நாம் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியம்..!

  • by
how important is parents in our life

பெற்றவர்கள் இல்லை என்றால் பிள்ளைகள் இல்லை. நம் வாழ்வில் நாம் வளரும் எல்லா சூழ்நிலைகளிலும் நமக்குத் துணையாக நம்முடைய பக்கபலமாக நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள கற்றுக் கொடுத்தவர்கள் தான் நம்முடைய பெற்றோர்கள். சிறுவயதில் நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பு வளர வளர குறைந்து முதியவர்கள் ஆனவுடன் அன்பு என்ற ஒன்றே இல்லாமல் அவர்களை தனிமையில் தவிக்க விடுகிறோம். இதுபோல் நினைப்பவர்களுக்கு புரிய வைப்பதற்காக நம் வாழ்க்கையில் அப்பா, அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

அப்பா அம்மாவின் பெருமை

பெற்றோர்கள் இல்லாதவர்களிடம் கேட்டுப்பார்கள் அப்பா, அம்மா என்றால் யார் என்று. உங்கள் வாழ்க்கை இனிமையாக அமைவதற்கான முழு காரணமும் உங்களை பெற்றவர்கள்தான். இன்று நீங்கள் பெற்றிருக்கும் கல்வி, பணம், உடை, வாழ்க்கை என அனைத்தையும் கொடுத்தவர்கள் உங்கள் பெற்றோர்கள். இதை நீங்கள் சம்பாதித்ததாக இருந்தாலும் அந்த சம்பாதிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது உங்கள் பெற்றோர்கலகதான் இருப்பார்கள். அதற்கான அஸ்திவாரமான கல்வியை கொடுப்பதும் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் படிக்க – விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

குழந்தைப் பருவம்

நீங்கள் குழந்தையாக இருக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு அடியும் ஆபத்தாகவே அமையும். அதை அற்புதமாக மாற்றும் முயற்சியை செய்தவர்கள்தான் உங்கள் பெற்றோர்கள். உங்களின் முழு பாதுகாப்பை பற்றி ஒவ்வொரு நிமிடங்களும் சிந்தித்து உங்களை அன்புடன் பார்த்துக் கொண்டவர்கள்.

படிப்பிற்கு உதவியவர்கள்

உங்களுக்கான ஆரம்பக் கல்வி முதல் மேற்படிப்பு வரை ஏதாவது ஒரு வகையில் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு உதவி இருப்பார்கள். சிறு வயதில் உங்களுக்கான கல்வியை உங்கள் ஆசிரியர்கள் சொல்லித் தருவதை விட, பிறந்த குழந்தையாக இருக்கும் முதலில் உங்களுக்கான வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பவர்கள் உங்கள் பெற்றோர்கள். அதைத் தவிர்த்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களுக்கான கல்விக்கு செலுத்த வேண்டிய தொகையை அவர்கள் கஷ்டப்பட்டு செலுத்தி இருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் ஒரு பங்காக இருப்பார்கள்

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்குப் பின்னால் உங்கள் பெற்றோர்களின் சிந்தனை இருக்கும். நீங்கள் செய்யும் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் ஆரம்பம் முதலே உங்களுக்கு சொல்லிக் கொடுத்து அதனால் ஏற்படும் விளைவுகளை புரியவைத்து இருப்பார்கள். இப்போது நீங்கள் எடுக்கும் ஒரு முடிவினாள் மிகப் பெரிய இடத்திற்கு சென்று இருந்தால் அந்த முடிவின் நோக்கத்தை உண்டாக்கியவர்கள் உங்கள் பெற்றோர்.

உங்களுடன் எப்போதும் இருப்பார்கள்

உங்கள் வாழ்க்கையில் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் உங்களுக்கு துணையாக உங்கள் பெற்றோர் தான் முதலில் இருப்பார்கள். இன்பம், துன்பம், சோகம், கஷ்டம் என எல்லா சூழல்களிலும் உங்களுக்கான உதவியையும், அவர்களின் அரவணைப்பையும் தருவார்கள்.

மேலும் படிக்க – குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்..!

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வார்கள்

நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் அதில் இருந்து லாபத்தை காணாமல் உங்கள் சந்தோஷத்தை பார்ப்பார்கள். நீங்கள் எதை செய்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு உங்கள் பின்னால் உங்கள் துணையாக நிற்பார்கள். உங்களைத் தொடர்ந்து உங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளைகளைக் கூட முழுமையாக ஏற்று பாசத்தை ஊட்டி வளர்ப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழும் ஒவ்வொரு தருணமும், முழுமையாக உங்கள் பெற்றோர்களை அன்புடன் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இப்போது நீங்கள் செய்யும் செயல் தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன