பிரம்மதேவன் எவ்வாறு தோன்றினார் !!!

  • by
how did brahmadevan came into existence

முப்பெரும் கடவுள்களில் ஒருவரான பிரம்மதேவனை ஏன் நாம் யாரும் வழிபடுவதில்லை. மேலும் அவர் எப்படித் தோன்றினார் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். ஒரு யுகத்தின் போது மகா பிரளயம் ஒன்று தோன்றி இந்த உலகம் நீரில் மூழ்கியது. அதற்கு முன்பு வாழ்ந்த எந்த விலங்கினமும் இங்கு வாழவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர் மட்டுமே தென்பட்டது. அப்போது அந்த மிகப்பெரும் பிரளய வெள்ளத்தில் ஒரு ஆலிலை  மட்டும் மிதந்து வந்தது. அதில் பகவான் மகாவிஷ்ணு அவர்கள் குழந்தை வடிவில் மிதந்து வந்து கொண்டிருந்தார்.

படைத்தல் காத்தல் அழித்தல் 

தான் யார்? தன்னை படைத்தவர் யார்? எதற்காக தன்னை படைத்தார் என்ற சிந்தனையுடன் ஸ்ரீமகாவிஷ்ணு அங்கு ஆனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவருக்கு தோற்றமளித்த ஆதிபராசக்தி எனும் மகாதேவி, விஷ்ணு பகவானே படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் நடக்கக் கூடிய ஒன்று. ஒரு பிரளயம் ஏற்பட்டு இந்த உலகே அழியும் போது காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் இருப்பாய். ஆதிசக்தியின் மறு உருவமாக திகழும் நீர் நீருக்கும், ஊழித்தீக்கும் அஞ்சாமல் இருப்பீராக. சர்வ வல்ல குணங்களின் பரிமாணமாக நீர் திகழ்வீர். உமது தொப்புளிலிருந்து பிரம்ம மகாதேவன் தோன்றுவார். அவரே  ராஜ குணங்களின் பிரதிநிதியாக இருப்பார். பின்னர் அவர் பிரளயத்தினால் மறைந்த அனைவரையும் மீண்டும் பிறக்க வைப்பார். பிரம்மதேவன் மீண்டும் அனைத்து சராசரங்களையும் உருவாக்குவார். அவரின் புருவ மத்தியில் மாபெரும் சக்தியான சிவபெருமானின் வடிவம் தோன்றும். அப்படித் தோன்றும் அந்த வடிவம் ருத்ர மூர்த்தியாக நின்று சம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பார். இப்படி படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய நீங்கள் மூவரும் செய்யக் கடமைப்பட்டவர்கள். உங்களை இயக்கும் சக்திகளாக நானும் என் அம்சங்களான மற்ற தேவியரும் பணியாற்றுவோம் என்று கூறினால் தேவி. 

மேலும் படிக்க – மகாபாரதம் – அர்ஜுனனின் கற்பூர புத்தி..!

பிரம்மதேவன் 

இவ்வாறு விஷ்ணுவின் தொப்புளிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பிக்கும். பிரளய வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் தாண்டி அது நீண்டு வளர்ந்து நிற்கும். அதன் நுனிப்பகுதியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலரும். அதிலிருந்துதான் பிரம்மதேவன் தோன்றுவார். அவர் தோன்றும் போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்ததாம். அதன் பிறகு அதில் ஒரு முகம் சிவ பெருமானால் அழிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அதன்பிறகே பிரம்மதேவன் நான்முகன் என்று அழைக்கப்பட்டார். பிரம்ம தேவருக்கு சதுரன் என்று மற்றொரு பெயரும் உண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன