இந்தியா மூன்றாம் நிலையை எப்படி கட்டுப்படுத்தும்..!

  • by
how indian should control third stage of corona virus spread

கொரோனா வைரஸின் மிக மோசமான நிலைதான் இந்த மூன்றாம் நிலை. உலக நாடுகளில் சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் மூன்றாம் நிலையை எட்டியது மூலமாக அவர்கள் நாட்டில் ஏராளமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டால் நாம் நினைத்துப் பார்க்காத ஏராளமான சம்பவங்கள் நடக்கும். எனவே இந்தியா மூன்றாம் நிலையை எட்டாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

உலக நாடுகளின் நிலை

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கினாலும் அது ஏசியவை தவிர்த்து யூரோப் மற்றும் அமெரிக்க கண்டத்தை அதிக அளவில் பாதித்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை தவிர்த்து இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. உலகில் வளர்ந்து நாடுகளாக கருதப்படும் யுனைடெட் கிங்டமுக்கும் இதே நிலைமை தான். எனவே இது போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவியது. இதனாலேயே இந்த நாடுகளில் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க – தமிழ் நாட்டில் ஏன் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியது..!

இந்தியாவின் நிலை

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் இது இன்றுவரை சமூக தொற்றாக மாறவில்லை, இதற்கு காரணம் இந்திய அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு விதிகள் தான். இந்த வைரஸ் தொற்று அதிகமாகாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவை இந்திய அரசு அமல்படுத்தியது. இதன் மூலமாக இந்த வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்கிறது, இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று பலரை பாதித்துள்ளது. அதைத் தவிர்த்து மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டத்தின் மூலமாக இது ஒரு சில சமூக மக்களையும் பாதித்துள்ளது. ஒருவேளை இந்தியா மூன்றாம் நிலைக்கு சென்றாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

மூன்றாம் நிலையில் இந்தியா

ஒருவேளை இந்தியாவில் கொரோனா தொற்று சமூக தொற்றாக மாறினால் இந்தியா தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை முடக்கத்தில் இருக்கும். மருத்துவமனைகளின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் திறந்து இருக்கும். இத்தருணத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும். மற்ற நாடுகளில் உயிரிழந்தவர்களை எப்படி அடக்கம் செய்கிறார்களோ அதே போல் தான் நாமும் அடக்கம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் உறவினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என யாரையும் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ்..!

வலிமிகுந்த மரணம்

சிறைச்சாலையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கும் சாகும் தருவாயில் ஒரு சில சலுகைகளை அளிப்பார்கள். அச்சமயத்தில் அவர்களுக்கு பிடித்த உணவுகள் அல்லது நெருங்கிய உறவுகள் யாரேனும் பார்ப்பது போன்ற வாய்ப்புகளை அளிப்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் உங்களை தாக்கினால் உங்களுக்கும் மற்றும் வெளி உலகத்திற்கு உண்டான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும். ஒருவேளை உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இறுதிவரை பார்க்காத நிலை ஏற்பட்டு நீங்கள் இந்த உலகத்தை விட்டு செல்வீர்கள். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் உங்கள் உடலை உங்கள் நெருங்கியவர்கள் கூட யாரும் பார்க்க வர மாட்டார்கள்.

எனவே இது அனைத்தையும் மனதில் வைத்து கொண்டு கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள். அதைத் தவிர்த்து அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவது மற்றும் கூட்டமாக உலா வருவது போன்ற அனைத்தையும் தவிர்த்திடுங்கள். ஒருவேளை உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள், எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சை அளிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக நீங்கள் குணமடையலாம். எனவே இதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி பாதுகாப்பாக இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன