ஜப்பானியர்கள் கொரோனா வைரசை எப்படி கட்டுப்படுத்தினார்கள்..!

  • by
how japan tackled corona virus

இப்போது இந்தியர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் ஜப்பானியர்கள் சில மாதங்களுக்கு முன்பு செய்தார்கள். இதன் மூலமாக இப்போது அவர்கள் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதைத் தவிர்த்து அவர்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் துவங்கியுள்ளது.

ஜப்பானின் தடை நீக்கம்

ஜப்பானில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு விட்டது, அதை தவிர்த்து எல்லோரும் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். இது அனைத்திற்கும் மேலாக நேற்று விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார்கள், ஆனால் போட்டிகளை காண பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. எதற்காக ஜப்பான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள், இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்.

மேலும் படிக்க – கரோனா விடுமுறையில் குழந்தைகளை  எவ்வாறு வீட்டிற்குள்ளேயே வைத்து சமாளிப்பது???

ஜப்பானின் கொரோனா நிலவரம்

ஜப்பானில் இதுவரை 1193 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 285 பேர் குணமாகி வீடு திரும்பி இருகிறார்கள். கிட்டத்தட்ட 45 பேர் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். இந்த சூழலில் இன்னும் 865 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சூழலில் ஜப்பான் தனது நாட்டின் மேல் உள்ள தடையை முழுமையாக விளக்கி உள்ளது.

ஒலிம்பிக் போட்டி

2020 காண ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நடக்கவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் இவர்கள் நாட்டின் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவே இவர்கள் வேகமாக இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். இப்போது அனைத்து மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளதால் ஜப்பான் அரசாங்கம் ஒலிம்பிக் போட்டியை மீண்டும் நடத்தலாம் என்ற எண்ணத்தில் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று பல நாட்டு சமூக ஆர்வலர்கள் இந்த கருத்தை கூறி உள்ளார்கள்.

ஜப்பானின் முயற்சி

இப்போது இந்தியாவில் நடப்பது போல் ஜப்பானும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருப்பதற்காக அனைவரையும் வீட்டில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இதை மீறி, வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு தண்டனைகளையும் வாரி வழங்கினார்கள். இதனால் மக்கள் தண்டனைக்கு பயந்து வீட்டிற்குள் இருந்தார்கள். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பானில் வெகுவாக குறைந்தது. இன்று புதிதாக யாரும் பாதிக்காமல் இருக்கும் வழியை ஜப்பானியர்கள் இந்தியர்களுக்கு தந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன..!

எனவே மற்ற நாடுகளைப் போல் நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். கொரோனா வைரஸ்சை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதன் தாக்கத்தை முழுமையாக அறிந்து அதிலிருந்து எப்படி விலகி இருக்கலாம் என்பதை அறிந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன