மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

  • by

சிவராத்திரி காலத்தில் இறைவனை வணங்கி வருதல் சிறப்பான ஒன்றாகும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வணங்கி  உபவாசம் நாள் முழுவதும் சிவ மந்திரம் சொல்லி வர அனைத்தும் வளங்கள் கிடைக்கப் பெறலாம். 

சிவராத்திரி  பலன்கள்: 

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்த வேலையை எண்ணி வணங்கி நாமும் பூஜித்து வர வேண்டும். 

இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டி பெற்ற வரத்தினை பின்பற்றி வருடம்   தோறும் இதனைப் பின்பற்றி வர வாழ்வில் நன்மைகள் பெறலாம். 

மேலும் படிக்க: காசியின் காவலர் காலபைரவர் வேண்டியதை தருபவர்..!

சிவ பெருமான்

சிவராத்திரி பூஜை: 

சிவராத்திரியானது விஷேங்கள் நிறைந்த ஒன்றாகும்.  இரவு முழுவதும் சிவனை வணங்கி பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாடப் பட்டு வருகின்றது.   மகத்துவம் மிக்க இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும். தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

பூஜை நேரம்: 

சிவ ராத்திரி தினத்தன்று  நாம் சூரியன் மறந்த முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம் வரை சிவ பெருமானை பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்து வித பாக்கியங்களும் கிடைக்கப் பெறலலாம். 

 சிவ பெருமானை வணங்கி இறுதியில் மோட்சம்  பெற நாம் இதனைப் பின்பற்றி வரலாம். மகேஷனை பிராத்தித்து  உமா மகேஸ்வரி வேண்டிக் கொண்டாள். அதன் படி சிவ ராத்திரி தினத்தில்  சிவ பெருமானை நினைத்து வழிபடுவோருக்கு அனைத்து சிக்கல்ளும் நீங்கி மோட்சம் பெறலாம்.  


மேலும் படிக்க: சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

சிவ பெருமான்

புராண கதை: 

சிவராத்திரி  கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து முறைகளும் கொண்டாடலாம்.   சிவராத்திரி நாள் வேடன் ஒருவர் சிவனை வேண்டி வில்வம் சாற்றி பெற்ற வரம் பற்றிய கதை அறிவோம். 

ஒரு வேடன் காட்டில் வேட்டையாட சென்றிருந்தான். அன்றைய தினம் பல முயற்சிகள் செய்தும், பல இடங்களில் அலைந்து திரிந்தும் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாட முடியவில்லை. சூரியன் மறையக்கூடிய நேரம் வந்தது.  அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு புலி அவனருகே வந்துவிட்டது. வேடன் புலிகை கண்டு அஞ்சி அருகே இருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியோ அவனை இறையாக்க வேண்டும் என்ற ஆவலில் வேடன் இருந்த வில்வ மரத்தை சுற்றி சுற்றி வந்தது.

சூரியன் மறைந்து இருண்டும் புலி இடத்தை விட்டு நகரவில்லை.  . தூக்கம் காரணமாக கண் அசர்ந்து கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இறையாகி விடுவோமே என்ற பயத்தில், மரத்தில் இருந்த ஒவ்வொரு இலையாக பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே  இருந்தார் வேடன். 

 வேடன்  அமர்ந்திருந்த வில்வ மரத்து  இலையை அவனுக்கே தெரியாமல் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது அந்த வில்வ இலைகள் விழுந்து அது வில்வ அர்ச்சனையாக மாறியது அவன் அறியவில்லை. 

 அன்றைய தினம் இரவு முழுவதும் அவனுக்கு தெரியாமலேயே, கொஞ்சம் கூட தூங்காமல் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ததால், அந்த வேடனுக்கு ஈசன் முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் என்கிறது புராணக்கதை.

இந்த காரணத்தால் மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை போக்கி மோட்சத்துடன் நல் அருள் பெறலாம். 

சிவ பெருமான்

இரவு முழுவதும்   திருவாசகம் மற்றும் சிவ புராணம் படித்து வருதல் சிறப்பாகும். இல்லைனெயில் சிவ பெருமானுக்குரிய மந்திரங்களான ஓம் நமச்சிவாய நமக,  ஓம் சிவாய நம மந்திரங்கள் உச்சாடணம் செய்யலாம். 

நாடு முழுவதுள்ள சிவாலயங்களில் பால் அபிசேகம் வில்வ இலை சாற்றல் அனைத்தும் நடைபெறும். அந்த நாளை மக்கள்  திரளாக ஒன்று திரண்டு கொண்டாடுவார்கள்.  மேலும் இந்நாளில் காலை சிவபெருமானுக்கு பூஜை முடிந்தபின் அடுத்த நாள் மாலை தூங்கச் செல்லலாம்.

அறிவியல் முறைப்படி சிவராத்திரி அன்று இரவு தூங்காமல் உடலை நேராக வைத்து அமர்ந்திருந்து வணங்கும் பொழுது பிரபஞ்சத்தில் இருந்து சக்திகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம்.

மேலும் படிக்க: சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன