கூந்தல் ஆரோக்ய மென்மைக்கு கேரட் ஹேர் பேக்

  • by

கண்ணுக்கு மை அழகு,  கார்குழல் கூந்தல் அழகிற்கு  அடர் வனத்தை உவமையாக கூறலாம். கூந்தல் அடர்ந்து காடுபோல் படர்ந்து இருக்கும் பொழுது அதற்கான பராமரிப்பும்  முறையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

 ஒரு பெண்ணோ அல்லது பையனோ அவர்களின் தோற்றத்தில்  அழகு சேர்ப்பதில் தலை மற்றும் அதில் இருக்கும் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒன்றாகும்.  தலைமுடியைப் பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம் அவை மிகவும் உறுதியானதாக இருக்க மெனக்கெடுகின்றோம்.  கூந்தல் அடர்த்தியுடன், நீளமாக, மென்மையுடன் கருமைய இருக்க வேண்டும் என பல்வேறு வழிமுறைகளில் கூந்தல் அழகை நாம் பராமரித்து வருகின்றோம். 

கூந்தல் பராமரிப்பு:

நமது கூந்தலின் அனைத்து  பராமரிப்புகளிலும், எல்லா விதத்திலும் உங்கள் முடியை பராமரிக்க ஒரு அற்புத பொருள் உண்டு, அதுவே கேரட் ஆகும். அதனை வைத்து உங்க கூந்தலுக்கு மிகுந்த நன்மையைத் தரும்  முறையை தெரிந்து கொண்டால் போதுமானதாகும். 

மேலும் படிக்க – இயற்கை எண்ணெய்யினால் நம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்.!

முடி பராமரிப்பு வளர்ப்புக்கு  முக்கிய நன்மைகளை கூந்தலுக்கு தரும் சாத்தியங்களைக் கொண்டதாக கேரட் இருக்கின்றது.  
நாம் பயன்படுத்தக்கூடிய  பல்வேறு கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் கேரட் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்படி வெளிதயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே கேரட் கொண்டு நமது கூந்தல் அழகைப் பராமரிக்க முடியும்.

பல்வேறு செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயங்களுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்களை சந்தையில் வாங்குவதை விடுத்து வீட்டிலேயே நற்பதமான கேரட் கொண்டு தயாரிக்கும் ஹேர் பேக் அல்லது ஹேர் மாஸ்க் உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு கேரட் பயன்படுத்தி செய்யும் இந்த தீர்வுகளை முயற்சித்துப் பாருங்கள். கேரட்டுடன் இதர மூலப்பொருட்களை சேர்த்து உங்கள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவோம் வாருங்கள்!

கேரட் மற்றும் வாழைப்பழத்தின்  ஹேர் மாஸ்க் எப்படி செய்யலாம் என்பதை விளக்கியுள்ளோம். 

மேலும் படிக்க – சைனிங்கான கூந்தல் பராமரிக்க சாதுரிமாக இருங்க

தேவையான பொருட்கள்:

* கேரட் – 1

* வாழைப்பழம் – 1

* யோகர்ட் – 2 மேசைக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

 கேரட், வாழைப்பழம், யோகார்ட் ஆகியவற்றை  ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும்.  உங்கள் உச்சசந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி பார்த்து கொள்தல் அவசியம் ஆகும். தலையில் முழுமையும்   தடவிவிட்டு அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.இது கூந்தலை பட்டுபோன்ற மிருதுவாக்கி தேவையான போசாக்கினை வழங்கி ஊட்டமூட்டுகின்றது. 

கேரட் ஆயில்:

கேரட்டை கொண்டு தயாரிக்கும் கேரட் எசன்ஸ் ஆயில் கிடைத்தால் அதனை  தலைக்கு தேய்த்துவரவும். கேரட்டை நன்றாக விழுதாக தண்ணீர் சேர்க்கல் அரைத்து அதனை தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு மிதமான தீயில் காய்ச்சவும். காய்ச்சியபின் எண்ணெய் நிறமாறிவரும்   கேரட் எண்ணெயில் நன்றாக வெந்து நிறமாறிவரும் அதனை கண்ணாடிப் பாட்டிலில் சேர்த்து வைத்து தலையில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானதாகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன