7 நாட்களில் உங்கள் எடையை குறைக்கமுடியும்

ho wto lose your body weight in just seven days and stay fit

நம் எடையை குறைப்பதற்கு நமக்கு போதுமான நேரங்கள் கிடைப்பதில்லை நாம் அவசரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அனைத்தையும் மிக விரைவில் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் வருகின்றனர் இப்படி இருக்கையில் நம் உடல் எடையை ஏழு நாட்களில் மிக விரைவில் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்

முற்றிலும் தவிர்க்க வேண்டியவை

குளிர்பானம் மற்றும் சோடாக்கலை குடிக்கக்கூடாது பின்பு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் மதுவை தொடவே கூடாது இதை நீங்கள் பின் தொடர்ந்தால் மட்டுமே ஏழு நாட்களில் உங்கள் எடையை குறைக்க முடியும்.

மேலும் படிக்க – காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற சிறந்த உணவுகள்..!

நாள் 1

முதல் நாள் நாம் அதிக அளவில் பழங்களை சாப்பிட வேண்டும் முடிந்தவரை பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் இதில் வாழைப்பழத்தில் சேர்க்க வேண்டாம் பின்பு 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

நாள் 2

இந்த நாளில் நீங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும் உங்களுக்கு வேண்டுமென்றால் இதை வேகவைத்து சாப்பிடலாம் ஆனால் சுவைக்காக உப்பு சேர்க்கக்கூடாது நாம் உருளைக்கிழங்கை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் அதன்பிறகு சாப்பிட்டால் அது உங்கள் எடையை குறைக்கும் செயலை தடுத்து விடும் பின்பு 10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்

நாள் 3

காய்கறிகள் மற்றும் பழங்களை கலந்து சாப்பிடவேண்டும் இதில் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளக்கூடாது பிறகு 10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க – உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

நாள் 4

இந்த நாளில் நாம் 6 முதல் 8 வாழைப் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு கொழுப்பு நீக்கப்பட்ட பாலை அருந்த வேண்டும்

நாள் 5

500 கிராம் அசைவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது பிரவுன் அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை ஒரு கப் சாப்பிட வேண்டும் பின்பு 6 தக்காளி அல்லது தக்காளியால் செய்யப்பட்ட சூப் அருந்த வேண்டும்

நாள் 6

500 கிராம் அசைவம் அல்லது இரண்டு கப் பிரவுன் அரிசியை எடுத்துக் கொள்ளலாம் பின்பு உருளைக் கிழங்கை தவிர்த்து எல்லா காய்கறிகளையும் இந்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க – அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

நாள் 7

பழுப்பு அரிசி சாதம் பழம் காய்கறிகள் என எல்லாவற்றையும் கலந்து சாப்பிட வேண்டும் இந்த நாளில் அசைவத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது

மேலே குறிப்பிட்டுள்ளதை அனைத்து நாட்களும் சரியாக செய்தால் நிச்சயம் உங்கள் எடையிலிருந்து குறைந்தபட்சம் 7 கிலோ குறையும் மறக்காமல் மேலே குறிப்பிட்டிருப்பது போல் இனிப்புகள், உப்பு மற்றும் உடல் ஆரோக்யத்தை தடுக்கக் கூடிய எந்த உணவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன