முகத்தில் உடனடி பொலிவை பெறுவதற்கு இதை செய்யுங்கள்.!

முகத்தில்

பெண்களின் தன்னம்பிக்கை வளர்வதற்கு அவர்களின் உடையைப் போலவே அவர்களின் முகப்பொலிவும் மிகவும் அவசியம். இதைப் பெறுவதற்காக அவர்கள் அதிகமான பணங்களை செலவு செய்து அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை வீணாக்குகிறார்கள். அதை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் அவர்களின் முகப்பொலிவு பெறுவதற்கான வழிகளை இந்த பதிவில் காணலாம்.

சருமத்தின் பொலிவை தக்க வைக்கும் முறை

ஒருவரின் முகத்தின் நிறம் என்பது அவர்களின் சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை பொருத்தது. பொதுவாக யாருக்கு மெலனின் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் கருப்பாக இருப்பார்கள், அதுவே குறைவாக இருப்பவர்கள் வெண்மையாக இருப்பார்கள். எது இருந்தாலும் சூரிய ஒளி, மாசு, அழுக்கு போன்ற போன்றவைகளினால் உங்களை சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்களுக்கு கீழ் கருவளையம், முகப்பரு, காயங்கள் உண்டாகிறது.

இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கு நாம் சன்ஸ்கிரீன் போட வேண்டும். செயற்கை மேகங்கள் இல்லாமல் இயற்கை சன்ஸ்கிரீன் போடமுடியும். எனவே நாம் எங்கேயாவது கிளம்புவதற்கு முன்பு உடல் முழுவதும் ஆலுவேராவை தடவிக் கொள்வது நல்லது. இது உங்கள் சருமத்தில் ஒரு பாதுகாப்பு படலம் போல் படர்ந்து சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கிறது.

மேலும் படிக்க – இளஞ்சிவப்பு இதழுக்கு இது அவசியமுங்க

பொலிவிற்கான இயற்கை வழிகள்

யாக்கர்ட் மற்றும் கடலை மாவு இரண்டையும் ஒன்றாக நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் சருமம் உடனடி பொலிவை பெரும். யாக்கர்ட் மற்றும் கடலைமாவில் இரண்டிலும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்னை உள்ளது. எனவே இது உங்கள் சருமத்தின் உடனடி பொலிவை பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்துகிறது.

பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிதளவு தேன் சேர்த்து அதை முகம் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

மேலும் படிக்க – கோதுமை சிறந்த ஸ்கிரப்பர் எப்படி என பாக்கலாம் வாங்க.!

மற்ற சரும பிரச்சனைகள் 

ஒரு சிலரின் தருமம் வெவ்வேறு நிறமாக இருக்கும். அதைப் போக்குவதற்காக சருமத்தின் நிறம் சமநிலையாக இருக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது. இதை உங்கள் சருமம் நிறம் இறந்த பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். இதன் மூலமாக சில நாட்களிலேயே உங்கள் சருமம் சமநிலையான நிறத்தை பெறும்.

கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேன் தடவ வேண்டும். இதனால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மிக விரைவில் அகன்றுவிடும். அதேபோல் உடனடி பொலிவை பெறுவதற்கு சிட்ரிக் அமிலம் இருக்கும் எலுமிச்சை பழத்தை முகம் முழுக்க நன்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு நீரில் கழுவினால் உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவை தரும்.

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து முகம் முழுக்க தடவவேண்டும். அதேபோல் ஆலுவேரா ஜெல்லை முகம் முழுக்க தடவவேண்டும். இவைகள் இரண்டையும் சேர்த்து முகம் முழுக்க தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் விலகி முகத்தை தெளிவாக மாற்றும்.

மேலும் படிக்க – மெலனின் நிறமி பாதிப்பை சரி செய்து சரும பளபளப்புக்கு இதை பயன்படுத்துங்க.!

இயற்கை வழியே சிறந்தது

உங்கள் சரும அழகை மீண்டும் பெறுவதற்கு நீங்கள் செயற்கையாக தயாரிக்கப்படும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை வழியில் வீட்டிலேயே இதுபோல் செய்யப்படும் பேஸ் பேக்கை செய்து உங்கள் முகம் முழுக்க தடவி இறந்த உங்களின் நிறம் மற்றும் அழகை பெறுங்கள். இது போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் மூலமாக பெரும் அழகு தான் நிரந்தரமானது என்பதை உணர்ந்து பணத்தை வீணாக்காமல் நேரத்தை சேமித்து இதுபோன்ற முக அழகை பெரும் செயல்களை வீட்டிலேயே செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன