மனித உடலில் பயணிக்கும் கரோனா ஆரம்பம் முதல் முடிவு வரை.!

  • by
how corona virus enters and affects your body

உலகையே இன்று அச்சுறுத்தலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் இந்த கரோனா வைரஸ் எவ்வாறு மனித உடலினுள் சென்று அதன் வளர்ச்சியை தொடங்குகிறது என்று விளக்கம் பதிவுதான் இது.

கரோனா வைரஸின் வகைகள் 

இதுவரையிலும் ஆறு வகையான கரோனா வைரஸ்கள் மட்டுமே மனிதர்களை தாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல்வகை கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சளி தொந்தரவு மட்டுமே ஏற்படுகிறது. இரண்டாம் வகை கரோனா வைரஸ்களால் தான் சார்ஸ், மெர்ஸ் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இப்போது வேகமாக பரவி வரும்  கோவிட் – 19 கரோனா வைரஸின் ஏழாம் வகையை சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவைரஸின் வெளித்தோற்றம்

பார்பதற்க்கு கிரீடம் போன்ற கூர் முனைகளை அதன் மேற்பரப்பில் கொண்டுள்ளது இந்த கரோனா வைரஸ். இதனால்தான் இதற்கு கரோனா என்று பெயரிட்டுள்ளனர்.

வைரசின் வெளிப்புறம் முழுவதுமாக கொழுப்பு எண்ணை மூலக்கூறுகளால் சூழப்பட்டுள்ளது. நம் சோப்பினை கொண்டு கைகளைக் கழுவும்போது அந்தக் கொழுப்பு மூலக்கூறுகளில் இருந்து வைரஸ் தனியே பிரித்து வரப்படுகிறது. இதனால் வைரஸின் உயிர்ப்பு தன்மை தடைபடுகிறது.

மேலும் படிக்க – கிராம்பு பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கரோனா வைரஸ் மனித உடலுக்குள் பரவுதல் 

மூக்கு, கண், வாய், கண்கள், மூலமாக தான் இந்த  வைரஸ் மனித உடலுக்குள் செல்கிறது. மனித உடலில் நுழைந்த பின் காற்று பாதைகளில் உள்ள ACE 2 எனப்படும் புரதத்தில் உருவாக்கும் செல்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. இந்த வைரஸ் வெளவால்களில் இருந்து தோன்றியதாக

கருதப்படுகிறது. அதிலும் இதனை ஒத்த புரதத்துடன் அது தன்னை இணைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கரோனா வைரஸ் எவ்வாறு அதன் RNA வை வெளியிடுகிறது

கொழுப்பு எண்ணை மூலக்கூறுகளால் ஆன இந்த வைரஸ் மனித உடலின் சென்றவுடன் செல்களில் இணைப்பை ஏற்படுத்துகிறது. நமது உடலில் உள்ள செல்களை பாதிக்கிறது. செல்லுக்குள் நுழைந்ததும் R NAஎனப்படும் மரபணு பொருளின் துணுக்கையை வெளியிடுகிறது.

கரோனா வைரஸ் மனித உடலில் பெருகுதல்

மனிதனுடைய மரபணுக்களின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால் கரோனா வைரசின் மரபு தொகையோ 30 ஆயிரத்துக்கும் குறைவாக தான் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது அது எப்படி மனித செல்களை அழிக்கிறது. இந்த வைரஸ் ஆனது மனித செல்களில் பதிய வைத்த உடன் அதன் புரதங்களை தயாரிக்க தொடங்குகின்றன. இந்த புரதமானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்களை தடைசெய்கிறது. இதன் மூலம் வைரஸ் புதிய நகல்களை ஒன்றாக உருவாக்குகிறது.

நாம் பயன்படுத்தும் ஆன்ட்டிபயாட்டிக் பாக்டீரியாவை மட்டுமே அழிக்கும் திறனுடையது. அவை வைரஸ்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது. வைராக்கும் எதிராகவும் செயல்படாது. இந்த வைரசை அழிப்பதற்கான மருந்துகளை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

கரோனாவைரஸ் நகல்களில் பெருக்கம் 

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பொழுது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூர்முனை கொண்ட வைரஸ்கள் புதிய புரதங்களை வெளியேற்ற தொடங்குகின்றன. இவை புது புது வைரஸ்களும் தோன்ற அடிப்படையாக அமைகிறது. இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட வைரஸின் புது

நகல்கள் செல்லின் வெளிப்புறத்தில் ஒன்றாக ஒரு விளிம்பில் இணைக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் மனித உடலில் எவ்வாறு பரவுகிறது

இந்த வைரஸின் உயிர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அவை விரைவில் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த வைரஸ் இறப்பதற்கு முன்பாக அதே மாதிரியான பல லட்சக்கணக்கான வைரஸ் நகல்களை வெளியேற்றும் தன்மையுடையது. இந்த வைரஸ் அருகில் உள்ள செல்களை பாதித்து, நுரையீரலில் உட்சென்று காற்றுப் பாதை வழியாக தொற்றை ஏற்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு தன்மையுடன் அமைப்புடன் போராடும் கரோனா வைரஸ் 

இந்த வைரஸை அழிக்க மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது அதிகமாக போராடிக் கொண்டே தான் இருக்கும்.இதனால்தான்  கோவிட் -19 நோய்தொற்று காய்ச்சலை ஏற்படுத்துகிறது. நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் வைரசுக்கு எதிராக அதிக அளவு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்திற்குப் பின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வைரஸ்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இவைதான் நுரையீரல் செல்களை பாதிக்க தொடங்குகின்றன. நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதால் சுவாசிப்பது கடினமாகிறது.

மேலும் படிக்க – மூங்கிலில் செய்யப்படும் கூடைகள் மற்றும் அதன் பயன்கள்..!

ஒரு சிறிய சதவீத நோய்த்தொற்றுகள் குறைபாட்டு ஏற்படுத்தி மரணத்தை வழிவகுக்கின்றன.

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் தடுப்பூசி 

வருங்காலத்தில் உருவாக்கப்படும் SARS – CoV – 2தடுப்பூசிகள் என்ற வைரஸை குறிவைக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் இவை மனித செல்களை பாதிப்படையச் செய்யாமலும் தடுக்கிறது. ஃப்ளூ காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பூசி இது போலவே தான்

செயல்படுகிறது ஆனால் ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி ஆனது ஆன்டிபாடிகளை உருவாக்கினாலும் அதனால் கரோனாவைரசின் அழிக்க முடியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன