார்கள். அதில் 179 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இப்போது கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் ஆறாகவே உள்ளது. இச்சமயத்தில் இவர்கள் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து மற்ற மாநிலத்தவர்களும் இவர்கள் வழி முறையை கற்றுக்கொள்ள வேண்டும்.

உடனடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று மேலும் கேரளாவில் பரவாமல் இருப்பதற்காக சீனாவில் எப்படி கட்டுப்பாடுகளை விதித்தார்களே அதேபோல் கேரளாவிலும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தார்கள். உடனடியாக சுகாதாரத் துறையை அணுகி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று கை கழுவுவது மற்றும் முகமூடி அணிவதை பற்றிய விழிப்புணர்வுகளை செய்து வந்தார்கள். அதேபோல் கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதின் தெளிவையும் அவர்களுக்கு புரிய வைத்தார்கள். இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து கேரளா வருபவர்களை பரிசோதிக்க தொடங்கினார்கள். அதைத் தவிர்த்து அவர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

சிகிச்சை முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவரின் ரத்தத்தை பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டார்கள். இதன் மூலம் பாதிப்புகள் இருந்தால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போதுமான பாதுகாப்பில் பரிசோதனைகளை செய்து வந்தார்கள். ஒவ்வொரு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் கிருமிநாசினி அறை ஒன்றை உருவாக்கி அதில் மக்களை வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் படிக்க – அருகம்புல் சாறின் பயன்கள்..!

கொரோனா பாதிப்பு குறைவு

இந்தியாவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட சூழ்நிலையில், கேரளா மட்டும் வெறும் 190 பேர் பாதிக்கப்பட்டு அவர்களும் சரியான சிகிச்சை பெற்று குணமாகி வந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் தொற்றை முழுவீச்சில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த கேரளா வழிகளை கடைப்பிடிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இப்போது கேரளாவில் வசித்தவர்கள் வேறு மாநிலங்களில் வேலைக்கு சென்று சிக்கிக் கொண்டால் அவர்களை மீண்டும் தங்கள் கிராமத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகளை கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் செய்துள்ளார்.

எனவே இந்திய சுகாதார துறையினர், கேரளாவிலிருந்து ஆலோசனைகளைப் பெற்று கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஊரங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதை பின்பற்றி இனிவரும் நாட்களில் நம்மால் இந்த வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன