புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.?

how can we protect us from cancer

முன்பெல்லாம் சினிமாவில் மட்டுமே காட்டப்படும் ஒரு கொடூர உயிர்க்கொல்லி நோய் புற்றுநோய். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. புற்றுநோய் வர என்ன காரணம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா??? அறிவியலும் மருத்துவமும் ஆயிரமா யிரம் காரணங்களை அடுக்கினாலும் முக்கியமான சுருக்கமான ஒரு காரணம் உண்டு அது நம் வாழ்க்கை முறை.

புற்றுநோயை நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஊடகம்

நம்மில் பலர் உடனடி கலாச்சாரத்துக்கு பழகிவிட்டோம். இந்த உடனடி கலாச்சாரத்தை மாற்றிக் கொள்வதில் இருந்தே மாற்றத்தை நாம் தொடங்கலாம். உடனடி கலாச்சாரத்தின் உணவுப் பொருள்களில் தொடங்கியதுதான் இந்த பாலிதீன் பயன்பாடு. அதிக சூட்டிலும் அதிக குளிரிலும் தான் பிளாஸ்டிக்கில் இருந்து டையாக்சின் வாயு கசிந்து வருகிறதாம்.

சமைத்த உணவுகள் சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. அதில் பூஞ்சைகள் வளரும், புளிக்கத் துவங்குவதும் அதில் நடைபெறும் உயிரியல் நிகழ்வு. அந்த இயற்கையை சிதைக்காமல் இருக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பூஞ்சைகள் வராமலிருக்கஆன்ட்டி ஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் பிலஸ்ஸிங்.

மேலும் படிக்க – பந்தலிலே பாகற்காய் படையலாய் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களை சேர்த்து சேர்த்துதான் உடனடியாக சாப்பிடலாம் என சந்தைக்கு வருகின்றன. இந்த உடனடி சாப்பாட்டு சமாச்சாரங்கள் எதில் வருகின்றன.

பாலித்தீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகள் நாமோ அதை வாங்கிக்கொண்டு போய் பிரிட்ஜில் தான் பத்திரப்படுத்துகிறோம்.” மூத்த நாள் சமைத்த கரி அமுதினும் அருந்தோம் ” என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது இன்றைய தமிழ் குடும்பம்.

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத பொருள்கள்

தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் வைப்பது தொடங்கி, நாம் உணவு சமைக்கும் அனைத்து காய்கறிகளையுமே பாலிதீன் கவர்களில் தான் வைக்கிறோம். இன்னும் சில புத்திசாலிகள் இரவிலே காய்கறிகளை நறுக்கி பாலித்தீன் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். அதி குளிரில் உள்ள பிளாஸ்டிக்கில் இருந்து வரும் டையாக்சின் வாயு காய்கறிகளின் புரோட்டீனை நமக்குத் தருவதற்கு மாற்றாக. புற்றுநோயை தருகிறது.

இன்றைய பள்ளிக்குழந்தைகள் எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்வதே ஒரு அவமானமாக நினைக்கின்றனர். அதில் சூடான உணவை கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள் கொடுத்தனுப்பிய உணவுடன் மெல்லக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாது தான். ஆனால் ,அது மெல்ல மெல்ல அது செயலை செய்யத் தொடங்க ஆரம்பிக்கும். புற்றுநோய் காரணிகளில் மிக முக்கியமாக பேசப்படுவது பிளாஸ்டிக்ரின் டையாக்ஸின் வாயு தான்.

மேலும் படிக்க – கைகள் சிவக்கும் மருதாணியால்…….!

மேற்கூறியவை அனைத்தும் கற்பனையில் கூறியவை அல்ல. புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில். தொகுதி-1 அதாவது புற்றுநோயை உறுதியாக தோற்றுவிக்கும் காரணிகளில் முக்கியமானதாக பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

புற்று நோயிலிருந்து எவ்வாறு நம்மை காப்பது ; நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும், நரகமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம். பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் என்ன செய்யும் நண்பர்களே!

உடனடி பாரம்பரிய உணவு வகைகள்; நீர் காய்கறிகளை கூட்டாக வைக்க வேண்டும். பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகவும், செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல காய்கறியை குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிட வேண்டும். இது நம் முன்னோர்கள் சொல்லி தந்த பாடம் புளியில் வேக வைத்தால் அதன் புரத சத்து கனிமங்கள் வீணாவது இல்லை. காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் வற்ற விடாமல் வடித்துக் கொட்டாமல் கூட்டாக செய்யும் போது அதன் பயன் சற்றும் குறையாது என்கிறது தேசிய உணவியல் கழகம்.

மேலும் படிக்க – புத்துணர்ச்சி பொங்கும் ஆரோக்கியம் அதுவே ரோஜா

நமது பாரம்பரிய உடனடி உணவு உணவான கேழ்வரகு லட்டை சாயங்கால நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம் அதே வாணலியில் வறுத்து பனைவெல்லம் இரண்டு ஸ்பூன்

நெய் சேர்த்து உருண்டை பிடித்து வையுங்கள். இரும்பு ,கால்சியம் புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும்.

ரெடி டு ஈட் உணவுகளைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளை உண்டு வருங்கால சந்ததியினரை புற்றுநோயிலிருந்து காப்போம்!.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன