தைரியமாக கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..!

  • by
how boldly you should fight against corona virus

சைனாவில் பரவத் தொடங்கிய ஒரு வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகரித்தது. இதில் இத்தாலியில் கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் முழுமையாக மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகியது. இதுபோன்ற சூழல் நம் நாட்டிற்கு வராமல் இருப்பதற்கு நாம் கொரோனா வைரஸ் எப்படி எதிர்கொள்வது என்பதை காணலாம்.

பாதுகாப்பு அவசியம்

கொரோனா வைரஸை எதிர் கொள்வதற்கு நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் மார்ச் 31ம் தேதி வரை எங்கேயும் வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களை வெளியே நிற்க வைத்து வழி அனுப்பி வையுங்கள். இதுபோன்று தைரியமான முடிவுகள் உங்களை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

மேலும் படிக்க – யோகி ராம் தேவ் குருவின் கொரானா தடுப்பு அறிவிப்புகள்

வீட்டை சுற்றி சுத்தம் செய்யுங்கள்

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை தவிர்த்து உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் கிருமி நாசினிகள் போன்ற நீரை தெளிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக வீட்டிற்கு வெளியே சென்று வீடு திரும்பவர்களை கை, கால்கள் அனுப்புவதற்காக விட்டு வெளியில் ஒரு தொட்டியை வையுங்கள். வீட்டிற்குள் மீண்டும் வருபவர்கள் ஆடைகளை கழட்டி அதை துவைத்து உள்ளே அனுமதியுங்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன சொல்வார்கள் என்று எண்ணாமல் உங்கள் பாதுகாப்பை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அத்தியாவசிய தேவைகள்

உங்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்ப வருவதாக இருந்தால் போதுமான பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்லுங்கள். உங்கள் கையுரைகள் மற்றும் கால்யுரைகளை வேண்டுமானால் உங்கள் உடல் முழுவதும் மறைத்தவாறு ஏதாவது உடைகளை அணிந்து செல்லலாம். இதைத்தொடர்ந்து தேவையான பொருட்களை பாதுகாப்பான முறையில் வாங்கிக்கொண்டு அதை வீட்டிற்குக் கொண்டு வந்து உங்களை சுத்தப்படுத்தி, நீங்கள் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி அதில் எந்த ஒரு கிருமிகள் தொற்று இல்லாத நிலைக்கு வந்தவுடன் அதை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – குழந்தைகளைத் தாக்கும்  புதுவித  சிலியாக் நோய்.!

வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பு

உங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருந்தால் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். முதியவர்களுக்கு மிக எளிதில் இந்த தொற்று உண்டாகும், அதைத் தவிர அவர்களின் உடல்நிலை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் வல்லமை இந்த கிருமிக்கு உண்டு. அதே போல் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்காமல் வெளியே சென்று விளையாடுவார்கள், அவர்களை உடனே தடுத்து, நிலைமையைப் புரிய வையுங்கள். இல்லை எனில் அவர்களை அடக்கி முடிந்தவரை இரண்டு வாரங்கள் வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பாக இருப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தைரியமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற முடிவுகள்தான் உங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும். எனவே தெரிந்தவர்கள், அன்பு, பாசம், நேசம் என எதற்கும் இனி இடம் கொடுக்காமல், பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உங்கள் இல்லத்தில் அனுமதி கிடைக்கும் இல்லை எனில் அவர்கள் பாதுகாப்பை பரிசோதித்து அனுமதியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன