கொரோனா : புற்றுநோயாளிகள் பின்பற்ற வேண்டியவை..!

  • by
how cancer patients should take care of them from corona virus

ஒவ்வொரு ஆண்டும் உலகில் அதிக உயிரிழப்புக்களுக்கு காரணமாக உள்ள நோய்களில் மிக மோசமானது தான் இந்த புற்றுநோய். நம் உடலில் ஏற்படும் மரபணு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் நம்முடைய வாழ்க்கை முறையின் மூலமாக புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் மூலமாக ஏற்கனவே உடலில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகமாக இந்த வைரஸ் தாக்குகிறது. எனவே புற்றுநோயாளிகள் இந்த வைரஸ் பரவும் சமயத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா பரவுதல்

கொரோனா வைரஸ் என்பது சீனாவில் வவ்வால்கள் மூலமாகத்தான் பரவி உள்ளது, என ஏராளமான ஆய்வாளர்கள் கூறி வந்தார்கள். ஆனால் அந்த வைரஸ் என்பது பங்கோலின் என்ற விலங்கு வகையைச் சேர்ந்தவை மூலமாக தான் இந்த தொற்று பரவி இருக்கும் என்கிறார்கள். இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக எளிதில் பரவுகிறது. இது போன்ற சமயங்களில் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும், இதை நாம் எப்படி கையாளுவது என்பதை காணலாம்.

மேலும் படிக்க – பசியால் தத்தளிக்கும் இந்திய கிராமங்கள்

கதிர்வீச்சு

இருதய நோய்க்கு அடுத்தபடியாக மிக மோசமான நோயாக கருதப்படுவது தான் புற்றுநோய். எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு முறை கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருக்கும். எனவே அவர்கள் கொரோனா வைரஸிற்க்கு பயந்து கொண்டு இந்த சிகிச்சை முறையை நிறுத்துவது முட்டாள்தனமாகும். எனவே மிகப் பாதுகாப்பான வழிமுறைகளை பின் தொடர்ந்து உங்கள் சிகிச்சைகளை தொடருங்கள்.

ஹீமோ தெரபி

புற்றுநோயைத் தடுக்கும் இணைப்பில், நோயாளிகள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மருத்துவமனைக்கு ஹீமோ தெரபி சிகிச்சைக்கு செல்ல வேண்டும். இதன் மூலம் ஹீமோ தெரபி சிகிச்சை பெறுபவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது தங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு வேறு ஏதாவது உடல் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை மிக எளிதில் தீர்க்கலாம்.

மேலும் படிக்க – வீட்டிலுள்ள எளிய மூலிகையில் எல்லாம் இருக்கு

சமூக விழிப்புணர்வு

புற்று நோய் உள்ளவர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், சிகிச்சைக்கு செல்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை ஏற்பதற்கு நீங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். எனவே காணொளி மூலமாக ஆலோசனைகளை நீங்கள் மருத்துவரிடம் இருந்து பெறலாம், அதை தவிர்த்து வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் இது போன்ற வழியை பயன்படுத்தி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம்.

புற்றுநோய் உள்ள நோயாளிகள் ஏற்கனவே சில உடல் பிரச்சினைகளை சந்தித்து வருவதினால் கொரோனா வைரஸ் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதை தவிர்த்து மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன