அக்காலத் தமிழர்கள் தொற்றுகளை எப்படி தடுத்தார்கள்..!

  • by
how ancient tamil people protected them from virus

அக்காலத் தமிழர்கள் எல்லாத்துறையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதிலும் மருத்துவத்துறையில் அவர் சிறந்து விளங்கியுள்ளார் என்பதற்கான பல விதமான சான்றுகள் இருக்கின்றன. இன்றும் சித்த வைத்தியம், ஆயுர்வேதம் மற்றும் உணவு மருத்துவம் என பல விதமான மருத்துவ வகைகளை அவர் பின்தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இதுபோன்று வாழ்ந்த அக்காலத் தமிழர்கள் நோய்த்தொற்றுகள் பாதிப்பில் இருந்து விலகுவதற்கு எந்த வழியை பயன்படுத்தினார்கள் என்பதை காணலாம்.

வேப்பிலை தண்ணீர்

அக்காலத்தில் மட்டுமல்லாமல் இக்காலத்திலும் நம் வீட்டிற்குள் நோய்த் தொற்றுக்கள் ஏதும் இல்லாமல் இருப்பதற்காக வீட்டு வாசலில் வேப்பிலையை கட்டி வைப்பார்கள். அதைத் தவிர்த்து வேப்பிலையை போட்டு ஊறவைத்த தண்ணீரை வீடு முழுவதும் தெரிவிப்பார்கள். இதன் மூலமாக வீட்டைச் சுற்றி உள்ள பூச்சிகள் மற்றும் கிருமிகள் அனைத்தும் அழியும். வாசலில் தொங்க விடும் வேப்பிலையால் வீட்டிற்குள் எந்த ஒரு நோய் தொற்றுகளும் வராது என்று அக்கால தமிழர்கள் நம்பி வந்தார்கள்.

மேலும் படிக்க – தலைவலி வருவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்!!!

மாட்டு சாணம்

இன்றும் பல கிராமங்களில் வீட்டு சுவரை சுற்றி மாட்டு சாணத்தை பூசி இருப்பார்கள். இதற்குக் காரணம் மாட்டுச் சாணத்தில் கிருமிகள் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இதை தடுத்து இதிலிருந்து வெளிவரும் நறுமணம் தொற்றுகள் மற்றும் பூச்சிகளை வீட்டிற்குள் அண்டாமல் பார்த்துக் கொள்ளும். இதனாலேயே வீட்டுச் சுவர்களுக்குள் எந்த ஒரு கிருமிகளும் இருக்கக் கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஒரு சிலர் தாங்கள் இருக்கும் தரையில் கூட மாட்டு சாணத்தை பூசி வைத்திருப்பார்கள். இதனால் வீடு குளிர்ச்சியடைந்து எந்த ஒரு கிருமிகளும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.

மஞ்சள் தண்ணீர்

கோடைக்காலங்களில் தமிழர்களால் விளையாடப்படும் விளையாட்டு தான் மஞ்சள் நீர் ஊற்று விளையாட்டு. இது அத்தை மகள், மாமன் மகள் போன்றவர்கள் மேல் அடித்து விளையாடப்படும் விளையாட்டு. ஆனால் இதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. இக்காலகட்டத்தில் நோய் தொற்றுக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் இது போன்ற விளையாட்டை உருவாக்கி மஞ்சளைக் கொண்டு ஊர் முழுவதும் தெளிக்க வைத்தார்கள். மஞ்சளில் இருக்கும் நோயெதிர்ப்பு பண்பு எல்லாவித தொற்றுக்களையும் அடித்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவியது.

மேலும் படிக்க – வெங்காயத்தின் நன்மையை அறிந்து கொள்ளுங்கள்!!!

துளசி தீர்த்தம்

கோவில்களில் நமக்கு துளசி தீர்த்தம் தருவதற்கான காரணம், எப்போதும் நாம் எந்த ஒரு நோய்த்தொற்றுகள் அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். துளசி தீர்த்தம் மற்றும் துளசி இலை  சாப்பிடுவதன் மூலமாக உண்மை உடலில் உண்டாகும் நோய் தொற்றுகள் தாக்கம் குறையும். நோய்கள் ஏதும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும், இதனாலேயே அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழகத்தில் ஒரு சில பாரம்பரிய வழிகளை பின்தொடர்ந்து வந்தார்கள்.

இயற்கையாகவே நமக்கு கிடைக்கக்கூடிய ஏகப்பட்ட கிருமி நாசினிகளை நாம் பயன்படுத்தி நம்முடைய வீடு மற்றும் சுற்று சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். எனவே அக்காலத் தமிழர்கள் நமக்கு கூறியதை பின்தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையை அழகாக வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன