அஜீரண கோளாறு தீர்க்கும் வீட்டு வைத்தியம்

  • by

ஜீரண கோளாரானது இன்றைய மாறிவரும் உணவு பழக்கங்களில்  பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கல்லை தின்றாலும் கரையும் உடல் நம்முடையது ஆகும்.  ஆனால் உடலின் இயற்கை தன்மையை பெருவாரியாக நமது முறையற்ற வாழ்கை முறையினால் இழந்துவிட்டோம். 

ஜீரண கோளாறு காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகின்றது அது உடலின் இயற்கைத்  தன்மையை பாதிக்கச் செய்கின்றது. அது நம்மை முக்கியமாக பாதிக்கச் செய்கின்றது.  உடலின் தன்மையை நாம் காத்துக் கொள்ள இது போன்ற உடல் உபாதைகளில் இருந்து பாதுகாக்கலாம். 

அஜீரணக் கோளாறு நிவாரணி

அஜீரண கோளாறுக்கு மருந்துகள்:

வீட்டிலுள்ள பொருட்களை நாம் முறையாக எடுத்துக் கொள்ளுதல் சிறப்பாகும். கறிவேப்பிலை, உலர்ந்த நில அவரை  இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி வைக்க வேண்டும். அந்த பொடியை தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால்  பெருவயிறு மறையும். மலச்சிக்கலும் தீரும்.

மேலும் படிக்க – பர்ஃப்யூம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலையை எடுத்து அதனை நன்றாக உளர்த்தி கால் கிலோ, சுக்கு, மிளகு, சீரகம், உப்பு – தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து சாப்பிடுதல்  வேண்டும். கருவேப்பிலைப் பொடியை தினமும் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மந்தம், மலக்கட்டு, சர்க்கரை நோய் போன்ற  நோயகள் மாயமாய் மறையும். 

வெந்தய கீரை:

வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து சட்னியாகச் செய்து சாப்பிட்டு வந்தால்  தீராத மலச்சிக்கல் மாயமாகும். 

வெந்தயக் கீரையுடன் சிறிது ஓமம் கலந்து அரைத்து இரவில் சாப்பிட்டால் காலையில் மலம் தாராளமாகக் கழிந்து, வயிற்று உப்பிசம் குளிர்ச்சி கிடைக்கும். 

சீரகத்தை இரவில் ஊரவைத்து உண்டு வந்தாலும் உடல் பலமாகும். ஜீரணத்தன்மையை சரி செய்யும்.

கரிசாலை காடுக்காய்:

கரிசலாங்கண்ணிக் கீரை மற்றும் இரண்டு கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடு குறையும் ஜீரண உறுப்புகள் சீராகும். 

அஜீரணக் கோளாறு நிவாரணி

கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிடுங்கள்.  
கொடிப்பசலைக் கீரை, கொத்தமல்லி விதை, சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலச்சிக்கல்  காணமல் போகும். 

மேலும் படிக்க – கம்பில் இருக்கும் அதீத நன்மைகள்..!

முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கத்தைச் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும். மண்ணிரல் பலமாகும்.

திரிபாலா:

திரிபாலாவில் தீராத வியாதிகள் அனைத்தும் குணமாகும். திரிபாலா பொடியை வீட்டிலேயே செய்யலாம். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவை காய்ந்தது பொடி செய்து வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் திரிபாலா பொடியை 1 ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வர மலச்சீக்கல் சரியாகும். உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியாகும். உடலில் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன