மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

  • by

மாதக் கடைசி வந்துவிட்டது கைகளில் காசு முடிந்திருக்கும். அடுத்த எப்படி பட்ஜெட் எப்ப்படு போடுவது என்பது குறித்த முறையான அட்டவணை போட்டு  வீட்டை நிர்வாகம் செய்யலாம். திட்டமிடும் செய்து வரும் பொழுது செலவுகள் குறைத்து சேமிப்பை அதிகம் படுத்தும் முறை ஆகியவை அனைத்து திட்டமிட்டு செயல்பட்டு வருவது சிறப்பாகும். 

வாழ்கையில் நாம் சம்பாதிக்கும் அனைத்தும்  தாறுமாறாக செலவு ஆகின்றது என்ற கவலையுடன் நாட்கள் நகர்கின்றதா உங்களுக்கான அருமையான வழிகள் இங்கே கொடுத்துள்ளோம். 

வீட்டு பட்ஜெட்

அட்டவணை போடுங்க: 

அட்டவணை போடுங்க  முக்கியமான தவிர்க்க முடியாத செலவுகள் எது என அட்டவணை போட்டு செயல்படுங்க .  கிராசரி செலவுகள், வீட்டுக்கு தேவையான அடிப்படை செலவுகள் ஆகிய அனைத்தும் பட்டியலிட்டுங்கள். 

மேலும் படிக்க: நாள் முழுவது சுறுசுறுப்பாக தேனீ போல் இயங்க இதை செய்யுங்க பாஸ்.!

தவிர்க்க முடியாத செய்ய வேண்டிய அவசிய செலவை மட்டும்  செய்யுங்கள் அது நமக்கு தேவையானது ஆகும். வீட்டு பட்ஜெட் பக்காவா போடும் பொழுது செலவை சமாளிக்க முடியும்.. வீட்டு செலவு, மருத்துவ அவசர செலவு மற்றும் பிள்ளைகளுக்கான  ஒரு பங்கு தொகை. இந்த மாதத்தில் வர போகும் கோவில் திருவிழா போன்றவை குறித்து காலாண்டர் வைத்து பட்ஜெட் போட்டு வாங்குங்கள். 

வீட்டு பட்ஜெட்

காய்கறிகளுக்கான செலவுகள்: 

பட்ஜெட் போட்டு செலவு  செய்யும் பொழுது சிக்கணமாக  செலவழிக்கலாம் ஆனால் கஞ்சத்தனம்  செய்யாதீங்க. காய்கறிகள், பழங்கள் போன்றவை  வாங்கும் பொழுது சீசனுக்கு ஏற்றமாறி வாங்கி செலவு செய்யுங்கள். 

வாடகை, ஈஎம்ஐ:

மாத வீட்டு வாடகை ,  வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்த ஈஎம்ஐ,  கார் லோன் போன்ற செலவுகளை செய்யும் பொழுது அதனை நாம்  திட்டமிட்டு செகவு செய்தல் அவசியம் ஆகும். வருமானத்திற்கு ஏற்ப செலவை திட்டமிட்டு வாங்க வேண்டும்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் தொழில் துறையில் சாதித்த பெண் மற்றும் அவர்களின் கதை.!

உணவு மற்றும் பெரியோர்களுக்கான பராமரிப்பு செலவுகள், மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செலவை பட்டியலிட்டு செலவு செய்வது அவசியம் ஆகும். 

வீட்டு பட்ஜெட்

இளைஞர்கள்:

இளைஞர்கள் திருமணம் ஆகாதவர்கள் வேலைக்கு போகும் பொழுது வீட்டுகூ என ஒரு தொகை ஒதுக்கீடு செய்துவிட்டு  உங்களின் அடிப்படை தேவைகளுக்கான தொகையை ஒதுக்கீடு செய்தபின் சேமிப்புக்கு என பணம் ஒதுக்குங்கள். திருமணத்திற்கு பின் அவை உதவுவதாக இருப்பது நலம் பயக்கும்.

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருந்துகிட்டே இருக்கு என புலம்பாதீங்க ஆடம்பர செலவை  விடுத்தால் அவசியமான செலவை செய்ய முடியும். உடல் ஆரோக்கியம். அழகு, பராமரிப்பு, குடும்ப பொறுப்புணர்வு என திட்டமிட்டு செலவு செய்வது சிறப்பு  தரும். 


மேலும் படிக்க: வேலை தேடும் ஆண்களுக்கு இது அவசியம்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன