மரங்கள் மற்றும் செடிகள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்..!

  • by
how important is plants and tress to humans

எல்லா மனிதர்களும் இயற்கையின் குழந்தைகள். இயற்கை இல்லாமல் உயிரினங்கள் எதுவும் இந்த உலகில் தோன்றி இருக்காது. இத்தகைய இயற்கையை என்றும் அழியாமல் பார்த்துக் கொள்வது நம்மை சுற்றி இருக்கும் மரங்கள் மற்றும் செடிகள் தான். எந்த அளவிற்கு நம்மைச் சுற்றி பசுமை இருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாகவும் எந்த ஒரு உடல் உபாதைகளும் இல்லாமல் வாழ முடியும்.

சுவாசத்திற்கு உதவும்

நாம் தினமும் சுவாசிக்கப்படும் காற்றை தருவது மரங்கள்தான். காற்று இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது. எனவே இத்தகைய சிறப்புவாய்ந்த காற்று இலவசமாக தரும் மரத்தை நாம் தாய் போல் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரோ இதை அழித்து தங்கள் சுய லாபத்தை அதிகரிக்கிறார்கள்.

மேலும் படிக்க – மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும்

நாம் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூலமாக பரவக்கூடிய நச்சுக்கள் அனைத்தும் காற்றில் கலக்கிறது. இதை தூய்மைப் படுத்தும் செயல் ஒரு சில மரங்கள் செய்கிறது. காற்றில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி அதை தூய்மையான காற்றை நமக்கு தருகிறது. இதனால் நாம் பல விதமான பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கிறேம்.

உணவை அளிக்கும் மரங்கள்

இன்றும் பலவிதமான உயிரினங்கள் நம் உலகில் வாழ்வதற்கு காரணம் மரங்கள் தான். காடுகளில் இருக்கும் மரங்கள் அளிக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை தான் பலவிதமான விலங்குகள், பறவைகள் உண்டு உயிர் வாழ்கிறது. மரம் இல்லை என்றால் உயிரினங்கள் இல்லை. இதைத்தவிர்த்து பல்லாயிர கோடி பறவைகள், மரங்களை வீடுகளாக பார்க்கிறது.

மற்ற பயன்பாடுகள்

மரங்களிலிருந்து ஆரோக்கியமான எண்ணெய்கள், உணவுகள் மற்றும் அதைக் கொண்டு வீட்டு உபயோக பொருட்களையும் செய்து நாம் பயன் பெறலாம். நம்மை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் செயல் மரம் செய்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைதயும் தரக்கூடிய இந்த இயற்கையை நாம் பலமடங்கு உயர்த்த வேண்டும்.

மேலும் படிக்க – கரோனா வைரஸ், முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்???

வெப்பத்தை தடுக்கிறது

உலகம் வெப்பமயமாகி வரும் நிலையில் இன்னும் பல நாடுகள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு காரணம் மரங்கள் தான். அங்கு இயற்கைக்கு போதுமான மரியாதையை கொடுத்து அதை வளர்க்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் இருக்கும் பகுதியில் வெப்பம் அதிகமாகாமல் வாழ்வதற்கு உகந்ததாக மாற்றும் செயலை மரங்கள் செய்கிறது.

உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்று, உணவு மற்றும் சுற்றுச்சூழலை செழிப்பாக வைத்துக்கொள்ள செடிகள் மற்றும் மரங்கள் உதவுகிறது. இதை கருத்தில் கொண்டு நாம், நம்மைச் சுற்றி இருக்கும் மரங்களை பாதுகாத்து தேவையான இடங்களில் மரங்கள் மற்றும் செடிகளை விளைவித்து நம்முடைய சமுதாயத்தை வளமாக மாற்ற வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன