தமிழக அரசு பட்ஜெட் வெளியிட்ட பின் நாம் எப்படி செயல்பட வேண்டும்?

  • by
Home Budget As Per Tamil Nadu Govt budget

சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சுமார் மூன்று மணிநேரம் வரை இந்த நிதி ஆண்டில் உரையை வாசித்தார். இருந்தாலும் அதில் 70% மேற்பட்ட மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

தொழிலதிபர்களுக்கான ஆண்டு

தொழிலதிபர்களை கருத்தில் கொண்டு இந்த நிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்கள், என பலரும் சொல்லி வந்தாலும் இந்த அறிக்கையின் மூலமாக தொழில் செய்பவர்கள் பெரிதாக பாதிக்க உள்ளார்கள். அவர்களின் வரி விகிதத்தை குறைத்தாளும் அவர்களின் வருமான அளவு உயராமல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நாளிலேயே சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகள் குறைந்துள்ளது. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை பற்றி சிந்தித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – பாக்கெட் நிறையுமா நம்ம பட்ஜெட்டினால்..!

தமிழக அரசு

இந்த பட்ஜெட்டின் எதிரொலியாக தமிழக அரசு என்னென்ன திட்டங்களை செய்யப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இருந்தாலும் நம் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சி செய்வார்கள். இதை தவிர்த்து நாம் சம்பாதிக்கும் வருமானத்திலிருந்து தேவையான வரிகளையும் எடுத்துக் கொள்வார்கள். நம் உழைக்கும் பணத்தில் இருந்து 15 சதவீதம் வரியாக செலுத்துவதினால் மக்களின் பணப்பரிமாற்றம் குறைந்து வருகிறது. எனவே மக்கள் புதிதாக பொருட்கள் அல்லது நிலங்கள் வாங்க தயங்குகிறார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அன்றாடத் தேவைகளுக்கே சரியாக செல்வதினால் ஆடம்பர செலவுகளை குறைத்து வருகிறார்கள். இதனால் வரிகள் வரத்தும் குறைந்துள்ளது.

யாருக்கு அதிகமான பாதிப்பு

அரசு வரிகளை அதிகரிக்க, அதிகரிக்க நமது மக்களின் செலவுகள் குறைந்து கொண்டே செல்லும். இதனால் பொருளாதாரம் மேலும் விழிர்ச்சி அடையும். நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருப்பது நாம் செய்யும் செலவுகள் தான். ஆனால் அது நம் நாட்டிற்கு வராமல் மற்ற நாடுகளுக்கு செல்வதினால் நம்முடைய வளர்ச்சி தடைபடுகிறது.

உற்பத்தியில் எந்த நிறுவனம் அதிக லாபத்தை பெறுகிறதோ அதற்கு நிகரான இந்திய நிறுவனத்தை தொடங்கினால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். நாம் செலவு செய்யும் மிகப்பெரிய தொகைகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்வதினால் நம்முடைய மொத்தம் பணங்களும் மற்ற நாடுகளில் புழக்கத்தில் இருக்கின்றன. அதை தவிர்த்து அவர்கள் கொடுக்கப்படும் வரித் தொகையை வைத்துதான் நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே தொழில் தொடங்குவதாக இருந்தால், தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கும் தொழிற்சாலைகளை தொடங்குவதே பொதுவாக இருக்கும். இதன் மூலமாக இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களின் வியாபாரம் அதிகரிக்கும். தேவையில்லாமல் சீனா மற்றும் அமெரிக்கா பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இருக்காது.

மேலும் படிக்க – இந்திய பாதுகாப்புத்துறையில் பட்டாசு கிளப்பும் பாரதப் பெண்கள்..!

சரியான திட்டங்களைத் தீட்டுவீர்கள்

இதுபோன்ற இக்கட்டான நிதி ஆண்டில் தன் குடும்பத்தை எப்படி சரியாக வழிநடத்த வேண்டும் என்பதை காணலாம். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்றால் உங்கள் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும். எளிதில் கெட்டுப் போகும் உணவுகளை வாங்காமல், பல நாட்கள் வீட்டில் வைத்து பயன் தரும் உணவுப் பொருட்களை வாங்குவதன் மூலமாக நீங்கள் அதிக பணத்தை சேமிக்கலாம். வீட்டிற்கு தேவை என்கிற பொருட்களை வாங்குங்கள். அதை தவிர்த்து தேவையில்லாத உபகரணங்களை மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதீர்கள். அதே போல் ஏதேனும் இயந்திர பொருட்கள் பழுதடைந்தால் அதை பகுதி நீக்கம் செய்வது சிறந்தது, அதை தவிர்த்து புதிதாக வாங்குவது முட்டாள்தனம்.

நம்முடைய நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு குடிமகனும் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் வங்கிகளில் பணத்தை சேமியுங்கள் தேவையில்லாமல் பணத்தை விரயமாக்க வேண்டாம். வருமான வரி, சொத்து வரி என எல்லா வரிகளையும் சரியாக செலுத்துங்கள். அதை தவிர்த்து வேலைக்கு செல்வதை விட ஏதேனும் தொழில் தொடங்குங்கள், அது சிறியதாக இருந்தாலும் நிரந்தர வருமானம் வரும்படி இருக்கிறதா என்று பாருங்கள். இது போன்ற வழிகளை சரியாக கடைபிடித்தால் மிக விரைவில் இந்திய மக்கள்களினால் இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன