குளிர்காலத்தில் சருமத்திற்கு ஏற்படும் காற்று எரிச்சல்.!

how can you preserve your skin during winter season

குளிர்காலம் வந்தாலே நமது சருமம் அதிக அளவில் பாதிப்படைகிறது. இதை தடுப்பதற்காக நாம் ஏகப்பட்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் குளிர்காலத்தில் ஒரு சிலருக்கு அதிக அளவில் தாக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் காற்றின் மூலமாக எரிச்சலைத் தூண்டுவதுதான். இது பெரும்பாலான மக்களுக்கு குளிர் காலத்திலேயே வருகிறது. இதனால் நமது சருமம் வறட்சியடைந்து பாதிப்படைகிறது.

காற்று எரிச்சல் எப்போது ஏற்படுகிறது என்றால் நாம் குளிர்கால நேரங்களில் வெளியே செல்லும்போது நம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி சருமம் வறட்சியாக இருக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நமது சருமம் உடைந்து தோலுரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இது உங்களுக்கு வலியையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க – மெல்லிய இசையில் உடலும் மனதும் மேம்படும்

இதைத் தடுப்பதற்கு நாம் முடிந்தவரை நம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும் அதற்காக நாம் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் சன்ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது நமது சருமம் வலியையும் வீக்கத்தையும் உலரும் இதை சரிசெய்வதற்கு நாம் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது முடிந்தவரை காற்றுப் புகாதவாறு நம்மை மூடிக் கொண்டு பயணிப்பது நல்லது.

இந்தப் பிரச்சனையை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் முடிந்த வரை பாதுகாப்பாக இருப்பது நல்லது ஏனென்றால் நாளடைவில் இது போன்ற பிரச்சனையால் உங்கள் சருமம் அதிக அளவில் பாதிப்படைந்து ரத்தம் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது எனவே குளிர்காலங்களில் பாதுகாப்பாக உங்கள் சருமத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

1 thought on “குளிர்காலத்தில் சருமத்திற்கு ஏற்படும் காற்று எரிச்சல்.!”

  1. Pingback: நேர்காணலுக்கு செல்லும் போது எந்தவித ஒப்பனைகளை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன