உங்கள் தினசரி வாழ்க்கையை கரோனா வைரஸ் எப்படி பாதிக்கிறது..!

  • by
how corona virus is affecting your day to day life

நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இச்சூழலில் உங்களின் இயல்பு வாழ்க்கையை கரோனா வைரஸ் எவ்விதமாக பாதிப்படைய செய்தது என்பதை காணலாம்.

வேலைக்கு செல்பவர்கள்

நம்முடைய உழைப்பதால்தான் நம்முடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு ஏற்பட்ட இந்த வைரஸ் எல்லோரையும் மிக எளிதில் பாதிப்படைய செய்வதினால் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டில் இருக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம், ஆனால் ஒரு சில வேலைகள் நிச்சயம் அலுவலத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும். ஆனால் இது மிக ஆபத்தான முறை என்பதால் அவர்களும் அலுவலகத்திற்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதன் மூலமாக அவர்களின் வருமானம் குறைந்து அவரின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் படிக்க – பழங்கால கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அதன் பயன்கள்..!

பள்ளி கல்லூரிகள்

பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் முழுமையாக விடுமுறை அளித்து வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்கான பாடங்களை வீட்டிலிருந்து படித்தாலே போதும். இறுதியில் வைக்கப்படும் தேர்வை அவர்கள் எழுதி தேர்ச்சி பெறலாம். பள்ளி மாணவர்களின் தேர்வு முழுமையாக ரத்தானதால் இவர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. ஆனால் ஆசிரியர்கள் உதவி இல்லாமல் இவர்கள் வீட்டில் பயில்வதினால் இவர்களுக்கு பாடத்தில் கிடைக்கும் தெளிவு சற்று குறைவாகவே இருக்கும்.

குடும்ப நிகழ்ச்சிகள்

இந்தக் காலகட்டத்தில் நாம் எல்லா விதமான நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். அதை தவிர்த்து குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டம் அதிகமாக சேரும் இடங்கள் போன்ற அனைத்தயும் தவிர்த்தால் மட்டுமே நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே இதுபோன்று கொண்டாட்டங்களை தவிர்க்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

சந்தைக்கு செல்வது

நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை நாம் வெளியே சென்று வாங்க வேண்டும். இதை வீட்டில் ஒருவர் மட்டுமே சென்று வாங்குவது சிறந்தது. ஏனென்றால் எந்த ஒரு தொற்றுகள் ஏற்பட்டாலும் அவர் ஒருவரை வீட்டில் நுழைவதற்கு முன்பு முழுமையாக சுத்தப்படுத்திவிட்டு நுழைய செய்யலாம். அதேபோல் நீங்கள் சமைக்கப்படும் காய்கறிகள் மற்றும் விட்டு பொருட்களை தொடாமல் அதை நன்கு துடைத்து விட்டு சிறிது நேரம் கழித்து அதை பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை பல முறை கழுவுவது சிறந்தது.

மேலும் படிக்க – பப்பாளி மற்றும் கருஞ்சீரகம் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..!

தனிமையில் இருக்க பழகிக் கொள்ளுங்கள்

இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்படும். ஒரு சிலரின் வாழ்க்கை தனிமையில் கழியும் எனவே இதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நாம் எடுக்கப்படும் இந்த முயற்சியின் மூலமாக நீங்கள் நோய் தொற்றுக்கள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

இது போன்ற முன்னெச்சரிக்கைகள் உங்கள் வாழ்க்கையின் நாட்களை அதிகரிக்க உதவும். எனவே இதை அறிந்து அரசாங்கம் சொல்வதை பின்தொடர்ந்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். அதே போல் ஒரு முறைக்கு பலமுறை உங்கள் கைகளை சுத்தப்படுத்துங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள், குடும்ப சூழலை மகிழ்ச்சியாகவும், அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன