சீனா கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்தியது..!

  • by
how china controlled corona virus

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்துதான் துவங்கியது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 86 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்படைந்து, அதில் 95 சதவீதம் மக்கள் வரை குணமாகி அவரவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதில் 3,295 பேர் மட்டுமே உயிர் இழந்தார்கள். வைரஸ் உருவாக்கிய இந்த நாட்டின் உயிர் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாட்டை விட மிகக் குறைவு. டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வியாதியின் தாக்கத்தைப் பற்றி ஜனவரி இறுதியில் தான் சீன அரசாங்கத்திற்கு முழுமையாக தெரிந்தது. அதன்பின் அவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் சிகிச்சைகளின் மூலமாகவும் கிட்டத்தட்ட இரண்டே மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அனைத்தும் குறைந்து இன்று அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார்கள்.

ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் அமல் படுத்தியதைப்போல் சீனாவிலும் கொரோனா பாதிப்பு மற்ற நகரங்களுக்கு பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் நாம் கடைப்பிடிப்பதை அவர்கள் மிகக் கடுமையாக கடைப்பிடித்தார்கள். நள்ளிரவு 2 மணிக்கு இவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார்கள் இதற்குக் காரணம் இரவு வேலை செய்பவர்கள் வீடு திரும்புவதற்காக காலை 10 மணி வரை அனைவருக்கும் அவகாசம் கொடுத்தார்கள். இந்த பாதிப்புகள் உருவான வூகான் நகரம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்தார்கள்.

மேலும் படிக்க – வேப்ப எண்ணெயின் பயன்கள் அறிவோம் வாங்க!

சாலைகள் முடக்கம்

தமிழகத்தில் எப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் நாம் காவல் துறை உதவியுடன் அடைக்கப்பட்டுள்ளேமோ அதுபோல் சீனாவில் உள்ள ஒவ்வொரு தெருக்களையும் முழுமையாக அடைத்தார்கள். இதன் மூலமாக வெளியே வர நினைப்பவர்கள் தங்கள் தெருவை தாண்டுவதே  சிரமமாக இருந்தது. அதையும் மீறி அவர்கள் தங்கள் வீட்டு தெரு தாண்டினாளும் ஒவ்வொரு தெருவைத் தாண்டி செல்வதற்குள் அவர்களின் மனநிலை மிக மோசமாகிவிடும்.

உடனடி கைது

ஊர் அடங்கை மீறி அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடியிருப்பில் இருப்பவர் அல்லது வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க வெளியே வரவேண்டும். அவரும் தங்கள் குடும்பத்திற்கோ அல்லது தங்கள் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு தேவையான மற்றும் அரசு கட்டுப்பாட்டில் முறைப்படி கொடுக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை மட்டுமே வாங்கிச் செல்ல வேண்டும். இதன் மூலமாக அதிக பொருட்களை வாங்கி வீட்டில் பதுக்குவது தடுக்கப்பட்டது.

இராணுவம் அனுமதி

இப்போதுதான் தமிழகத்திற்குள் ராணுவத்தைக் கொண்டு வரலாமா, வேண்டாமா என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் யூகான் மாநகரத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த உடனே சீனா தங்கள் ராணுவத்தை உதவிக்கு அழைத்தது. இதன் மூலமாக ஒவ்வொரு தெருக்களுக்கும் போதுமான காவல் அதிகாரிகள் இருந்தார்கள். கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருபவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கைகளும் சீனா எடுத்தது.

வைரஸ் ஸ்கேனர்

ஒவ்வொரு குடியிருப்புக்கு வெளியே வைரஸ் ஸ்கேனர் மற்றும் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவிகளை வைத்தார்கள். இதன் மூலமாக யாருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் பாதிக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்கள். தாங்கள் வசிக்கும் குடியிருப்பு முழுவதும் தற்காலிக சுவரை எழுப்பி மிகப் பாதுகாப்பாக சீனா தங்கள் மக்களைப் பார்த்துக் கொண்டது.

ஆயுர்வேத மருந்து

கிட்டத்தட்ட 1,800 வருடங்களுக்குப் பின்பு பயன்படுத்தப்பட்ட சீனாவின் பாரம்பரிய மருந்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட 95 சதவீத மக்களை காப்பாற்றி உள்ளார்கள். அந்த ஆயுர்வேத மருந்தில் கிட்டத்தட்ட 29 திற்கு மேற்பட்ட மூலிகைகளை கலந்து ஒரு சூப்பை உருவாக்கி நோயாளிகளுக்கு அளித்துள்ளார்கள். ஒரு சில நோயாளிகள் அதை குடிக்க மறுத்துள்ளார்கள். எனவே அவர்களுக்கு மேலை நாட்டு மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தார்கள்.

சீனாவின் பாரம்பரிய மருந்தை மற்ற நாட்டவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று சீன சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது, ஆனால் மேலை நாட்டு வியாபாரம் இதனால் பாதிப்படையும் என்ற எண்ணத்தில் தங்கள் இணையதளத்தில் இருந்து இந்த பதிவை நீக்கியது. கொரோனா பாதிப்பு என்பது நடுநிலைத் வயது உள்ளவர்களை பாதித்தாலும் அவர்களுக்குள் இருக்கும் எதிர்ப்புச் சக்தியினால் தானாகவே குணம் அடையும் தன்மை கொண்டது, இருந்தாலும் இந்த மூலிகைப் பொருட்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி உங்களை குணப்படுத்தவும் செய்யும் என்று சீன அரசு கூறியிருந்தது.

மேலும் படிக்க – கொரானாவிலிருந்து வீட்டுப் பெரியோர்களை காத்தல்

இறுதிகட்ட பாதுகாப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் என ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதிக்க செய்துள்ளது. இதற்கு காரணம் இவர்கள் போதுமான அளவு உடல் கவசம் அணியாதது தான் இந்த நிலைமையில் சீனா முற்றிலும் வேறு வகையில் இருந்தது, ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளியை சந்தித்த மருத்துவரை முழுமையாக கிருமி நாசினிகள் மூலமாக சுத்தப் படுத்தினார்கள். அதை தவிர்த்து அவர்களின் ஆடையில் அந்த வைரஸ் தொற்று எந்த வகையிலும் உள் நுழையாதபடி பார்த்துக் கொண்டார்கள். மக்கள் அனைவருக்கும் இந்த வைரஸ் தொற்றும் பாதிப்பை புரிய வைத்து வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். இதைத் தவிர்த்து வீட்டை சிறைச்சாலை போல் உருவாக்கி அவர்களை முழுமையாக அடைத்து வைத்தார்கள். இது போன்ற கடுமையான செயல்களில் மூலமாகத்தான் இந்த கொரோனா பாதிப்பு சீனாவில் இரண்டே மாதத்தில் முழுமையாக குறைந்தது.

இந்தியாவில் உள்ள மக்கள் தொடர்ந்து 21 நாட்கள் வீட்டில் இருக்க முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில், சீனாவில் இந்த சட்டம் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு பிறப்பித்தார்கள். இதை சகித்துக் கொண்டதால் தான் இன்று சீனா முடக்கத்தை தகர்த்து யூகான் நரகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் மூலமாக இன்றும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் வந்துகொண்டே இருக்கிறார்கள். இருந்தும் இதற்கான தீர்வு அவர்களிடம் இருப்பதினால் அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த வைரஸை நேர்மறையாக எதிர்கொள்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன