ஒரு பெண் எதை செய்வதன் மூலம் சிறந்த காதலியாக இருக்க முடியும்

how a girl cab be a better girlfriend and have a happy life?

எப்பொழுதும் ஒரு ஆண் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து தன் காதலை பற்றி அவருக்கு புரிய வைத்து தன் காதலியாக மாற்றுவார்கள் ஆனால் காதலே இல்லாத ஒரு நண்பரிடம் காதல் உணர்வை வளர்த்துக்கொண்டு காதலிக்க முயற்சிக்கும் பெண்கள் சில சமயங்களில் ஒரு சிறந்த காதலியாக இருக்க தவறிவிடுகிறார்கள் இதுபோன்ற பெண்கள் ஒரு சிறந்த காதலியாக இருப்பதற்கான வழிகளை பார்ப்போம்.

உங்கள் துணையை நம்புங்கள் 

உங்கள் ஆண் நண்பரை எப்போதும் நம்புவதன் மூலம் ஒரு நல்ல காதலியாக இருக்க முடியும் அவர்கள் எது செய்தாலும் அது சரியானதாக தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் அதை தவிர்த்து அவர்களை எப்போதும் சந்தேகித்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களை புண்படுத்தினால் உங்களை அவர்களுக்கு பிடிக்காமல் போய்விடும் எனவே ஒரு ஆணை முழுமையாக நம்புவது தான் ஒரு சிறந்த காதலிக்கு அழகு

அவர்களை ஊக்கப்படுத்துங்கள் 

உங்கள் ஆண் நண்பர் எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயல் வெற்றி அடைய அவர்களை ஊக்கப்படுத்துங்கள் பின்பு அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களை கூட பாராட்டி பாருங்கள் நிச்சயம் அவர்கள் உங்கள் மேல் அதிக அன்பை காட்டுவார்கள்.

மேலும் படிக்க – உங்கள் காதலருக்கு அனுப்ப காதல் SMS!

நேர்மையாக இருங்கள்  

எப்போதும் உங்கள்  காதலனிடம் நேர்மையாக இருங்கள் எதை செய்தாலும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் எங்கே சென்றாலும் எங்கு சென்றீர்கள் என்று சொல்லுங்கள் வேறு நபர்களிடம் பேசிக்கொண்டிருந்தால் அவர் யாருடன் பேசினீர்கள் என்று உண்மையைக் கூறுங்கள் இதற்கு பயந்து கொண்டு அதுபோன்ற நண்பர் இருப்பதை மறைத்தால் உங்கள் உறவு நிச்சயம் கேள்விக்குள்ளாகும் எனவே உண்மையாக இருக்கும் பெண்களை ஆண்களுக்கு அதிகமாக பிடிக்கும்

காதலனின் நண்பர்களை மதியுங்கள் 

காதலில் விழுந்து பிறகு ஒரு பெண் தன் காதலன் முழுமையாக தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி தன் காதலனை அவர்கள் நண்பர்களிடம் சேர்ந்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் எப்போது ஒரு பெண் நண்பர்களுடன் தன் காதலனை வெளியே செல்ல அனுமதித்தால் என்றால் அந்த பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் இவர்களே ஒரு சிறந்த காதலியாக விளங்குகிறார்கள்.

மேலும் படிக்க – தங்களது காதலனுக்காக பெண்கள் அர்ப்பணிக்கும் பாடல்கள்

பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடுங்கள் 

உங்கள் காதலனுக்கு எது பிடிக்கவில்லையே அதைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது அது மட்டுமில்லாமல் அவரை முழுமையாக நம்பி அவர்களின் எதிர்காலத்தை பற்றி அவ்வப்போது ஆலோசிக்கும் பெண்கள் தான் ஒரு சிறந்த காதலியாகும் அவர்களுக்கான ஒரு தனி இடத்தைக் கொடுத்து அவர் வாழ்க்கையில் உயர்வதற்கு நீங்கள் ஒரு தூணாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் சிறந்த காதலியாகும்.

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருக்கும் இனிய காதல் வசனங்கள்!

பெண்கள் எப்போதும் பயத்தில் இல்லாமல் தன் காதலனை முழுமையாக நம்பி அவர்களுக்கென தனி சுதந்திரம் கொடுத்து அவர்களை உயர்த்த எடுக்கும் செயல்களைப் பொறுத்தே ஒரு பெண் சிறந்த காதலியாக இருக்கிறானா என்று பார்க்க முடியும் எனவே இதுபோன்று நீங்களும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு என தனி இடத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்து அவர்கள் வாழ்க்கை துணையாக எப்போதும் இருந்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் ஒரு சிறந்த காதலியாகும்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன