வீட்டிலே செய்யுங்க கிருமி நாசினி சுத்தப்படுத்தி!

  • by

 உலகம் முழுவதும் கொல்லை  நோயான கொரனா குறித்த தகவல்கள் நம்மை   பீதியில் ஆழ்த்துகின்றது. அதற்கு எங்கு சென்றாலும் கை கழுவ வேண்டும், முகம், வாய்பகுதிகளை அடிக்கடி  தொடக்கூடாது. தும்மல், இருமல் வரும்பொழுது அதனை முகம் மூடி செய்ய வேண்டும் என்கின்றனர். 

சுத்தப்படுத்தி: 

சுத்தப்படுத்தி என்பது நமது கண்களுக்கு தெரியாமல் இருக்கும் அழுக்குகளை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தப்படுத்தியானது கிரிமி நாசினியாக இருக்க வேண்டும். இது அழுக்கு, மாசை நீக்க கூடியதாக இருக்க வேண்டும். கெமிக்கல்களின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும். அது குறித்து நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். எந்தளவிற்கு நாம் நமது பணியை முழுமையாக செய்கின்றோம், சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் இருக்க வேண்டும். 

சுத்தப்படுத்தியை நாம்  கெமிக்கல்கள் நிறைந்தது வாங்கி பயன்படுத்துகின்றோம். அவை அனைத்தும் சந்தையில் பிரசித்தி பெற்றவை தான் அதில் எந்த கருத்தும் இல்லை. ஆனால்  அதனை தேய்த்து நாம் கைகளை கழுவ வேண்டும். ஆனால் சானிட்டரிசை எல்லாம் எதுக்கு என்று யோசியுங்கள் அதிலுள்ள அமிலத்தன்மையை அறியாமல் அதனை நாம்  கைகளில் முன்னும் பின்னும் தடவுகின்றோம் அதில் என்ன இருக்கின்றது. அதனால் இதில் என்ன புதுமை இருக்கின்றது என்று கேட்காதீர்கள். இதை எழுதும் எனக்கு என்ன தெரியும் மருத்துவ உலகம்  என்று கேட்காதீர்கள், யோசியுங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள இன்கிரியடன்ஸ் எல்லாம் எப்படி பட்டது என யோசித்த் செயல்படுங்கள். 

மேலும் படிக்க: உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரசும், ஆயுதமாக மாறியுள்ள சோப்பும்!

குறைந்த நுரை வரும் சிறந்த கிருமி நாசினியான பூந்திக்காய் மற்றும் எலும்பிச்சை சாறு கலந்து  நீங்களே வீட்டில் தயாரிக்கலாம் இது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பூந்திக்காயில் அழுக்கு, மாசை நீக்கும் நீங்கள்  கேட்கும் நுரையும் வரும் ஆனால் அது குறைவாக அளவாகத்தான் இருக்கும் சுத்தமானதாக இருக்கும். இதனுடன் வெட்டி வேரை காயவைத்து பொடியாக்கினால் சுகந்த நறுமணமும் கிடைக்கும். 

கெமிக்கல்கள் குறைவு:

கெமிக்கல்கள் குறைவாக பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம்  பொங்கும் நீரை வைத்து கைகழுவுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இது உடலுக்கு ஆரோக்கியம் காக்க  முடியும். பூந்திக்காயை கொட்டை நீக்கி 8 மணி நேரம் ஊர வைத்து அதனை நன்றாக கொதிக்க வைத்து பாட்டிலில் சேகரித்து வைக்கவும் அதனுடன் வெட்டி வேரையும் நீரில் கொதிக்க வைத்து ஒரு அரோமா கிடைக்கும். அதனை நாம் எளிதில்  கைகழுவ பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது குறைவான நுரைவளம் கொண்டாலும் இதில் உள்ள இயற்கை அரோமா மற்றும்  தூய்மைப்படுத்தும் குணம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை பாதுகாத்து கொடுக்கும்.  

இதுபோல் வீட்டில்  தயாரித்து பயன்படுத்துங்கள்  மாசை விரட்டுங்கள் நோய் தொற்றை  தடுக்க முடியும். சிகைக்காய், பூந்திக்காய் 8 மணி நேரம் அரைலிட்டர் தண்ணீரில்  ஊர வைத்து, வேப்பிலை, துளசி இலைகள் சேர்த்து அதனை காய்ச்சி பாட்டிலில் சேகரித்து தினமும் கைகழுவ பயன்படுத்தலாம்.  இவை எல்லாம் கிருமி நாசினியாக இருக்கும். கிருமி தாக்கத்தை தடுக்கும். இதனை நாம் குளிக்கும் நீரில் ஒரு மூடி ஊற்றியும் குளிக்கலாம். 

கிருமிகள்:

உங்கள் நீரில் உள்ள கிருமிகள்  தாக்கம் குறைய கல் உப்பு கைபிடி எடுத்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்து வரவும். இது தண்ணீரில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கவும்.  பெண்கள் தாங்கள் குளிக்கும் நீரில் கல் உப்பு, சோடா உப்பு, கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கலந்து குளித்து வந்தால் எந்த மாசும் உங்களை அண்டாது.  

துவைக்கும் நீரில்  கல் உப்பு கொஞ்சம் சேர்த்து  டிட்டெர்ஜெண்ட் போட்டு ஊர வைத்து  துவைத்தால் துணிகளில் இருக்கும் வியர்வை மாசு அனைத்தும் நீங்கும். அழுக்குகள் விரைவில் போக்கும்.  இதுக்கெல்லம் எவ்வளவு செலவாகும் என கணக்குப் போட்டால் சிக்கண செலவில் சிறப்பாக வாழ முடியும். 

மேலும் படிக்க: பொது இடங்களில் எச்சில் துப்புவதினால் ஏற்படும் பிரச்சினைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன