சர்க்கரையை விட தேன் சிறந்ததா..!

  • by
honey is better than sugar

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்புகள் அதிகமாக உள்ள பலகாரங்களை விரும்பி சாப்பிடுவார்கள். வயது வரம்பு இல்லாமல் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி இனிப்பு பண்டங்களை எல்லோரும் வாங்கி சாப்பிடுவார்கள். இத்தனை ருஷி வாய்ந்த இனிப்பில் இரண்டு வகையான முறையில் சுவையை சேர்க்கிறார்கள், ஒன்று சர்க்கரையைக் கொண்டு, மற்றொன்று தேனை கொண்டு.

சக்கரை அளவு

நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் முடிந்தவரை சர்க்கரையை பயன்படுத் தாமல் உணவுகளை அருந்துவார்கள். இதுபோல் இவர்கள் எப்போதாவது ஒரு முறை இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வார்கள், அப்படி இருக்கையில் நீங்கள் சர்க்கரையை ஒப்பிடுகையில் தேனை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சக்கரையில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கிறது. அதுவே தேனில் இருபது சதவீதம் குறைவாக உள்ளது. அதேபோல் சக்கரையில் புரோபோஸ் கண்டெண்ட் அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க – ஊரடங்க்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு..!

உடல் எடையை அதிகரிக்கும்

நீங்கள் சர்க்கரையாக இருந்தாலும் சரி தேனாக இருந்தாலும் சரி, இரண்டையும் எப்போது நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்கிறார்களோ அப்போதிலிருந்து உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து கலேரிகளின் தாக்கத்தால் உங்கள் உடல் எடை அதிகரித்துவிடும்.

தேனின் நன்மைகள்

இயற்கை மூலமாகவே கிடைக்கக்கூடிய மகத்தான இனிப்பு உணவு தான் தேன். இது அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது அதைத் தவிர்த்து இதில் அமினோ ஆசிட், அண்டி ஆக்சைடு, என்சைமன், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்பலை தடுப்பதற்காக தேனை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். தேன் உடனடியாக ஜீரணமாகும் தன்மையை கொண்டது அதை தவிர்த்து அலர்ஜி போன்ற பிரச்சினைகளை தேன் சாப்பிடுவதினால் குறைகிறது.

தேனை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமாக இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே போல் உடல் எடை அதிகரிக்கும், மற்றும் இருதய பிரச்சினையையும் உண்டாக்கும்.

சர்க்கரையின் வகைகள்

சர்க்கரையில் ஏராளமான வகையில் உள்ளது அதில் மக்கள் அதிகமாக பயன்படுத்திய கூடியது கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெள்ளை சக்கரையைதான். அதைத் தவிர்த்து நாட்டுச்சக்கரை, பொடி சர்க்கரை, சர்க்கரைத் தன்மை குறைவாக உள்ள சக்கரை என ஏராளமான வகைகள் உள்ளது. ஆனால் தேனுடன் ஒப்பிடுகையில் சக்கரையில் ஊட்டச்சத்து என்பது கிடையாது.

மேலும் படிக்க – வியாதிகளை தீர்க்கும் சக்தி கருஞ்சீரகத்திற்க்கு உண்டு..!

சர்க்கரையில் உள்ள பிரச்சனை

சக்கரை விலை குறைவாகக் கிடைக்க கூடியது, ஆனால் இதை உட்கொள்வதன் மூலமாக உங்களுக்கு நீரிழிவு பிரச்சனை, இருதய பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிக்கும் பிரச்சினைகள் உண்டாகும். எனவே நாம் சக்கரையை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து தேனை ஒப்பிடுகையில் இது ஜீரணமாவதற்கு ஏராளமான நேரத்தை எடுத்துக்கொள்ளும். பற்கள் பிரச்சினையை உண்டாக்கும் தன்மை சர்க்கரையில் அதிகமாக உள்ளது.

சக்கரையை ஒப்பிடுகையில் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆனால் சர்க்கரையை விட தேனின் விலை அதிகம். அதைத் தவிர்த்து தேனில் இனிப்புசுவை சற்று குறைவாகவே இருக்கும். இதன் மூலமாக நாம் அதிக அளவிலான தேனை பயன்படுத்தும் சூழல் ஏற்படும். எனவே உங்கள் எதிர்காலம் ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்றால் முடிந்தவரை இனிப்பு பொருட்களை குறைவாக பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன